7வது ஊதியக்குழு லேட்டஸ்ட் அப்டேட்: அகவிலைப்படி தவிர, மத்திய அரசு ஊழியர்களுக்கு பலவிதமான அலவன்ஸ்கள் கிடைக்கிறது. இவற்றில் ஒன்று வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA). இந்த உயர்வு தொடர்பான விதிகளை மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இந்த விதி அகவிலைப்படியுடன் தொடர்புடையது என்பதால் 2024ஆம் ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தியுடன் தொடங்கும். விரைவில் அவர்களது அகவிலைப்படி (DA) அதிகரித்து 50 சதவீதத்தை தாண்டும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 46% வழங்கப்படுகிறது. ஆனால், அகவிலைப்படி அதிகரிப்புடன், ஊழியர்களின் இதர அலவன்ஸும் 3 சதவீதம் உயரும். இதனால் அவரது சம்பளம் பெருமளவில் உயர வாய்ப்பு உள்ளது.


கொடுப்பனவுகளில் 3 சதவீத அதிகரிப்பு


2021 ஆம் ஆண்டில், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 25% ஐத் தாண்டியபோது HRA இல் திருத்தம் செய்யப்பட்டது. ஜூலை 2021 இல், DA 25% ஐத் தாண்டியவுடன், HRA 3% அதிகரித்தது. HRA இன் தற்போதைய விகிதங்கள் 27%, 18% மற்றும் 9% ஆகும். புதிய ஆண்டில் அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நடந்தால், மீண்டும் ஒருமுறை HRA இல் 3 சதவீதம் திருத்தம் செய்யப்படும்.  


HRA இன் பலனைப் பெறும் பணியாளர்கள் 


மத்திய அரசு ஊழியர்களுக்கான வீட்டு வாடகை கொடுப்பனவில் (HRA) DoPT அகவிலைப்படியின் அடிப்படையில் திருத்தம் செய்கிறது. அனைத்து ஊழியர்களும் HRA (House Rent Allowance) இன் அதிகரிப்பின் பலன் கிடைக்கும். எந்த நகரத்தில் வசிக்கிறார்கள் என்பதன் அடிபடையில், HRA 27 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 9 சதவீதம் என்ற விகிதத்தில் கொடுக்கப்படும். 2015-ம் ஆண்டு இதற்கான குறிப்பாணையை அரசு வெளியிட்டது. இதில் ஹெச்ஆர்ஏ டிஏவுடன் இணைக்கப்பட்டன.


மேலும் படிக்க | பான்-ஆதார் இல்லாமல் தங்கம் வாங்கலாம்.. ஆனா ஒரு கண்டிஷன், உடனே தெரிஞ்சிக்கோங்க


HRA 30 சதவீதத்தை தாண்டும்


வீட்டு வாடகை கொடுப்பனவில் அடுத்த திருத்தம் 3% ஆக இருக்கும். அதிகபட்ச தற்போதைய விகிதம் 27 சதவீதம். திருத்தத்திற்குப் பிறகு HRA 30% ஆக இருக்கும். ஆனால், அகவிலைப்படி 50% அடையும் போதுதான் இது நடக்கும். அரசின் குறிப்பாணையின்படி (memorandum), DA 50 சதவீதத்தை எட்டியவுடன், HRA 30%, 20% மற்றும் 10% ஆக மாறும். X, Y மற்றும் Z வகுப்பு நகரங்களின்படி வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) வகைகள் உள்ளன.


எக்ஸ் பிரிவில் வரும் மத்திய ஊழியர்களுக்கு 27 சதவீத ஹெச்ஆர்ஏ கிடைக்கிறது, இது டிஏ 50% என்றால் 30% ஆகிவிடும். அதே நேரத்தில், ஒய் கிளாஸ் நபர்களுக்கு இது 18 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயரும். இசட் வகுப்பு மக்களுக்கு இது 9 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயரும்.


HRA இல் X,Y மற்றும் Z பிரிவுகள் என்ன?


50 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்கள் X பிரிவில் வருகின்றன. இந்த நகரங்களில் பணியமர்த்தப்படும் மத்திய பணியாளர்களுக்கு 27 சதவீதம் ஹெச்ஆர்ஏ வழங்கப்படும். அதேசமயம் Y பிரிவு நகரங்களில் இது 18 சதவீதமாகவும், Z பிரிவில் 9 சதவீதமாகவும் இருக்கும்.


மேலும் படிக்க | EPFO அளித்த மிகப்பெரிய செய்தி: கணக்கில் வட்டித்தொகை.. மகிழ்ச்சியில் பிஎஃப் சந்தாதாரர்கள்


HRA எவ்வாறு கணக்கிடப்படுகிறது?


7வது ஊதிய மேட்ரிக்ஸின் படி, லெவல்-1ல் உள்ள கிரேடு பேயில் மத்திய ஊழியர்களின் அதிகபட்ச அடிப்படை சம்பளம் மாதம் ரூ.56,900 ஆகும், பிறகு அவர்களின் எச்.ஆர்.ஏ 27 சதவீதம் என்ற விகிதத்தில் கணக்கிடப்படுகிறது. இதை சுலபமான கணக்கீட்டின்படி புரிந்துக் கொள்ளலாம்.


HRA = ரூ 56,900 x 27/100 = மாதம் ரூ 15,363


30% HRA இருந்தால் = ரூ 56,900 x 30/100 = மாதம் ரூ 17,070


HRA இன் மொத்த வேறுபாடு: மாதத்திற்கு ரூ 1,707


ஆண்டு HRA அதிகரிப்பு - ரூ 20,484


மேலும் படிக்க | உலகப் பொருளாதாரங்களில் 4வது இடம் பிடித்து இந்தியா சாதனை! முதலிடம் எப்போது?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ