Income Tax Refund: வருமான வரி ரீஃபண்ட் என்பது வருமான வரித் துறையால் பிடிக்கப்பட்ட அதிகப்படியான வரியைத் திரும்பப் பெறுவதாகும். இந்த வரியானது டிடிஎஸ், டிசிஎஸ், அட்வான்ஸ் டேக்ஸ் அல்லது சுய மதிப்பீட்டு வரி மூலம் வருமான வரித்துறைக்கு செல்கிறது. ஐடிஆர் தாக்கல் செய்யும் போது, ​​வரி செலுத்துவோர் தங்கள் கழிப்புகளை பற்றி தெரிவிக்கின்றனர். அதன் பிறகு அதிகப்படியான வரி வருமான வரித் துறையால் திரும்ப அளிக்கப்படுகின்றது. இருப்பினும், பல முறை ரீஃபண்ட் தொகை சரியாக கிடைப்பதில்லை. அப்படிப்பட்ட நேரங்களில் ரீஃபண்டை கோர என்ன செய்வது? இது பற்றி இந்த பதிவில் காணலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வேலை செய்பவர்களிடமிருந்து அதிக வரி எவ்வாறு கழிக்கப்படுகிறது?


வேலை செய்பவர்களைப் பொறுத்தவரை, பல முறை, போதிய புரிதல் இல்லாததால், புதிய வரி விதிப்பு முறை (New Tax Regime) தவறுதலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, எச்ஆர்ஏ மற்றும் பல்வேறு முதலீடுகளிலிருந்து ஊழியர் எந்தப் பலனையும் பெறுவதில்லை. அத்தகைய சூழ்நிலையிலும் அதிக வரி கழிக்கப்படுகிறது. இருப்பினும், ஐடிஆர் தாக்கல் செய்யும் போது, ​​அந்த நபர் தனது வரி முறையை பழைய வரி முறைக்கு (Old Tax Regime) மாற்றி, அனைத்து விலக்குகளையும் கோரலாம். இதற்குப் பிறகு, வருமான வரித் துறையால் பணம் திரும்ப அளிக்கப்படும். 


எத்தனை நாட்களில் பணம் திரும்ப வரும்?


வருமான வரித் துறை (Income Tax Department) இணையதளத்தின்படி, வருமான வரி ரீஃபண்டை பெற சுமார் 4-5 வாரங்கள் ஆகும். இந்த பணத்தைத் திரும்பப் பெற, நீங்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வது மட்டுமல்லாமல், அதை ஈ-வெரிஃபிகேஷன் செய்வது அவசியம் என்பதை  நினைவில் கொள்ளுங்கள். பல நேரங்களில் மக்கள் ஈ-வெரிஃபிகேஷன் செய்ய மறந்துவிடுகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் ரீஃபண்டை (Refund) பெறுவது தடைபடுகிறது. ஈ-வெரிஃபிகேஷன் ஆன பிறகுதான் 4-5 வாரங்களில் பணம் திரும்பப் பெறப்படும்.


ரீஃபண்ட் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது?


பல முறை வரி செலுத்துவோர் (Taxpayers) ஐடிஆர் -ஐ (ITR) சரியாக நிரப்பியும் அவர்களுக்கு ரீஃபண்ட் வராமல் போவதுண்டு. 4-5 வாரங்களில் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறவில்லை என்றால், நீங்கள் ஒருமுறை வருமான வரித் துறையின் இணையதளத்திற்குச் சென்று, ரீஃபண்ட் ஸ்டேடசை செக் செய்யவும். உங்கள் ரீஃபண்ட் செயல்முறை ஃபெய்ல் ஆகி இருந்தால், நீங்கள் மீண்டும் பணத்தை ரீஃபண்ட் செய்யும்படி கேட்கலாம்.


மேலும் படிக்க | Budget 2024: மூத்த குடிமக்களுக்கு 5 பெரிய பரிசுகள் கிடைக்க வாய்ப்பு... லிஸ்ட் இதோ


Refund Reissue Request: இதற்கான வழிமுறை என்ன? 


ரீஃபண்டை திரும்பப் பெறுவதற்கான கோரிக்கையை வைக்க, முதலில் வருமான வரித் துறையின் இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். அதன் முழு செயல்முறையையும் வருமான வரித்துறையே தெரிவித்துள்ளது. முழு செயல்முறையையும் இங்கே தெரிந்து கொள்வோம்.


- முதலில் இ-ஃபைலிங் போர்ட்டலில் லாக்-இன் செய்யவும். Service Requests-க்குச் சென்று, Refund Reisue என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- அங்கு நீங்கள் Refund Reissue Request என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
- இதற்குப் பிறகு, மறுவெளியீட்டைக் கோர விரும்பும் பதிவைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- நீங்கள் ரீஃபண்டை பெற விரும்பும் வங்கிக் கணக்கைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் தேர்ந்தெடுத்த கணக்கு செல்லுபடியாகவில்லை என்றால், அதை முதலில் இ-ஃபைலிங் போர்ட்டலில் வேலிடேட் செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.
- இதற்குப் பிறகு, Proceed to Verification என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
- இதற்குப் பிறகு நீங்கள் ஆதார் OTP, EVC அல்லது DSC இலிருந்து மின் சரிபார்ப்பு முறைகளில் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும்.
- இதைச் செய்த பிறகு, Continue என்பதைக் கிளிக் செய்ய வேண்டும், உங்கள் கோரிக்கை வருமான வரித் துறைக்கு செல்லும்.


ரீஃபண்ட் தோல்வியடைய காரணங்கள் என்ன?


- உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள சில சிக்கல்கள் ரீஃபண்ட் கிடைக்காமல் இருப்பதற்கான பொதுவான காரணமாக இருக்கலாம். உங்கள் கணக்கு எண் அல்லது IFSC குறியீடு தவறாக இருப்பதால் ரீஃபண்ட் நிறுத்தப்படலாம்.
-  இது மட்டுமல்லாமல், உங்கள் கணக்கை நீங்கள் வெரிஃபை செய்யவில்லை என்றாலும் ரீஃபண்ட் செயல்முறை தோல்வியடையும். 
- பல நேரங்களில் பான் கார்டில் எழுதப்பட்ட பெயரும் வங்கிக் கணக்கில் எழுதப்பட்ட பெயரும் பொருந்தாமல் இருக்கும். இதன் காரணமாகவும் ரீஃபண்ட் பெறுவது தோல்வியடையலாம். 
- உங்கள் பான் மற்றும் ஆதார் இணைக்கப்படவில்லை என்றாலும் வருமான வரி ரீஃபண்ட் கிடைக்காது.


மேலும் படிக்க | ஐடிஆர் தாக்கல் செய்பவரா? தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான 5 அட்டவணைகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ