தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) என்பது ஓய்வூதியத்திற்கான ஒரு சிறந்த முதலீட்டு கருவியாகும். சந்தாதாரர்கள் ஆண்டுதோறும் என்பிஎஸ் கணக்கில் குறைந்தபட்ச பங்களிப்பைச் செய்ய வேண்டும். அப்படி அவர்கள் செய்யத் தவறினால், அபராதம் செலுத்த வேண்டி வரும். மேலும் கணக்கை செயலில் வைத்திருக்க சந்தாதாரர்கள் குறைந்தபட்ச வருடாந்திர பங்களிப்பையும் செலுத்த வேண்டி இருக்கும். பொதுவாக, சந்தாதாரர் குறைந்தபட்ச வருடாந்திர பங்களிப்பைச் செய்யத் தவறினால் கணக்கு முடக்கப்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தேசிய சேமிப்பு அமைப்பு (National Pension System) அதாவது என்பிஎஸ் 2004 இல் ஒழுங்கமைக்கப்பட்ட துறைகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் 2009 இல் இது அனைவருக்கும் விரிவுபடுத்தப்பட்டது. அதன் பிறகு இதில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் சேர்வதற்கான வயது, நிதி மேலாளர்களின் தேர்வு மற்றும் வருடாந்திர திட்டங்கள் என இதில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில் இதில் மொத்தத்தொகையை கட்டம் கட்டமாக எடுக்கும் முறையான சிஸ்டமடிக் லம்ப்சம் வித்டிராயல் அதாவது SLW அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஓய்வுபெற்றவர்களின் நிதி இலக்குகளை அடைவதற்கு மிகவும் நெகிழ்வான ஒரு வசதியாகியுள்ளது. 


என்பிஎஸ் சந்தாதாரர்கள் குறைந்தபட்ச வருடாந்திர பங்களிப்பைச் செய்யத் தவறினால் என்ன நடக்கும்?


ஓய்வூதிய ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (PFRDA) படி, கணக்கை செயலில் வைத்திருக்க ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்ச தொகையை பங்களிப்பாக வழங்குவது அவசியமாகும். அவ்வாறு செய்யத் தவறினால், கணக்கை முடக்கத்திலிருந்து மீட்க சந்தாதாரர் ரூ.100 அபராதம் வழங்க வேண்டும். ஆனால், இதற்கு சந்தாதாரர் அந்தக் காலத்திற்கான குறைந்தபட்ச பங்களிப்பைச் செலுத்த வேண்டும். சந்தாதாரர் தேவையான கட்டணத்தைச் செலுத்தவும், என்பிஎஸ் கணக்கை மீண்டும் செயல்படுத்தவும் (ரீ-ஆக்டிவேட்) PoP இடம் செல்லலாம். 


குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை எவ்வளவு? 


டயர் I என்பிஎஸ் கணக்கை ரூ. 500 ஆரம்ப முதலீட்டில் தொடங்கலாம். கணக்கு வைத்திருப்பவர் ஆண்டுதோறும் என்பிஎஸ் கணக்கில் (NPS Account) குறைந்தபட்சம் ரூ. 6,000 பங்களிக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் கணக்கு முடக்கப்படும். சிலருக்கு என்பிஎஸ் பங்களிப்புகள் அவர்களது சம்பளத்திலிருந்தெ கழிக்கப்படும். அப்படிப்பட்ட நபர்கள் கவலைப்படத் தேவையில்லை. இருப்பினும், தன்னார்வ பங்களிப்புகளைச் செய்யும் சுயதொழில் செய்பவர்களுக்கு, கணக்கு முடக்கத்தைத் தடுக்க வழக்கமான முறையில், சரியான கால இடைவெளியில் பணம் செலுத்துதல் அவசியமாகிறது. கணக்கு முடக்கப்பட்டிருந்தால், தனிநபர்கள் தங்கள் வங்கி அல்லது மத்திய ரெக்கார்ட்கீப்பிங் ஏஜென்சிகளிடம் (CRA) அந்த முடக்கத்தை நீக்குமாறு கோரலாம்.


மேலும் படிக்க | கூட்டு வட்டியுடன் பணத்தை பெருக்க... SBI சர்வோத்தம் எப்டி திட்டம்!


கணக்கு முடக்கத்தை தடுக்க என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம்?


கணக்கு முடக்கப்படுவதைத் தவிர்க்க, சந்தாதாரர்கள் தங்கள் கணக்குகளில் இருந்து என்பிஎஸ் பங்களிப்புகளுக்குத் தானாக டெபிட் (ஆட்டோ டிபிட்) செய்யும்படி வங்கிக்கு அறிவுறுத்தலாம். இதற்கு சந்தாதாரர்கள் ஒரு கட்டண கால இடைவெளியையும் அதாவது பேமெண்ட் ஃப்ரீக்வென்சியையும் (மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டுதோறும்) அமைக்கலாம். சரியான நேரத்தில் பணம் செலுத்தப்படுவதையும் கணக்கு செயலில் இருப்பதையும் இதன் மூலம் உறுதி செய்துகொள்ளலாம். 


என்பிஎஸ் எப்படி வேலை செய்கிறது?


NPS கணக்கை வங்கிகள் போன்ற பாயிண்ட்ஸ் ஆஃப் பிரசன்ஸ் (PoP) மூலமாகவோ அல்லது ஆன்லைனிலோ திறக்கலாம். ஆன்லைனில் என்பிஎஸ் கணக்கை திறக்க eNPS அல்லது அந்தந்த வங்கிகளின் இணையதளங்களுக்குச் செல்ல வெண்டும். 18 முதல் 70 வயதுடைய தனிநபர்கள், ஈக்விட்டி, கார்ப்பரேட் பத்திரங்கள், அரசுப் பத்திரங்கள் மற்றும் மாற்று முதலீட்டு நிதிகள் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட அசெட்களில் முதலீடு செய்யலாம். சந்தாதாரரின் வயது மற்றும் "வாழ்க்கை சுழற்சி" மேட்ரிக்ஸின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் 'ஆட்டோ' விருப்பத்தை அவர்கள் தேர்வு செய்யலாம். 'ஆக்டிவ்' விருப்பம், நிதி மேலாளரைத் தேர்வுசெய்து, நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளுக்குள் அசெட் ஒதுக்கீட்டைத் தீர்மானிக்க அனுமதிக்கிறது (மொத்த முதலீட்டில் பங்கு 75 சதவீதத்தை தாண்டக்கூடாது). முதிர்ச்சியின் போது, சந்தாதாரர் 60 சதவீத நிதியை மொத்தமாகவோ அல்லது SLW வழியிலோ, அதாவது கட்டம் கட்டமாகவோ திரும்பப் பெறலாம். மீதமுள்ள தொகை வருடாந்திர திட்டத்தில் முதலீடு செய்யப்பட வேண்டும்.


மேலும் படிக்க | Budget 2024... கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இருக்குமா... நிதியமைச்சர் கூறியது என்ன.!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ