பின்னடைவை சந்தித்துள்ள ஆட்டோமொபைல் தொழில்துறைக்கு மத்திய அரசு அனைத்து வகையிலும் உதவும் என்று சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லியில், வாகன உற்பத்தியாளர்கள் அமைப்பின் (SIAM) வருடாந்திர மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துக்கொண்டு பேசிய நிதின் கட்காரி தெரிவிக்கையில்., "ஆட்டோமொபைல் தொழில் பின்னடைவை சந்தித்துள்ளது. ஆட்டோமொபைல் தொழில் மீண்டு வர மத்திய அரசு தன்னால் இயன்ற அனைத்து உதவிகளும் வழங்கும்.


பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு வரியை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளர்கள். இது நல்ல யோசனைதான், இதைப்பற்றி மத்திய நிதி அமைச்சரிடம் பேசுவேன். சிறிது காலத்துக்கு GST வரியை குறைத்தால் கூட அது நன்மை பயக்கும். வாகன விற்பனையை அதிகரிக்க இந்த துறைக்கு இப்போது உதவுவது அவசியம். வாகன விற்பனையை அதிகரிக்க நிதி நிறுவனங்களையும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வைத்திருக்க வேண்டும்" என தெரிவித்தார்.


மேலும்., மின்சார வாகனங்களுக்கு GST குறைத்துள்ளோம். அதுபோல், ‘ஹைபிரிட்’ வாகனங்களுக்கும் வரியை குறைக்க பாடுபடுவேன். பெட்ரோல், டீசல் வாகனங்களை மத்திய அரசு தடை செய்யப் போவதாக தகவல் பரவி வருகிறது. அப்படி எந்த திட்டமும் மத்திய அரசுக்கு இல்லை. 


சர்க்கரை தொழிலுக்கு ஏற்றுமதி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அதுபோல், ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுக்கும் ஏற்றுமதி ஊக்கத்தொகை வழங்குவது பற்றி மத்திய நிதி அமைச்சகத்திடன் கோரிக்கை வைப்போம்.


அடுத்த 3 மாதங்களில், ரூ.5 லட்சம் கோடி மதிப்புள்ள சாலை போடும் ஒப்பந்தங்களை மத்திய அரசு அளிக்கவுள்ளது. இதற்காக 68 சாலை திட்டங்களை தேர்வு செய்துள்ளோம். 80% நிலங்களை கையகப்படுத்தி விட்டோம். இந்த சாலைகள் மூலம் வணிக வாகனங்களுக்கான தேவை அதிகரிப்பதால், ஆட்டோமொபைல் துறைக்கு அது உதவிகரமாக இருக்கும்." என தெரிவித்தார்.