Yes Bank வாடிக்கையாளரா நீங்கள்? Reward Points பற்றிய ஒரு good news உங்களுக்கு…..
கிரெடிட் கார்டு ரிவார்ட் புள்ளிகளைக் கொண்டு அதற்கு ஈடான நிலுவைத் தொகையைக் (outstanding amount) குறைத்துக்கொள்ளும் ஒரு ஆப்ஷனும் உள்ளது.
Yes Bank, வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட பல புதிய முயற்சிகளில் கவனம் செலுத்தி வருகிறது. இதன் கீழ், தனது கிரெடிட் கார்டுகளில் புதிய அம்சங்களை வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய அம்சங்களில் வெகுமதி புள்ளிகளைப் பகிர்வதும் அடங்கும். இப்படிப்பட்ட அம்சம் இந்திய வங்கித் துறையில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என Yes Bank கூறியுள்ளது.
Yes Bank-ன் கிரெடிட் கார்ட் வைத்திருப்பவர்கள், இப்போது தங்கள் கிரெடிட் கார்டு ரிவார்ட் பாயிண்டுகளை (reward points) தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிரலாம். வெகுமதி புள்ளிகளை Yes Bank கார்ட் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுடன் மட்டும்தான் பகிர்ந்து கொள்ள முடியும் என்று வங்கி தெளிவுபடுத்தியது.
"வங்கியின் கிரெடிட் கார்ட் மெம்பர்சுக்குள் ரிவார்ட் புள்ளிகளை பகிர்ந்து கொள்ளக்கூடிய இந்த அம்சத்தை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது வங்கித் துறையில் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்படுகிறது. இது நாட்டின் கிரெடிட் கார்டு துறையில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று Yes Bank-ன் லோன் கார்ட்ஸ் வணிகத் தலைவர் ரஜனிஷ் பிரபு கூறினார்.
ALSO READ: Survey-ல் பங்கு கொண்டால் பணம்: இதை நம்பி மோசம் போகாதீர்கள், உஷார்!!
கிரெடிட் கார்டு (Credit Card) ரிவார்ட் புள்ளிகளைக் கொண்டு அதற்கு ஈடான நிலுவைத் தொகையைக் (outstanding amount) குறைத்துக்கொள்ளும் ஒரு ஆப்ஷனும் உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட YES BANK கிரெடிட் கார்டுகளில் இந்த தனித்துவமான அம்சம் கிடைக்கும். YES BANK கிரெடிட் கார்டு மூலம் இருப்பு கொடுப்பனவுகளுடன் இணைந்து வெகுமதி புள்ளிகளை மீட்டெடுக்க வங்கி பயனர்களை அனுமதிக்கிறது. மேலும், வாலெட்டுகளை கிரெடிட் கார்டு மூலம் ரீசார்ஜ் செய்தால் வாடிக்கையாளர்களுக்கு ரிவார்ட் புள்ளிகள் கிடைக்கும். காப்பீட்டு பிரீமியத்தை செலுத்துவதிலும் ரிவார்ட் பாயிண்டுகள் கிடைக்கும்.
YES Rewardz மூலம் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால், கன்வீனியன்ஸ் ஃபீ இருக்காது என வங்கி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட வகைகளான - பயணம், உணவு, மளிகை – ஆகியவற்றில் ரிவார்ட் புள்ளிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
"பயணம், சாப்பாட்டு போன்ற இன்னும் பல வகைகளில் உள்ள மற்ற அற்புதமான அம்சங்கள் கூடுதல் ரிவார்ட் புள்ளிகளை அளித்து உங்கள் அனுபவத்தை மேலும் மேம்படுத்தும். எங்கள் சேவைகளைப் பயன்படுத்தும் போது தனித்துவமான நன்மைகளையும் வேறுபட்ட ரிவார்ட் அனுபவத்தையும் வழங்க நாங்கள் காத்திருக்கிறோம்” என்று பிரபு மேலும் தெரிவித்தார்.
Credit Cards Rewards Portal-ல் சென்று வாடிக்கையாளர்கள் இந்த புதிய அம்சங்களை அனுபவிக்கலாம் என்று வங்கி தெரிவித்துள்ளது.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR