EPFO Update: EPF உறுப்பினராக இருக்கும் பணியாளர்கள் ஊழியர்களின் டெபாசிட் இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டத்தை (EDLI) தேர்ந்தெடுத்திருந்தால், அந்த திட்டம் குறித்த சில முக்கிய தகவல்களை அறிந்து வைத்திருக்க வேண்டியது மிக அவசியமாகும். உறுப்பினர் சேவையில் இருக்கும் போது துரதிஷ்டவசமாக இறந்தால் அவரது குடும்பத்திற்கு இந்த திட்டம் மூலம் கிடைக்கும் தொகை ஒரு கணிசமான  நிதி உதவியாக இருக்கும். இளைஞராக இருந்தாலும் சரி, வயதானவராக இருந்தாலும் சரி, EDLI திட்டம் இறந்தவரின் குடும்பத்திற்கு குறிப்பிடத்தக்க வகையில் உதவியாக இருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) 1976 இல் EPF சட்டத்தின் கீழ் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இறப்புக் காப்பீடு வழங்குவதற்காக ஊழியர்களின் வைப்பு-இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டத்தை (EDLI) அறிமுகப்படுத்தியது. ஊழியரின் அகால மரணம் ஏற்பட்டால் இத்திட்டம் ஊழியரின் குடும்ப உறுப்பினர்களுக்கு நிதியுதவியை உறுதி செய்கிறது.


ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர விதிகள் சட்டம் 1952 (EPF Act) கீழ் உள்ள நிறுவனங்களின் அனைத்து ஊழியர்களுக்கும் இந்தத் திட்டம் கிடைக்கும்.


மற்ற காப்பீட்டுத் திட்டங்களைப் போலல்லாமல், பணியாளர் பாலிசிக்கு பங்களிப்பதில்லை என்பது இந்தத் திட்டத்தின் தனித்துவமான அம்சங்களில் ஒன்றாகும். அதற்குப் பதிலாக, முதலாளி ஊழியரின் மாதச் சம்பளத்தில் இருந்து ஒரு சதவீதத்தை செலுத்துகிறார். இது குறைந்தபட்சம் 0.5 சதவீதம் முதல் உச்சவரம்பு ரூ 15,000 வரை இருக்கலாம். இருப்பினும், EPF உறுப்பினர்கள் மற்றொரு காப்பீட்டுக் கொள்கையை வாங்க விரும்பினால் EDLI இலிருந்து விலகலாம்.


EDLI இன் கீழ், EPF உறுப்பினர் சேவையில் இறந்தால், ஊழியரின் சட்டப்பூர்வ வாரிசுகள் அதிகபட்சமாக ரூ. 7 லட்சம் வரை உறுதிசெய்யப்பட்ட பலனைப் பெறுவார்கள்.


மேலும் படிக்க | சேமிப்புக் கணக்கில் எவ்வளவு பணம் டெபாசிட் செய்யலாம்? வரம்பை மீறினால் வருமான வரி நோட்டீஸ்


திட்டத்தின் மற்ற முக்கிய அம்சங்கள்


இறப்பதற்கு முன் கடந்த 12 மாதங்களில் பணியாளர் வேலை மாறினாலும், திட்டத்தின் கவரேஜ் பொருந்தும். காப்பீட்டுத் தொகை சட்டப்பூர்வ வாரிசு வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. நிறுவனங்கள் EFF சட்டத்தின் கீழ் இருந்தால், ஊழியர்கள் இயல்பாகவே EDLI திட்டத்தில் பதிவு செய்யப்படுவார்கள். இருப்பினும் அவர்கள் அதிக ஊதியம் பெறும் காப்பீட்டுத் திட்டத்தைப் பெற விரும்பினால், இந்த திட்டத்திலிருந்து விலகலாம்.


ஊழியர் மற்றும் முதலாளி இருவரும் பங்களிக்கும் வகையில் உள்ள EPF திட்டத்தைப் போலல்லாமல், EDLI திட்டத்தில், முதலாளி மட்டுமே பங்களிப்பார். அது அடிப்படை மற்றும் அகவிலைப்படியில் (DA) குறைந்தபட்சம் 0.5 சதவீதமாக இருக்கும்.


ஊழியர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் குறித்த எந்தத் தடையும் இதில் இல்லை. ஆனால் ஊழியர்கள் தொடர்ந்து ஒரு வருடம் பணிபுரிந்திருந்தாலும், EPF இன் ஆக்டிவ் உறுப்பினராக இருந்தாலும் மட்டுமே இந்தத் திட்டம் தொடங்கப்படும்.


க்ளெயிம் செயல்முறையைப் பொறுத்தவரை, நாமினி EDLI, PF மற்றும் இறந்த உறுப்பினரின் ஓய்வூதியப் பலன்களுக்கு ஒரு கூட்டுப் படிவத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். நாமினி இறப்பு அல்லது வாரிசு சான்றிதழ் மற்றும் பணம் செலுத்த வேண்டிய வங்கிக் கணக்கின் ரத்து செய்யப்பட்ட காசோலையையும் (கேன்சல்ட் செக்) சமர்ப்பிக்க வேண்டும்.


EDLI கணக்கீடு:


ஒரு ஊழியர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிறுவனங்களில் ஒரு வருடத்திற்கு மேல் பணிபுரிந்திருந்தால், கடந்த 12 மாத சம்பளத்தின் சராசரியை விட 35 மடங்கு (அதிகபட்சம் ரூ. 15,000) மற்றும் முந்தைய 12 மாதங்களில் மாத சராசரி நிலுவைத் தொகையில் 50 சதவீதம் செலுத்தப்படும் (அதிகபட்சம் ரூ. 1,75,000). இதன் அடிப்படையில் அதிகபட்ச தொகையாக 7 லட்சம் ரூபாய் கிடைக்கக்கூடும்.


மேலும் படிக்க | TNEB: மழை வெள்ள பாதிப்பினால் மின் கட்டணம் செலுத்தும் காலக்கெடு நீட்டிக்கப்படுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ