மக்கள் சக்தி 2024 நிதியாண்டில் இந்திய பொருளாதாரத்தை 7 சதவிகிதத்திற்கு உயர்த்துமா?
Indian Economy: மக்கள் ஆற்றல் மட்டுமே இந்தியாவின் எதிர்கால பொருளாதாரத்தை தீர்மானிக்குமா? இந்தியப் பொருளாதாரத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம், 6.5 சதவிகிதம் இலக்கை எளிதாக அடைந்துவிடும்
2023-24 ஆம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 6.5% ஆக வளர்வது சுலபம் தான். அதற்கான காரணங்கள் என்ன? 2023 ஆம் ஆண்டு, இந்தியப் பொருளாதாரத்துக்கு இரண்டு விதங்களில் குறிப்பிடத்தக்க ஆண்டாக இருக்கிறது. 2023இல் இந்தியா உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட பொருளாதாரமாக மாறியது என்பது இந்தியாவிற்கு பொருளாதாரத்திற்கு முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது.
அடுத்ததாக, கொரோனா பெருந்தொற்றுக் காலத்துக்குப் பிறகு, பொருளாதார சிதைவுகளில் இருந்து மீண்டு வந்த இந்தியப் பொருளாதாரம் சீரான வளர்ச்சியை எட்டியுள்ளது. இந்த நிலையானது, ஒரு தசாப்தத்திற்கு முன்னதாக, சீனா எதிர்கொண்டதைப் போன்ற உயர் வளர்ச்சிப் பாதைக்கு இந்தியா மாறுவதுடன் ஒப்பிடலாம்.
மக்கள்தொகை என்ற மக்கள் ஆற்றல் மட்டுமே இந்தியாவின் எதிர்கால பொருளாதாரத்தை தீர்மானிக்குமா என்றால், அதற்கு ஆம் என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லிவிட முடியாது.ஆனால், மக்கள்தொகை இயக்கவியலை ஆழமாகப் பார்க்கும்போது, இந்திய மக்களில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது, நாட்டின் விரைவான பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்பைத் தூண்டும் என்பதைக் காட்டுகிறது.
இதை வெளிகாட்டும்விதமாக வெளியான இந்திய நிதி அமைச்சகத்தின் அரையாண்டு பொருளாதார ஆய்வு அறிக்கையின்படி, 2023-24 ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம், 6.5 சதவிகிதம் என்ற இலக்கை இயல்பாக எளிதாக அடைந்துவிடும் என்று மத்திய அரசு நம்புகிறது.
மேலும் படிக்க | இனி வங்கிகள் கண்டபடி அபராத கட்டணம் விதிக்க முடியாது... RBI-யின் புதிய விதிகள்!
2023-24 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் எதிர்பார்த்ததை விட சிறந்த வளர்ச்சி மற்றும் FY24 இன் முதல் பாதியில் இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக உருவாவதற்கான வளர்ச்சி வாய்ப்புகளை மேம்படுத்தியுள்ளது.
2023ம் ஆண்டின் அக்டோபர் மற்றும் நவம்பர் மாத பொருளாதார தரவுகள், இந்தியாவின் வலுவான பொருளாதார செயல்பாட்டை பிரதிபலிக்கின்றன.பிஎம்ஐ உற்பத்தி மற்றும் சேவைகள் (PMI Manufacturing and Services) அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் விரிவாக்க மண்டலத்தில் இருந்தன.
அக்டோபர் 2023 இன் ஐஐபி (IIP) மற்றும் எட்டு முக்கிய தொழில்களின் குறியீட்டின் முத்திரைகள் உற்பத்தி நடவடிக்கைகளில் நீடித்த வளர்ச்சியை எடுத்துக்காட்டுகின்றன என பொருளாதார அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
ஓய்வுநேரப் பயணம், வணிகப் பயணம் மற்றும் சமூக நிகழ்வுகளால் சுற்றுலா மற்றும் ஹோட்டல் துறையில் ஏற்பட்டுள்ள எழுச்சியால், சேவைத் துறையில் ஊக்கம் ஏற்பட்டுள்ளது. அதேபோல, நுகர்வு தேவையில் வளர்ச்சி அதிகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாகன விற்பனை, எரிபொருள் நுகர்வு மற்றும் UPI பரிவர்த்தனைகளில் அதிக வளர்ச்சியுடன் நகர்ப்புற தேவை நிலைமைகள் நெகிழ்ச்சியுடன் உள்ளன. இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன விற்பனையில் வலுவான வளர்ச்சியை பிரதிபலிக்கும் வகையில், கிராமப்புற தேவையும் அதிகரித்து வருகிறது.
மேலும் படிக்க | பங்குச் சந்தைகள் எப்போதெல்லாம் மூடியிருக்கும்? இது 2024ஆம் ஆண்டு அப்டேட்
பணவீக்கத்தில், முக்கிய பணவீக்கத்தில் நிலையான கீழ்நோக்கிய இயக்கம் மற்றும் எரிபொருள் பணவீக்கத்தில் தொடர்ந்து பணவாட்டத்துடன், உணவுப் பொருட்களின் விலையில் தற்காலிக மாற்றங்கள் இருந்தபோதிலும், பணவீக்கம் குறையும் நிலையில் 24ஆம் நிதியாண்டில் பணவீக்கம் சராசரியாக 5.4 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.
சேவைகள் மற்றும் வணிகப் பொருட்கள் ஆகிய இரண்டிற்கும் வர்த்தக நிலுவைகளின் நவம்பர் வெளியீடுகளில் காணப்படுவது போல், இந்தியாவின் வெளித் துறைக்கான கண்ணோட்டம் நம்பிக்கைக்குரியது.
அமெரிக்க டாலர் மற்றும் பிற முக்கிய நாணயங்களுக்கு எதிராக இந்திய ரூபாய் நிலையானதாக இருப்பதும், இந்தியாவிடம் போதுமான அந்நிய செலாவணி இருப்பு என புதிதாய் பிறந்திருக்கும் புத்தாண்டு 2024 நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் மீதான நம்பிக்கைகளை அதிகரிக்கின்றன.
பொருளாதர வளர்ச்சி ஒருபுறம் என்றால், நவம்பர் 2023 முதல் வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீடுகள் அதிகரிப்பு ஆகியவை 2023-24 நிதியாண்டைவிட, அடுத்த அதாவது FY24 பிரகாசமாக இருக்கும் என்று சுட்டிக்காட்டுகிறது.
வெளிநாட்டு முதலீட்டு வரவுகளால், இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் புதிய உச்சங்களை எட்ட உதவும். இது வளர்ச்சி வாய்ப்புகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடையே, இந்திய பொருளாதார வளர்ச்சியின் மீதான நம்பிக்கையை பிரதிபலிக்கிறது என்று அறிக்கை கூறுகிறது.
மேலும் படிக்க | புத்தாண்டு பரிசாக... FD வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ள ‘6’ வங்கிகள்...!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ