Travel Insurance: பயணக் காப்பீடு என்பது பொதுவாக பலரும் எடுக்காத காப்பீடுகளில் ஒன்றாக இருக்கிறது. வாகனக் காப்பீடு, சுகாதார காப்பீடு, ஆயுள் காப்பீடு என்பவை முக்கியமானதாக பார்க்கப்படும் நிலையில், பயணக் காப்பீடு பற்றிய விழிப்புணர்வும் மக்களிடையில் இல்லை. விமானம் தாமதம், ரத்து போன்ற பிரச்சனைகளை பலரும் தினந்தோறும் சந்திக்கிறோம். இதுபோன்ற பல பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும் பயணக் காப்பீடு பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பயணக் காப்பீடு உங்கள் பயணத்தின் போது ஏற்படும் பல வகையான அபாயங்களை உள்ளடக்கியது மற்றும் உங்கள் பயணத்தை பாதுகாப்பானதாக்குகிறது. கடந்த சில நாட்களாக, குளிர் மற்றும் மூடுபனி காரணமாக, டெல்லியில் விமானங்கள் தாமதம் மற்றும் விமானங்கள் ரத்து செய்யப்படும் சம்பவங்களை தினசரி கேட்டு வருகிறோம். இதனால், பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில், பயணக் காப்பீடு வைத்திருந்தால், விமான நிறுவனத்திடம் இழப்பீடு கேட்க முடியும்.


பயணக் காப்பீடு உங்கள் பயணத்தின் போது ஏற்படும் பல வகையான அபாயங்களை உள்ளடக்கியது மற்றும் உங்கள் பயணத்தை பாதுகாப்பானதாக மாற்றுகிறது. பயணக் காப்பீட்டின் நன்மைகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.


மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி: இனி இந்த ஊழியர்களுக்கு பென்ஷன், கிராஜுவிட்டி கிடைக்காது


பயணக் காப்பீட்டின் நன்மைகள்
பயணத்தின் போது உங்கள் உடல்நிலை மோசமடைந்தால், உங்கள் பயணக் காப்பீட்டுக் பாலிசி அதை ஈடு செய்யும். இதில், மருத்துவமனை கட்டணம், ஆம்புலன்ஸ் கட்டணம் போன்றவையும் அடங்கும். அதேபோல, பயணத்தின் போது உங்கள் சாமான்கள் திருடுபோனால், அதன் இழப்பையும் பயணக் காப்பீடு மூலம் ஈடுசெய்யலாம். பாஸ்போர்ட் அல்லது ஏதேனும் முக்கியமான ஆவணம் தொலைந்தாலும் உங்களுக்கு நிவாரணம்கிடைக்கும்.


ஏதேனும் அவசரநிலை காரணமாக உங்கள் கனெக்டிங் ஃப்ளைட்டைத் தவறவிட்டால், அதனால் ஏற்படும் அதிக செலவை பயணக் காப்பீடு திட்டம் கொடுக்கும். அதேபோல, விமானம் தாமதமாகி, ரத்து செய்யப்பட்டாலும், பயணக் காப்பீட்டின் கீழ் க்ளைம் செய்து இழப்பை ஈடுசெய்யலாம். விமானம் 2 முதல் 3 மணி நேரம் கூட தாமதமானால், பயணக் காப்பீடு மூலம் பல நன்மைகளைப் பெறலாம்.


உங்கள் விமானம் தாமதமானால், நீங்கள் அருகிலுள்ள ஹோட்டலில் தங்கலாம். அத்தகைய சூழ்நிலையில், தங்குமிடம் மற்றும் உணவுக்கான செலவினங்களுக்காக நீங்கள் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து திருப்பிச் செலுத்தலாம்.


பயணத்தின் போது ஏதேனும் விபத்து ஏற்பட்டால், பயணக் காப்பீடு மூலம் உதவி பெறலாம். விபத்து மரணம், நிரந்தர ஊனம் போன்றவையும் இதில் அடங்கும்.  இவை அனைத்தையும் தவிர பயணத்தின் போது ஏற்படும் இழப்பு அல்லது சாமான்கள் சேதம் போன்ற அனைத்து பிரச்சனைகளையும் காப்பீடு மூலம் ஈடுசெய்ய முடியும்.


மேலும் படிக்க | பிப்ரவரி 1 முதல் முக்கிய விதிகளில் மாற்றம்... நோட் பண்ணிக்கோங்க மக்களே..!!


பயண காப்பீட்டிற்கான பிரீமியம்
ஒற்றை பயணத் திட்டம், பல பயணத் திட்டம், உள்நாட்டுத் திட்டம் அல்லது சர்வதேசத் திட்டம், தனிநபர் அல்லது குழு பயணத் திட்டம், மாணவர்கள் திட்டம் அல்லது மூத்த குடிமக்கள் திட்டம் போன்ற பல வகையான பயணக் காப்பீட்டுத் திட்டங்கள் உள்ளன. இந்த திட்டங்களுக்கு ஏற்றபடி பிரீமியம் தீர்மானிக்கப்படுகிறது இந்த பாலிசியின்படி, பல்வேறு வசதிகள் உள்ளன. நீங்கள் விரும்பினால், பயணக் காப்பீட்டுத் திட்டத்தில் கூடுதல் காப்பீட்டைச் சேர்க்கலாம். ஆனால் கூடுதல் கவரேஜுக்கு பிரீமியமும் அதிகமாக இருக்கும்.


காப்பீட்டு பாலிசி தேர்வு செய்வது எப்படி?
பயணக் காப்பீட்டுத் திட்டத்தை வாங்க முடிவு செய்திருந்தால், உங்கள் தேவைக்கேற்ப பாலிசியைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் தேவைக்கு ஏற்ப உங்களுக்கு என்ன பாதுகாப்பு தேவை என்பதை இன்சூரன்ஸ் ஏஜெண்டிடம் சொல்லி, அதற்கேற்ப திட்டத்தை முடிவு செய்யுங்கள். உள்நாட்டு பயணங்களுக்கான காப்பீடு எடுக்கும்போது, அதற்கான பிரத்யேக திட்டத்தை எடுத்தால் போதும்.


ஒரு பயணத்தில், முதலில் ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு சென்றபிறகு, வெளிநாடு செல்வது என்றால், உள்நாடு மற்றும் வெளிநாட்டிற்கான பயணம் என இரண்டிற்கும் காப்பீடு எடுக்க வேண்டும்.  


காப்ப்பீடு தொடர்பாக உங்கள் மனதில் எழும் அனைத்து சந்தேகங்கள் மற்றும் அச்சங்கள் தொடர்பான கேள்விகளை காப்பீட்டு முகவரிடம் கேட்டு நிவர்த்தி செய்துக் கொள்ளுங்கள். அதேபோல, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நன்கு புரிந்து கொள்ளுங்கள். பாலிசியை வாங்குவதற்கு முன், பயணத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், உங்கள் பிரீமியம் திரும்பப் பெறத் தகுதியுடையதா என்பதைத் தெரிந்துகொள்ளவும்.


பயணக் காப்பீடு என்பவது, காப்பீடு எடுப்பவருக்கு ஏற்கனவே இருக்கும் நோய், போரின் ஆபத்து, தற்கொலை மற்றும் ஆபத்தான விளையாட்டு போன்றவற்றை உள்ளடக்காது என்பதை நினைவில் கொள்ளவும்.


மேலும் படிக்க | பல நிதியமைச்சர்களின் சாதனைகளை பின்தள்ளி முன்னேறும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ