Income Tax Refund: உங்களுக்கு இன்னும் நிதியாண்டு 2022-23 (FY 2022-23) -க்கான வருமான வரி ரீஃபண்ட் வரவில்லையா? இதற்கான காரணம் என்ன? நீங்கள் சரி பார்க்க வேண்டிய விஷயங்கள் என்ன? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Check ITR Refund: உங்கள் ஐடிஆர் ப்ராசஸ் செய்யப்பட்டதா? 


முதலில், வருமான வரித் துறை (Income Tax Department) உங்களின் ஐடிஆர் -ஐ ப்ராசஸ் செய்துள்ளதா என்பதைச் சரிபார்க்க வேண்டும். உங்கள் வருமான வரி கணக்குச் செயலாக்கப்பட்ட பின்னரே நீங்கள் பணத்தைத் திரும்பப் பெற முடியும், அதாவது ரீஃபண்ட் பெற முடியும். வருமான வரித் துறையின் இ-ஃபைலிங் இணையதளத்தில் உங்கள் ஐடிஆர் நிலையைப் (ITR Status) பார்க்கலாம்.


ஐடிஆர் ரீஃபண்ட்டுக்கு நீங்கள் தகுதியுடையவரா?


வருமான வரிக் கணக்கைச் செயலாக்கிய பிறகு, உங்கள் ஐடிஆரில் (ITR) பணத்தைத் திரும்பப் பெற நீங்கள் தகுதியுடையவர் என்பதை வருமான வரித் துறை உறுதிப்படுத்துகிறதா என்பதை பார்க்க வேண்டும். வருமான வரித்துறை அதை உறுதிசெய்தால் மட்டுமே ஐடிஆர் ரீஃபண்டு கிடைக்கும். உங்கள் வருமான வரி அறிக்கை ப்ராசஸ் செய்யப்பட்டிருந்தால், வருமான வரித் துறையின்படி, வழக்கமாக நான்கைந்து வாரங்களுக்குள் பணம் திரும்பப் பெறப்படும்.


இந்த நடவடிக்கை மிக அவசியம்


ஐடிஆர் பணத்தைத் திரும்பப் பெற, உங்கள் வங்கிக் கணக்கு (Bank Account) முன்கூட்டியே சரிபார்க்கப்பட வேண்டும். வங்கிக் கணக்கு முன்கூட்டியே சரிபார்க்கப்படாவிட்டால் (pre-validated), நீங்கள் பணத்தைத் திரும்பப் பெற மாட்டீர்கள்.


மேலும், வங்கிக் கணக்கில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர், பான் கார்டு விவரங்களுடன் பொருந்தவில்லை என்றாலும் ரீஃப்ண்டு (Income Tax Refund) கிடைக்காது. இது தவிர உங்கள் வங்கிக் கணக்கின் ஐஎஃப்எஸ்சி குறியீடு செல்லுபடி நிலையில் இருக்க வேண்டும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.


30 நாட்களுக்குள் ITR இன் இ-வெரிஃபிகேஷன் செய்வது அவசியம் 


பணத்தைத் திரும்பப் பெற (Refund) உங்கள் வருமான வரிக் கணக்கை (Income Tax Return) இ-வெரிஃபை (e-verify) செய்வது கட்டாயம் என்பதை நினைவில் கொள்ளவும். சமீபத்திய விதிகளின்படி, உங்கள் ஐடிஆரை தாக்கல் செய்த 30 நாட்களுக்குள் இ-வெரிஃபை செய்ய வேண்டும். எனவே, நீங்கள் உங்கள் வருமானத்தை இ-வெரிஃபை செய்யவில்லை என்றால், நீங்கள் ITR பணத்தைத் திரும்பப் பெறத் தகுதி பெற மாட்டீர்கள்.


அவுட்ஸ்டாண்டிங் டிமாண்ட் நிலுவையில் உள்ளதா?


முந்தைய நிதியாண்டில் ஏதேனும் நிலுவையில் உள்ள டிமாண்ட் (Outstanding Demand) இருந்தால், உங்கள் வருமான வரி ரீஃபண்ட் (Income Tax Refund) தாமதமாகலாம். ஏதேனும் நிலுவையில் உள்ள கோரிக்கை இருந்தால், உங்கள் வருமான வரி ரீஃபண்ட் தொகை அந்தக் கோரிக்கைக்கு ஏற்ப சரிசெய்யப்படும். பிரிவு 143(1) இன் கீழ் வழங்கப்பட்ட நோட்டீஸ் மூலம் உங்களுக்கு இது தெரிவிக்கப்படும். எனவே, உங்கள் ஐடிஆர் செயலாக்கப்பட்டதும், உங்களுக்கு ஒரு தகவல் அறிவிப்பு வந்துள்ளதா என்பதை உறுதிப்படுத்துவது முக்கியம். அது கிடைத்ததும், வருமான வரி ரீஃபண்ட் தொகை உங்களிடம் நிலுவையில் உள்ளதா என்பதைச் சரிபார்த்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.


மேலும் படிக்க | Income Tax Saving: வரி விலக்கு பெற... ‘இந்த’ FD முதலீடுகள் உதவும்!


Income Tax Refund Process: ஐடிஆர் ரீஃபண்ட் -ஐ ஆன்லைனில் எப்படி சரிபார்ப்பது? 


- முதலில், நீங்கள் வருமான வரி இ-ஃபைலிங் இணையதளத்திற்குச் (income tax e-filing website) செல்ல வேண்டும்


- ஐடிஆர் ரீஃபண்டைச் சரிபார்க்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்


‘Quick Links’ என்பதன் கீழ், ‘Know Your Refund Status' என்ற விருப்பத்தைக் காண்பீர்கள். அதை கிளிக் செய்யவும்.


- கவனமாக இருக்கவும்


நீங்கள் ஒரு புதிய சாளரத்திற்கு திருப்பி விடப்படுவீர்கள். குறிப்பிட்ட பெட்டியில் உங்கள் PAN/TAN ஐ உள்ளிடவும். கீழ்தோன்றும் மெனுவிலிருந்து ‘மதிப்பீட்டு ஆண்டை’ (Assessment Year) தேர்ந்தெடுக்கவும். இந்த விவரங்களை உங்கள் வருமான வரி கணக்கு ஒப்புகை ரசீதில் காணலாம்.


- OTP ஐ உள்ளிடவும்


உங்கள் மொபைல் எண்ணையும் ‘Mobile’ பெட்டியில் உள்ளிட வேண்டும். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். அடுத்த கட்டத்தில் 6 இலக்க OTP ஐ உள்ளிடவும். ‘Continue’ பொத்தானைக் கிளிக் செய்யவும்.


- செயல்முறை நிறைவுபெறும்


அடுத்த கட்டத்தில், உங்கள் வருமான வரி ரீஃபண்ட் நிலை திரையில் காட்டப்படும்.


வருமான வரி ரீஃபண்ட் பெறுவதில் பிரச்சனை ஏற்பட்டு, உங்களால் ரீஃபண்ட் பெற முடியவில்லை என்றால், ரீஃபண்டை திரும்ப பெற கோரிக்கை விடுக்கலாம். 


Refund Re-issue கோர, பின்வரும் செயல்முறைகளைப் பின்பற்றவும்:


- பயனர் ஐடி, கடவுச்சொல் கொண்டு இ-ஃபைலிங் இணையதளத்தில் லாக் இன் செய்யவும்.
- Services -க்குச் சென்று, "Refund Reissue" என்பதைக் கிளிக் செய்யவும்.
- பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான கோரிக்கையை (Refund Reissue request) உருவாக்கவும்.


மேலும் படிக்க | Budget 2024: பெண் விவசாயிகளுக்கு ஜாக்பாட் அறிவிப்பு... இரட்டிப்பாகும் PM Kisan தொகை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ