7 நாட்களில் ரூ.340 கோடி!! கிரீஷ் மாத்ருபூதத்திற்கு அசுர வளர்ச்சியை அளித்த Saas Business
Saas Business: சாஸ் பிசினஸ் என்றால் என்ன? இதனால் அதிரடி பலன் அடைந்த ஒரு நபரின் வாழ்க்கையையே இதற்கு உதாரணமாக கூறினால், இந்த பிசினஸ் பற்றிய புரிதல் எளிதாக ஏற்படும்.
Saas Business: பணம் நம் வாழ்வின் இன்றியமையாத ஒரு அம்சமாக உள்ளது. பனம் ஈட்ட பல வழிகள் உள்ளன. நாளுக்கு நாள் பணத்தை ஈட்டவும், அதை பெருக்கவும் பல புதிய வழிகளும், வர்த்தகங்களும், தொழி;நுட்பங்களும் கண்டுபிடிக்கப்படுகின்றன. அப்படி சமீபத்தில் சிறிய காலத்தில் அதிக பணம் ஈட்டும் வணிகமாக பிரபலமடைந்து வருவதுதான் சாஸ் வர்த்தகம்.
சாஸ் பிசினஸ் என்றால் என்ன? இதனால் அதிரடி பலன் அடைந்த ஒரு நபரின் வாழ்க்கையையே இதற்கு உதாரணமாக கூறினால், இந்த பிசினஸ் பற்றிய புரிதல் எளிதாக ஏற்படும். கிரீஷ் என்ற நபர் 12ம் வகுப்பில் தோல்வியடைந்தபோது, அவரது உறவினர்கள் அவர் ‘ரிக்ஷா ஓட்டத்தான் லாயக்கு’ என கேலி செய்யத் தொடங்கினர். அவரால் ஒன்றும் செய்ய முடியாது என நண்பர்களும் குடும்ப உறுப்பினர்களும் அவரை கிண்டல் செய்தனர்.
இப்படிப்பட்ட கிண்டல்களைக் கேட்டாலும், கிரிஷ் மனம் தளராமல் படிப்பைத் தொடர்ந்தார். படிப்பை முடித்தவுடன் அவருக்கு முதல் வேலை ஹெச்.சி.எல். (HCL) -இல் கிடைத்தது. பின்னர் சோஹோ என்ற மென்பொருள் நிறுவனத்தில் அவர் முன்னணி பொறியாளராக ஆனார். இன்று 12 ஆம் வகுப்பில் தோல்வியுற்ற கிரீஷ் 53000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தின் முதலாளியாக இருக்கிறார்!!
Girish Mathrubootham
கிரீஷ் மாத்ருபூதம் என்ற நபரை பலருக்கு தெரியாமல் இருக்கலாம். அவருடைய ஃப்ரெஷ்வொர்க்ஸ் (Freshworks) நிறுவனத்தின் பெயரை பலர் கேள்விப்பட்டிருக்காமல் இருக்கலாம். ஆனால் 12 ஆம் வகுப்பில் தோல்வி அடைந்த ஒரு நபர் ஆயிரக்கணக்கான கோடிகள் மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்க அடிப்படையாக இருந்த வணிக உத்தியை கண்டிப்பாக அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்.
ஒரு வாரத்தில் ரூ.340 கோடி வருமானம்
கிரிஷ் மாத்ருபூதம் SaaS (Software as a Service) வணிகத்தைத் தொடங்கினார். அவரது நிறுவனமான Freshworks -க்கு SaaS துறையில் ஒரு பெரிய பெயர் உள்ளது. இந்த நிறுவனம் அமெரிக்க பங்குச் சந்தையான நாஸ்டாக்கில் பட்டியலிடப்படும் அளவுக்கு உயர்ந்தது. டைகர், கூகுள் (ஆல்பபெட்) போன்ற நிறுவனங்கள் இதில் முதலீடு செய்துள்ளன. இவரது நிறுவனத்தின் மதிப்பு சுமார் 53,000 கோடி ரூபாய். சமீபத்தில் நிறுவனத்தின் 25 லட்சம் பங்குகளை விற்று அவர் 3.96 கோடி டாலர் (ரூ.336.41 கோடி) சம்பாதித்துள்ளார்.
கிரீஷ் மாத்ருபூதம் 2010 இல் ஜோஹோவில் தனது வேலையை விட்டார். அதன் பிறகு அவர் Freshworks -ஐ உருவாக்கினார். 2018 ஆம் ஆண்டளவில் 125 நாடுகளில் இருந்து 1 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களை அவர் கொண்டிருந்தார்.
தற்போது கிரீஷ் மாத்ருபூதம் நிறுவனத்தில் 5.229 சதவீத பங்குகளை வைத்துள்ளார். இவரது சொத்து மதிப்பு சுமார் 2369 கோடி ரூபாய் ஆகும்.
What is SaaS Company: SaaS நிறுவனம் என்றால் என்ன?
- SaaS நிறுவனங்கள் Software as a Service என பொருள். அதாவது, இந்த சாஸ் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மென்பொருளைப் பயன்படுத்துவதற்கான ஆன்லைன் வசதியை வழங்குகின்றன.
- SaaS நிறுவனங்கள் அளிக்கும் சேவை காரணமாக, வாடிக்கையாளர்கள் மென்பொருளை வாங்கி நிறுவ வேண்டிய தேவை நீக்கபடுகின்றது.
- SaaS வணிக மாதிரியில், மென்பொருளை வாங்குவதற்கு பதிலாக, வாடிக்கையாளர் அதை சந்தா அடிப்படையில் வாடகைக்கு எடுத்து வாடகை செலுத்துகிறார்.
- இந்த நிறுவனம் பயன்படுத்த எளிதான 'ரெடி டு கோ' மென்பொருளை உருவாக்குகிறது.
- இதற்காக, நிறுவனம் தனது சொந்த வாடிக்கையாளர் பராமரிப்பு அழைப்பு ஆதரவையும் உருவாக்கியுள்ளது.
- இங்கு எந்த நேரத்திலும் தேவையான தகவல்களை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.
- இதற்கு வாடிக்கையாளர்கள் கூடுதல் வன்பொருள் எதையும் நிறுவ வேண்டிய அவசியம் இல்லை.
- இதன் காரணமாக மக்கள் இந்த வணிக மாதிரியை விரும்புகிறார்கள்.
- சந்தா அடிப்படையிலான மாதிரியின் காரணமாக, நிறுவனங்கள் நல்ல வருமானம் ஈட்டுகின்றன.
பிரபலமடைந்து வரும் SaaS தொழில்துறை
2030-ம் ஆண்டுக்குள் SaaS நிறுவனங்களின் மதிப்பு 1 லட்சம் டிரில்லியன் டாலருக்கும் அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இந்தத் துறையில் 5 லட்சம் வேலைவாய்ப்புகள் இருக்கும். உலகெங்கிலும் உள்ள வணிகங்கள் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் ஆட்டோமேஷனை அதிக அளவில் ஊக்குவித்து வருவதால், இந்தத் தொழில் மற்றும் வணிகத்தின் வளர்ச்சிக்கு அபரிமிதமான சாத்தியங்கள் உள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.
SaaS நிறுவனங்களின் வணிக மாதிரி உயர் சந்தை விற்பனை மற்றும் அதன் தயாரிப்புகளை அடிப்படையாகக் கொண்டது. பொதுவாக மென்பொருள் விலை உயர்ந்ததாக இருப்பதாலும், அவற்றின் பயன்படுத்த எளிதானது அல்ல என்பதாலும், SaaS நிறுவனங்கள் பயன்படுத்த எளிதான 'ரெடி டு கோ' மென்பொருளை உருவாக்குகின்றன. மென்பொருளைப் பயன்படுத்துவதை எளிதாக்க, நிறுவனங்கள் இதற்கான வாடிக்கையாளர் பராமரிப்பு அழைப்பு ஆதரவையும் வழங்குகின்றன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ