EPFO Update: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி கனக்குகளை நிர்வகிக்கின்றாது. இபிஎஃப் தொகை ஊழியர்கள் பணி ஓய்வுக்கு பிறகான காலத்தில் உதவும் ஒரு மிகப்பெரிய சேமிப்பாக பார்க்கப்படுகின்றது. இபிஎஃப் கணக்குகள் தொடர்பான பல புதுப்பிப்புகள் அவ்வப்போது வெளியிடப்படுகின்றன. இவற்றை இபிஎஃப் உறுப்பினர்கள் அப்டேட் செய்து வைத்துக்கொள்வது நல்லது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

EPFO Joint Declaration


இபிஎஃப் உறுப்பினர்களுக்கு (EPF Members) கூட்டுப் பிரகடனப் படிவம் (Joint Declaration Form) ஒரு முக்கியமான ஆவணமாக கருதப்படுகின்றது. இபிஎஃப் கணக்கில் (PF Account) உள்ளிடப்பட்ட தவறான தகவலைப் புதுப்பிக்கவும், திருத்தவும், இந்த படிவத்தை பணியாளரும் முதலாளியும் கையொப்பமிட்டு, பிராந்திய பிஎஃப் ஆணையரிடம் சமர்ப்பிக்க வேண்டும். 


Joint Declaration Form: இந்த படிவத்திற்கான தேவை என்ன? 


JDF இபிஎஃப் பதிவுகளை புதுப்பித்து, துல்லியமாக வைத்திருக்க உதவுகிறது. ஏனெனில் இதன் மூலம் பணியாளர்கள் தங்கள் இபிஎஃப் கணக்கில் உள்ள முரண்பாடுகளை சரிசெய்யவும், பெயர், பிறந்த தேதி, தொடர்பு விவரங்கள், வங்கிக் கணக்குகள் போன்ற தனிப்பட்ட விவரங்களை புதுப்பிக்கவும் முடியும். மேலும், இதன் மூலம் விதிகளுக்கு இணங்கி, நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களின் EPF பதிவுகளில் தேவையான மாற்றங்களைச் செய்ய முடியும். இது EPF கணக்குகளின் தடையற்ற நிர்வாகத்தையும் உறுதி செய்கிறது.


Joint Declaration Form பயன்படுத்தி கணக்கில் ஆன்லைனில் அப்டேட் செய்வது எப்படி?


இபிஎஃப் உறுப்பினர்களுக்கு அவ்வப்போது தங்கள் கணக்கில் பல வித அப்டேட்களை செய்யும் தேவை ஏற்படுகின்றது. ஆனால், இதற்காக எங்கும் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் காரணமாக, ஆன்லைன் தளங்கள் மூலம் இபிஎஃப் விவரங்களை புதுப்பிப்பது மிக எளிதாகிவிட்டது.  கூட்டு அறிவிப்பு படிவத்தைப் பயன்படுத்தி ஆன்லைனில் EPF தகவலை எப்படி அப்டேட் செய்வது என்பது பற்றி இங்கே காணலாம். 


மேலும் படிக்க | ரயிலில் கன்பர்ம் சீட் வேண்டுமா? இப்படி பண்ணா தட்கல் டிக்கெட் ஈசியா கிடைக்கும்
 
ஸ்டெப் 1:  EPFO போர்ட்டலுக்கு செல்லவும்


ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.epfindia.gov.in/ -க்கு செல்லவும். 
 
ஸ்டெப் 2: கணக்கில் லாக் இன் செய்யவும்


நீங்கள் ஒரு பணியாளராக இருந்தால், உங்கள் உலகளாவிய கணக்கு எண் (UAN) மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி லாக் இன் செய்யவும். வேலை வழங்குபவர்கள் தங்கள் வேலை வழங்குபவரின் வருங்கால வைப்பு நிதி (EPF) லாக் இன் சான்றுகளைப் பயன்படுத்தி லாக் இன் செய்யலாம். 
 
ஸ்டெப் 3: ஆன்லைன் சேவைகளுக்கு செல்லவும்


லாக் இன் செய்ததும், EPFO போர்ட்டலில் உள்ள 'Online Services' பகுதிக்கு செல்லவும்.
 
ஸ்டெப் 4: கூட்டு அறிவிப்பு படிவத்தை (JDF) தேர்ந்தெடுக்கவும்


EPF விவரங்களைப் புதுப்பிக்க அல்லது திருத்துவதற்கான ஆப்ஷனைத் தேடி, கூட்டு அறிவிப்பு படிவத்தைத் (JDF) தேர்ந்தெடுக்கவும்.
 
ஸ்டெப் 5: தேவையான தகவலை நிரப்பவும்


துல்லியமான விவரங்களுடன் JDFஐ நிறைவு செய்யவும். அனைத்து தகவல்களும் ஒழுங்காக நிரப்பப்படிருப்பதை உறுதிசெய்துகொள்ளவும்.. 
 
ஸ்டெப் 6: துணை ஆவணங்களை இணைக்கவும்


தேவையான அனைத்து ஆவணங்களையும் இணைக்க வேண்டும். புதுப்பிப்பு அல்லது திருத்தத்தின் தன்மையைப் பொறுத்து, உங்கள் ஆதார் அட்டை, பான் கார்டு அல்லது வங்கி பாஸ்புக் ஆகியவற்றின் நகல்களை இணைக்க வேண்டியிருக்கும்.
 
ஸ்டெப் 7: படிவத்தை சமர்ப்பிக்கவும்


வழங்கப்பட்ட தகவலைச் சரிபார்த்த பிறகு, EPFO போர்டல் மூலம் JDF ஐ ஆன்லைனில் சமர்ப்பிக்கவும்.
 
ஸ்டெப் 8: ஸ்டேடசைக் கண்காணிக்கவும்


புதுப்பிப்புகள் சரியான நேரத்தில் செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய EPFO போர்டல் மூலம் உங்கள் JDF சமர்ப்பிப்பின் நிலை அதாவது ஸ்டேடசை நீங்கள் கண்காணிக்கலாம்.
 
மாற்றங்கள் அங்கீகரிக்கப்பட்ட பின்னர், இபிஎஃப்ஓ ஐடி இடைமுகத்தால் பெறப்பட்ட உறுப்பினரின் புகைப்படமும், UIDAI ஆதார் தரவுகளும் உறுப்பினரின் மெம்பர் போர்டலில் உள்ள உறுப்பினர் ப்ரொஃபைலிலும், சுயவிவரத்திலும், பல்வேறு தளங்களில் உள்ள தகவல் தொழில்நுட்ப இடைமுகத்திலும் தெரியும்.


மேலும் படிக்க | விமான டிக்கெட்களை குறைந்த விலையில் பெறுவது எப்படி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ