புதுடெல்லி: கிராஜுவிட்டி தொடர்பான அரசு அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்த மத்திய அரசு ஊழியர்களுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதாவது பணிக்கொடையில் தானாகவே அதிகரித்த 25% உயர்வை நிறுத்திவைப்பதாக EPFO அறிவித்துள்ளது. இதன் பின்னணியைத் தெரிந்துக் கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டிஏ உயர்வு


இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் DA 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது. அரசு ஊழியர்களுக்கான (Central Government Employees) ஊதிய நிர்ணய விதிகளின்படி, கிராஜுவிட்டியின் உச்சவரம்பு தானாகவே உயர்த்தப்படும் என்பதால், இதுவரை 25 சதவிகிதமாக இருந்துவந்த கிராஜுவிட்டியும் 50 சதவிகிதமாக உயர்ந்தது. .


அதன்படி, ஓய்வூதியம் மற்றும் இறப்பு பணிக்கொடை 25 சதவீதம் உயர்த்துவது குறித்த சுற்றறிக்கையையும் மத்திய அரசு வெளியிட்டிருந்த நிலையில், தற்போது அந்த சுற்றறிக்கையை நிறுத்தி வைப்பதாக ஓய்வூதிய நிதி அமைப்பான ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees’ Provident Fund Organisation (EPFO)) அறிவித்துள்ளது அரசு ஊழியர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.


மேலும் படிக்க | உங்கள் PF கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது? தெரிந்து கொள்ள எளிய வழிகள்!


EPFO சுற்றறிக்கை


 2024 மே மாதம் ஏழாம் தேதியன்று வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஊழியர்களுக்கான ஓய்வு மற்றும் இறப்பு கிராஜுவிட்டியின் உயர்வை "தவிர்க்க" முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


"30.4.2024 தேதியிட்ட HRD-1/8/2024/Misc-Circulars-Part(1)/1004 என்ற சுற்றறிக்கை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது" என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சக உத்தரவு


ஏப்ரல் 30, 2024 அன்று இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்ட அலுவலக உத்தரவு இவ்வாறு தெரிவிக்கிறது, “OM எண்ணின் பாரா 6.2 இன் படி, அடிப்படை ஊதியத்தில் 50% என்ற அளவில் அகவிலைப்படி உயரும் போதெல்லாம், ஓய்வூதியம் மற்றும் இறப்பு பணிக்கொடையின் அதிகபட்ச வரம்பு 25% அதிகரிக்கப்படும். இந்த உத்தரவு 38/3712016-P&PW(A)(1) தேதி 04.08.2016 இன் அடிப்படையில், ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறை, பணியாளர்கள், பொதுக் குறைகள் மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகத்தால் வெளியிடப்பட்டது.


கிராஜுவிட்டி அதிகரிப்பு எவ்வளவு?


மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி, அடிப்படை ஊதியத்தில் 50% ஆக மாற்றியமைத்தால், ஓய்வூதியம் மற்றும் இறப்பு பணிக்கொடைக்கான அதிகபட்ச வரம்பு தற்போதுள்ள ரூ.20 லட்சம் என்பதில் இருந்து 25% அதிகரிக்கப்பட்டு, 25 லட்சம் ரூபாயாக அதிகரித்திருக்கும். 


மேலும் படிக்க | Investment Tips: PPF மற்றும் EPF -ல் ஒரே நேரத்தில் முதலீடு செய்யலாமா? விதிகள் என்ன சொல்கிறது


DA என்பது, 50 சதவீதம் என்ற அதிகபட்ச நிலையை அடையும்போது, கிராஜுவிட்டி வரம்பு மற்றும் பிற கொடுப்பனவுகளும் தானாகவே திருத்தப்படும். இதன் அடிப்படையில் DA உயர்வுடன், இந்த கருணைத் தொகையை தானாக திருத்துவதற்கான விதிகள் மற்றும் சூத்திரங்களும் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், EPFO வெளியிட்ட அண்மை சுற்றறிக்கையின் மூலம், கிராஜுவிட்டியை உயர்த்துவதற்கான திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்பது தெளிவாகிவிட்டது. இது மத்திய அரசு ஊழியர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.  


மார்ச் 2024 -DA 50 சதவீத உயர்வு
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (டிஏ) மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணம் (டிஆர்) கூடுதல் தவணையாக வழங்க மத்திய அமைச்சரவை மார்ச் 7 அன்று ஒப்புதல் அளித்திருந்தது. டிஏ அதிகரிப்புடன், போக்குவரத்து அலவன்ஸ், கேன்டீன் அலவன்ஸ், டெபுடேஷன் அலவன்ஸ் உள்ளிட்டவைகளும் 25 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளன.


மத்திய அரசு பணியாளர்களுக்கான சம்பளத்தில், அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகிய இரண்டின் மூலம் அரசுக்கு ஏற்படும் ஒட்டுமொத்த செலவு  ஆண்டுக்கு ரூ.12,868.72 கோடியாக இருக்கும். இதன் மூலம் சுமார் 49.18 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 67.95 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் என்று அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவித்திருந்தது.


மேலும் படிக்க | Ration Card Rules: ரேஷன் கார்டில் புதிய உறுப்பினரை சேர்க்கணுமா? உடனே இதை படிக்கவும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ