Gratuity Rules: ஊழியர்களே உஷார்... இந்த தவறுகளை செய்தால் பணிக்கொடை கிடைக்காது
Gratuity Rules: கிராஜுவிட்டி எனப்படும் பணிக்கொடை பணியை விட்டு வெளியேறும் நேரத்திலோ அல்லது ஓய்வு பெறும் நேரத்திலோ அவரது பணிக் காலத்தின் அடிப்படையில் பணியாளருக்கு வழங்கப்பகிறது.
Gratuity Rules: அலுவலக பணிகளில் உள்ளவர்களுக்கு அவர்களது சிறந்த சேவைகளுக்கு வெகுமதியாக பணிக்கொடை வழங்கப்படுகின்றது. இருப்பினும், ஒரு ஊழியர் நிறுவனத்தில் 5 ஆண்டுகள் பணிபுரிந்த பின்னரே இது வழங்கப்படுகின்றது. இது பணியாளருக்கு கிடைக்கும் ஒரு முக்கியமான மொத்தத் தொகையாக பார்க்கப்படுகின்றது.
பணிக்கொடை எப்போது கிடைக்கின்றது?
கிராஜுவிட்டி எனப்படும் பணிக்கொடை பணியை விட்டு வெளியேறும் நேரத்திலோ அல்லது ஓய்வு பெறும் நேரத்திலோ அவரது பணிக் காலத்தின் அடிப்படையில் பணியாளருக்கு வழங்கப்படும். ஆனால் சில சூழ்நிலைகளில், நிறுவனம் விரும்பினால், அது பணியாளரின் பணிக்கொடையை நிறுத்தவும் செய்யலாம். பணியாளர் சில வகையான தவறுகளை செய்தால், நிறுவனம் அவரது பணிக்கொடையை நிறுத்தக்கூடும். அப்படிப்பட்ட்ட தவறுகளை பற்றி இங்கே காணலாம்.
இந்த சூழ்நிலையில் நிறுவனம் பணிக்கொடை பணத்தை செலுத்தாமல் இருக்கலாம்
பணியாளர்களின் பணிக்கொடைத் தொகையை எந்த நிறுவனமும் தேவையில்லாமல் நிறுத்தி வைக்க முடியாது. ஆனால் ஒரு ஊழியர் நெறிமுறையற்ற நடத்தைக்காக குற்றம் சாட்டப்பட்டு, அவரது அலட்சியத்தால் நிறுவனம் பெரும் நஷ்டத்தை சந்தித்தால், அவரது பணிக்கொடைத் தொகையை செலுத்தாமல் இருக்க நிறுவனத்திற்கு உரிமை உண்டு.
நிறுவனம் ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும்
நிறுவனம் ஒருவரின் கருணைத் தொகையை நிறுத்தினால், முதலில் அதற்கான ஆதாரத்தையும் அதற்கான காரணத்தையும் முன்வைக்க வேண்டும். நிறுவனம் எந்தக் காரணத்திற்காக பணிக்கொடையை நிறுத்தினாலும், அது பணியாளருக்கு ஒரு ஷோ காஸ் நோட்டீஸ், அதாவது காரணங்காட்டல் அறிக்கையை அனுப்ப வேண்டும். இதையடுத்து இரு தரப்பு வாதமும் கேட்கப்படுகின்றது. ஊழியர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பின்னரே பணிக்கொடைத் தொகை நிறுத்தப்படும். ஆனால் அப்படிப்பட்ட நிலையிலும் நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்ட அளவு தொகையே கழிக்கப்படும்.
இந்த சூழ்நிலையிலும் நிறுவனத்திற்கு இந்த உரிமை இருக்கும்
நிறுவனம் பணிக்கொடைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படாதபோது, பணியாளர்கள் பணிக்கொடைச் சட்டத்தின் கீழ் வரமாட்டார்கள். அத்தகைய சூழ்நிலையில், பணிக்கொடை வழங்குவதும் வழங்காததும் நிறுவனத்தின் விருப்பமாக இருக்கும்.
நிறுவனம் காரணமே இல்லாமல் பணிக்கொடையை நிறுத்தி வைத்தால் என்ன செய்வது?
5 ஆண்டுகள் பணி முடித்த பிறகும் ஊழியருக்கு பணிக்கொடைத் தொகையை நிறுவனம் வழங்கவில்லை என்றால், அந்த ஊழியர் இது தொடர்பாக நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பலாம். இதற்குப் பிறகும் அவரது பிரச்சனை தீர்க்கப்படாமல், அவருக்குத் தொகை வழங்கப்படாமல் இருந்தால், அந்த ஊழியர் நிறுவனம் மீது மாவட்ட தொழிலாளர் ஆணையரிடம் புகார் செய்யலாம். வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், நிறுவனம் அபராதம் மற்றும் வட்டியுடன் பணிக்கொடைத் தொகையை செலுத்த வேண்டும்.
பணிக்கொடைக்கான விதிகள் என்ன?
ஒரு தனியார் அல்லது அரசு நிறுவனத்தில் 10 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் பணிபுரிந்தால், அந்த நிறுவனம் அனைத்து ஊழியர்களுக்கும் பணிக்கொடையின் பலனை வழங்க வேண்டும். மறுபுறம், ஒரு ஊழியர் நிறுவனத்தில் 4 ஆண்டுகள் மற்றும் 8 மாதங்கள் பணிபுரிந்தால், அவரது சேவை முழு 5 ஆண்டுகளாகப் பரிசீலிக்கப்பட்டு, 5 ஆண்டுகளின் படி அவருக்கு பணிக்கொடைத் தொகை கிடைக்கும். அவர் 4 ஆண்டுகள் மற்றும் 8 மாதங்களுக்கு குறைவாக பணிபுரிந்திருந்தால், அவரது பணிக்காலம் 4 ஆண்டுகளாக கணக்கிடப்படும், அத்தகைய வழக்கில் அவருக்கு பணிக்கொடை கிடைக்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ