Tax Saving Tips: நீங்கள் இதுவரை வரிச் சேமிப்பு எதுவும் செய்யவில்லையா? இன்னும் உங்களுக்கு மூன்று மாதங்கள் உள்ளன. இந்த மூன்று மாதங்களில் முதலீடு செய்தால், வரியிலிருந்து தப்பிக்கலாம். ஒரு நிதியாண்டில் வரிச் சேமிப்புக்கு உங்களுக்கு மார்ச் 31 வரை மட்டுமே அவகாசம் அளிக்கப்படுகின்றது. இப்போது ஜனவரி தொடங்கிவிட்டது. அத்தகைய சூழ்நிலையில், கடைசி நேரத்தில் செய்யபப்டும் சேமிப்பு உங்களுக்கு வரி கழிக்கப்படாமல் பாதுகாக்கும்.
வரியை சேமிக்க நல்ல திட்டங்களை பற்றி ஆராயும் நபராக நீங்கள் இருந்தால், இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும். உங்கள் வருமானத்தில் பெரும் பகுதியை வருமான வரியிலிருந்து சேமிக்கக்கூடிய சில திட்டங்களைப் பற்றி இங்கே காணலாம்.
தேசிய ஓய்வூதியத் திட்டம் (National Pension Scheme)
தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) வரிச் சேமிப்புக்கான சிறந்த வழியாக உள்ளது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், வருமான வரியின் பிரிவு 80C மற்றும் 80CCD(1B) இன் கீழ் ரூ.50,000 கூடுதல் விலக்கு பெறலாம். இது ஒரு ஓய்வூதியத் திட்டமாகும். இதில் நீங்கள் வரி விலக்குடன் ஓய்வூதிய பலனையும் பெறுவீர்கள்.
சுகன்யா சம்ரித்தி யோஜனா (Sukanya Samriddhi Yojana)
சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) எனப்படும் செல்வமகள் சேமிப்புத் திட்டம் ஒரு நல்ல வரி சேமிப்பு திட்டமாகும். ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் இந்த திட்டத்தின் கீழ் டெபாசிட்களுக்கு 8.20 சதவீத வட்டி விகிதத்தை அரசாங்கம் வழங்குகிறது. இதனுடன், ஒரு நிதியாண்டில் எஸ்எஸ்ஒய் -யில் ரூ.250 முதல் ரூ.1.50 லட்சம் வரை முதலீடு செய்யலாம். வருமான வரியின் (Income Tax) 80C பிரிவின் கீழ் முதலீடு செய்யப்பட்ட தொகைக்கு ரூ.1.50 லட்சம் தள்ளுபடி கிடைக்கும்.
தேசிய சேமிப்புத் திட்டம் (National Saving Scheme)
தேசிய சேமிப்புத் திட்டமும் (NSC) ஒரு சிறந்த வரிச் சேமிப்புத் திட்டமாகும். இதன் கீழ் நீங்கள் டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு 7.70 சதவீத வட்டியைப் பெறுவீர்கள். இந்தத் திட்டத்தின் கீழ், நீங்கள் ரூ. 1000 முதல் ரூ. 100 இன் மடங்குகளில் எந்தத் தொகையையும் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்திலும், பிரிவு 80C -இன் கீழ் ரூ.1.50 லட்சம் தள்ளுபடி கிடைக்கும்.
வரிச் சேமிப்பு FD (Fixed Deposit)
வரிச் சேமிப்பு FD என்பது வரி விலக்குக்கான சிறந்த முதலீட்டு விருப்பமாகும். இந்தத் திட்டத்தின் கீழ், 5 ஆண்டுகளுக்கு வங்கி அல்லது தபால் அலுவலக FD இல் முதலீடு செய்து வரி விலக்கின் (Tax Exemption) பலனைப் பெறலாம். இந்தத் திட்டத்தின் கீழ், நீங்கள் 7.70 சதவீத வட்டி விகிதத்தையும், பிரிவு 80C இன் கீழ் ரூ. 1.50 லட்சம் வருடாந்திர விலக்கையும் பெறுகிறீர்கள்.
ஈக்விட்டி இணைக்கப்பட்ட சேமிப்புத் திட்டம் (ELSS)
மியூச்சுவல் ஃபண்டுகளின் ஈக்விட்டி இணைக்கப்பட்ட சேமிப்புத் திட்டங்களும் (ELSS) ஒரு சிறந்த வரிச் சேமிப்புத் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ், வருமான வரியின் 80C பிரிவின் கீழ் ஒரு நிதியாண்டில் சிறந்த வருமானம் மற்றும் ரூ.1.50 லட்சம் தள்ளுபடி பெறுவீர்கள்.
வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund)
PPF அதாவது பொது வருங்கால வைப்பு நிதி கணக்கில் ஒவ்வொரு ஆண்டும் ரூ.500 முதல் ரூ.1.50 லட்சம் வரை முதலீடு செய்வதன் மூலம், வருமான வரியின் 80C பிரிவின் கீழ் ரூ.1.50 லட்சம் வரை விலக்கு பெறலாம். தற்போது இந்த கணக்கில் 7.10 சதவீத வட்டியை அரசு வழங்குகிறது.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (Senior Citizens Saving Scheme)
மூத்த குடிமக்கள் வரிச் சேமிப்புக்காக மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் (SCSS) முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தின் கீழ், 1000 முதல் 30 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இதற்கு அரசாங்கம் தற்போது 8.20 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ