Budget 2024: பெண் விவசாயிகளுக்கு ஜாக்பாட் அறிவிப்பு... இரட்டிப்பாகும் PM Kisan தொகை

Budget 2024: பட்ஜெட்டுக்கு முன்னதாக, நிலம் வைத்திருக்கும் பெண் விவசாயிகளுக்கு பிரதமர் கிசான் சம்மன் நிதியை மோடி அரசு இரட்டிப்பாக்கக்கூடும் என்று கூறப்படுகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 10, 2024, 12:32 PM IST
  • PM Kisan Samman Nidhi: பெண்களுக்கான சிறப்பு அறிவிப்புகள் வெளிவருமா?
  • MNREGA இன் கீழ், பெண் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
  • MNREGA இல் தற்போது பெண் தொழிலாளர்களின் பங்கு 59.26 சதவீதமாக உள்ளது.
Budget 2024: பெண் விவசாயிகளுக்கு ஜாக்பாட் அறிவிப்பு... இரட்டிப்பாகும் PM Kisan தொகை title=

Budget 2024: ஒவ்வொரு ஆண்டும் பொது பட்ஜெட்டின் போது, ​​அரசாங்கத்தின் சிறப்பு கவனம் விவசாயிகள் மற்றும் சம்பள வர்க்கத்தின் மீது இருக்கும். பிப்ரவரி 1, 2024 அன்று, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) தொடர்ந்து ஆறாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்வார். இன்னும் சில மாதங்களில் நாட்டில் மக்களவை தேர்தல் நடக்கவுள்ளதால், பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யபப்டும் பெட்ஜெட் இடைக்கால பட்ஜெட்டாக (Interim Budget) இருக்கும். இது தேர்தல் ஆண்டு பட்ஜெட் என்பதால் அனைவரது பார்வையும் அதன் மீதே உள்ளது. ஒவ்வொரு முறையும் போலவே, சம்பளம் பெறும் வகுப்பினரும் பட்ஜெட்டில் அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளனர். பட்ஜெட்டுக்கு முன்னதாக, நிலம் வைத்திருக்கும் பெண் விவசாயிகளுக்கு பிரதமர் கிசான் சம்மன் நிதியை மோடி அரசு இரட்டிப்பாக்கக்கூடும் என்று ராய்ட்டர்ஸில் செய்தி வந்துள்ளது.

PM Kisan Samman Nidhi: பெண்களுக்கான சிறப்பு அறிவிப்புகள் வெளிவருமா? 

தற்போது, ​​கிசான் சம்மான் நிதியின் (PM Kisan Samman Nidhi) கீழ், நாட்டின் சுமார் 11 கோடி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதில் ஆண் மற்றும் பெண் பயனாளிகள் உள்ளனர். பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள இடைக்கால பட்ஜெட்டில் (Budget 2024), பெண் விவசாயிகளுக்கான சம்மான் நிதியை ரூ.12,000 ஆக உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக ஆதாரங்களை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. 

இதுதவிர, பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு (Women) பணப்பரிவர்த்தனை திட்டத்தை தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் எந்த திட்டத்தின் பலனையும் பெறாத 21 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு பணப் பரிமாற்றத் திட்டத்தைத் தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது.

2.8 லட்சம் கோடிக்கு மேல் அரசு வழங்கியது

MNREGA இன் கீழ், பெண் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். MNREGA இல் தற்போது பெண் தொழிலாளர்களின் பங்கு 59.26 சதவீதமாக உள்ளது. 2020-21ல் இது 53.19% ஆக இருந்தது. அரசு பெண் விவசாயிகளுக்கான சம்மான் நிதியை 6,000 ரூபாயில் இருந்து 12,000 ரூபாயாக உயர்த்தினால், அரசின் கருவூலத்திற்கு 120 கோடி ரூபாய் கூடுதல் சுமை ஏற்படும். பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதியின் கீழ் இதுவரை 15 தவணைகள் விவசாயிகளின் கணக்குகளுக்கு அரசாங்கத்தால் மாற்றப்பட்டுள்ளன. இதன் கீழ், நாடு முழுவதும் உள்ள சுமார் 11 கோடி விவசாயிகளின் (Farmers) கணக்குகளுக்கு ரூ.2.8 லட்சம் கோடிக்கு மேல் தொகை சென்றடைந்துள்ளது. நாட்டில் 26 கோடி விவசாயிகள் உள்ளனர். இதில் தங்கள் பெயரில் நிலம் வைத்திருக்கும் பெண் விவசாயிகள் (Women Farmers) 13% மட்டுமே.

பாஜகவின் வெற்றியில் பெண்களின் பங்களிப்பு முக்கியமானது

பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் உரையின் போது பெண்கள் பல திட்டங்களை நிதி அமைச்சர் (Finance Minister) அறிவிக்கலாம். எனினும் இது குறித்து எந்த தகவலையும் தெரிவிக்க விவசாய அமைச்சகம் மறுத்துவிட்டது. நாட்டில் 26 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் உள்ளனர். 1.4 பில்லியன் மக்கள்தொகை கொண்ட நாட்டில், விவசாயிகள் தங்கள் குடும்பத்துடன் மிகப் பெரிய வாக்காளர்களாக உள்ளனர். அவர்களில் 60 சதவீதம் பேர் பெண்கள் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இவர்களில் 13 சதவீதத்திற்கும் குறைவானவர்கள் சொந்தமாக விதை நிலத்தை வைத்துள்ளனர். பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் வெற்றியில் பெண்கள் முக்கிய பங்கு வகித்துள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரிகிறது. பெண்கள் நலனில் அதிக கவனம் செலுத்தினால் மக்களவை தேர்தல்களில் அதன் விளைவு தெரியும் என்பது பாஜக -வின் (BJP) எண்ணமாக உள்ளது. 

மேலும் படிக்க | EPFO Alert: EPF கணக்கு 'ஃப்ரீஸ்' ஆக காரணம் என்ன? செயலற்ற கணக்கிலிருந்து பணத்தை எடுப்பது எப்படி?

இந்தத் தேர்தலில் 35 கோடி பெண்கள் வாக்களிப்பார்கள்

2023 டிசம்பரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற நான்கு பெரிய மாநிலங்களில், மூன்றில் பாஜக அமோக வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்த மாநிலங்களில் பாஜகவுக்கு ஆதரவாக பெண்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளனர். C-Voter இன் கணக்கெடுப்பின்படி, மத்தியப் பிரதேசத்தில், பாஜக அரசாங்கம் திருமணமான பெண்களுக்கான பணப் பரிமாற்றத் திட்டத்தைத் தொடங்கியது. அங்கு கட்சி 51 சதவீத பெண் வாக்குகளைப் பெற்றுள்ளது. அதே நேரத்தில் 46.2 சதவீத ஆண் வாக்குகளைப் பெற்றுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தில் சம்பளம் பெறாத வகுப்பைச் சேர்ந்த பெண்கள் பெரும் பங்களிப்பை வழங்குகின்றனர். என்எஸ்எஸ் தரவுகளின்படி, அத்தகைய பெண்களின் பங்கு ரூ.22.7 லட்சம் கோடி. 

ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் (Lok Sabha Election) 35 கோடி பெண்கள் வாக்களிப்பார்கள் என ஒரு மதிப்பீட்டின்படி கூறப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டு நாடு முழுவதும் பதிவான 55 கோடி வாக்குகளில் 26 கோடி பெண்கள் வாக்களித்தனர். 2019ல் 62 கோடி வாக்குகளில் 30 கோடி பெண்கள் வாக்களித்திருந்தனர். இம்முறை பெண்களின் வாக்குகள் 35 கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | வரியை சேமிக்க தவறான தகவல்களை கொடுக்காதீங்க... டெக் முறையில் கண்காணிக்கும் IT!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News