New Delhi: தனியார் துறை வங்கியான YES Bank குழுவை கலைத்துவிட்டது ரிசர்வ் வங்கியின் முழு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கடன் சுமையில் சிக்கித்தவித்த எஸ் வங்கியை மீட்டெடுக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தவிர, வைப்புத்தொகையாளர்களுக்கு மாதத்திற்கு ஒரு முறை ரூ.50,000 மட்டுமே திரும்பப் பெற RBI ஒரு வரம்பை நிர்ணயித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) இன் முன்னாள் தலைமை நிதி அதிகாரி (சிஎஃப்ஒ) பிரசாந்த் குமாரையும் வங்கியின் நிர்வாகியாக மத்திய ரிசர்வ் வங்கி நியமித்துள்ளது. 


மேலும் படிக்க: அறிந்துக்கொள்வோம்.. இனி வீட்டில் இருந்தபடியே வங்கி கணக்கை திறக்கலாம்..


அதேவேளையில் நெருக்கடியில் சிக்கியுள்ள வைப்புத்தொகையாளர்களுக்கு ரிசர்வ் வங்கி சில நிவாரணங்களையும் வழங்கியுள்ளது.


ரிசர்வ் வங்கியின் (Reserve Bank of India) கூற்றுப்படி, ஒரு வாடிக்கையாளர் மருத்துவ அவசரநிலை, வீட்டு திருமணம் அல்லது கல்வி தொடர்பான செலவுகளுக்கு அதிக பணம் எடுக்க வேண்டும் என விரும்பினால், அவர் ரூ .5 லட்சம் வரை திரும்பப் பெறலாம். எனக் கூறியுள்ளது. இதற்காக சரியான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அப்போதுதான் 50 ஆயிரத்துக்கும் அதிகமான தொகையை திரும்பப் பெற வங்கி வாடிக்கையாளருக்கு ஒப்புதல் அளிக்கப்படும்.


மேலும் படிக்க: YES வங்கி வாடிக்கையாளர்கள் பணம் பத்திரமாக உள்ளது -நிர்மலா சீதாராமன்!


1949 வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தின் 45 வது பிரிவின் கீழ் Yes Bank ஐ தடை செய்வதை தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


Yes Bank ஆகஸ்ட் 2018 முதல் நெருக்கடியில் உள்ளது. அந்த நேரத்தில், செயல்பாட்டு முறைகேடுகள் மற்றும் கடன் தொடர்பான குறைபாடுகள் காரணமாக, அப்போதைய வங்கியின் தலைவரான ராணா கபூரை 2019 ஜனவரி 31 ஆம் தேதி வரை பதவியில் இருந்து விலகி இருக்குமாறு கேட்டுக் கொண்டது குய்`குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: மோடியும் அவரது கருத்துக்களும் இந்தியாவின் பொருளாதாரத்தை அழித்துவிட்டன.. ராகுல் தாக்கு