40 சதவிகித ஏற்றுமதி வரி திரும்ப பெறப்படுமா? கண்ணீர் சிந்தும் வெங்காயம்
Onion Rate And Strike: வெங்காயம் மீதான ஏற்றுமதி வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் போராடி வந்தனர். இதன் எதிரொலி வெங்காய ஏலத்தில் எதிரொலித்தது
மும்பை: நமது அன்றாட உணவில் அங்கமாகிவிட்ட வெங்காயம் மற்றும் தக்காளி விலை குறித்து அடிக்கடி பேசப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக, நாட்டில் தக்காளியின் விலை மிகவும் உயர்ந்து, மக்களின் வாழ்க்கையில் தக்காளிக்கு பதில் புளி இடம் பெறத் தொடங்கியது. அதன்பிறகு, தக்காளியின் விலை குறைந்து, இயல்பு நிலைக்கு வந்தது.
அதேபோல, கடந்த சில நாட்களாக வெங்காய விலை குறித்த பேச்சு அதிக அளவில் அடிபட்டது. வெங்காய விலை தொடர்பாக வியாபாரிகள் கடையடைப்பு போராட்டங்களையும் நடத்தினர். வெங்காயம் மீதான ஏற்றுமதி வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் போராடி வந்தனர். இதன் எதிரொலி வெங்காய ஏலத்தில் எதிரொலித்தது.
வெங்காயம் மீதான ஏற்றுமதி வரியை 40 சதவீதம் உயர்த்திய மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த வெங்காய வியாபாரிகள், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். செப்டம்பர் 20 முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு ஏலம் நிறுத்தப்பட்டது.
சுமார் 13 நாட்களுக்குப் பிறகு இன்று (2023, அக்டோபர் 3) செவ்வாய்க்கிழமை மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் அனைத்து விவசாய உற்பத்தி சந்தை கமிட்டிகளிலும் (APMC) மீண்டும் வெங்காய ஏலம் தொடங்கியது. ஆசியாவின் மிகப்பெரிய மொத்த வெங்காய சந்தையான லசல்கான் ஏபிஎம்சிக்கு செவ்வாய்கிழமை காலை வெங்காய வண்டிகள் வந்தடைந்தன.
மேலும் படிக்க |செப்டம்பரில் ஆழ வைக்கும் வெங்காயம்
வெங்காயம் விலை
பல நாட்கள் தொடர்ந்த போராட்டத்தால், வெங்காய வரத்து நின்றிருந்ததால், இன்று சந்தைக்கு வந்த வெங்காயத்தின் விலை தொடர்பான தகவல்களும் செய்திகளில் முதலிடம் பிடித்துள்ளன. ஆரம்ப அமர்வில், வெங்காயத்தின் விலை குவிண்டாலுக்கு குறைந்தபட்சம் ரூ.1,000 ஆகவும், அதிகபட்சமாக குவிண்டாலுக்கு ரூ.2,541 ஆகவும், சராசரியாக குவிண்டாலுக்கு ரூ.2,100 ஆகவும் இருந்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
வேலை நிறுத்த வாபஸ் முடிவு
வணிகர்கள், நேற்று (2023, அக்டோபர் 2 திங்கள்கிழமை) மாவட்ட காவல் துறை அமைச்சர் தாதா பூஸுடன் நடத்திய கூட்டத்திற்கு பிறகு சமாதானம் ஆனார்கள். வணிகர்களின் கோரிக்கைகள் குறித்து அரசு ஒரு மாதத்தில் முடிவெடுக்கும் என்ற உறுதிமொழியின் பேரில் வேலைநிறுத்தத்தை கைவிட வணிகர்கள்ல் முடிவு செய்தனர்.
ஆனால், நந்தகோவில் வட்டார வணிகர்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறாததால், அங்கு ஏலம் நிறுத்தப்பட்டுள்ளது. அவ்வப்போது வெங்காயங்களின் (சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம்) விலை உச்சத்தை தொடும். ஒரு கட்டத்தில் பெரிய வெங்காயத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நிலை ஏற்பட்டது.
இந்தியாவில், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மகராஷ்ட்ரா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, மேற்கு வங்கம், குஜராத், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் பெரிய வெங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
அதேவேளையில், சின்ன வெங்காயம் (சாம்பார் வெங்காயம்) தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அதிலும், தமிழ்நாட்டில், தேனி, திண்டுக்கல், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், கோயம்புத்தூர், என பல மாவட்டங்களில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. சின்ன வெங்காயத்தின் பயன்பாடு தென்னிந்தியாவில் அதிக அளவில் உள்ளது.
வெங்காயம் உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்கும் நல்லது. உடலுக்கு குளிர்ர்சியைத் தரும் வெங்காயம் உணவின் சுவையை கூட்டுகிறது என்பதால், வெங்காயம் பெருமளவில் சமையலில் பயன்படுத்தப்படுகிறது.
மேலும் படிக்க | தனியா இருந்தா ஓகே! ஆனா கூட்டு சேர்ந்தா வயித்துவலி கேரண்டி! இது ஃபுட் காம்போ அலர்ட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ