பாரதி ஏர்டெல் நாடு முழுவதும் உள்ள தனது பயனர்களுக்கு 11GB தரவை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல் (Airtel) தனது பயனர்களை கவர புதிய திட்டங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது, பாரதி ஏர்டெல் நாடு முழுவதும் உள்ள தனது பயனர்களுக்கு 11GB தரவை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. இதற்க்கு முன்பு, புதிய ஏர்டெல் 4G வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக 5GB டேட்டா வழங்கியது. மேலும், அவர்கள் ‘Airtel Thanks App’ பயன்பாட்டைப் பதிவிறக்கம் செயதான் மூலம் அதை எளிதாகப் பெறலாம். புதிய ஏர்டெல் 4G பயனர்கள் தங்கள் எண்ணை ஏர்டெல் தேங்க்ஸ் செயலியில் (Airtel Thanks App) பதிவு செய்யும் போது, அவர்களுக்கு 5GB தரவு இலவசமாக கிடைக்கும்.


இருப்பினும், 5GB தரவு முற்றிலும் ஒரே நேரத்தில் கிடைக்காது. இது ஐந்து 1GB கூப்பன்கள் வடிவில் கிடைக்கும். கூப்பன்கள் பயனரின் கணக்கில் 72 மணி நேரத்திற்குள் கிடைக்கும். குறிப்பாக, புதிய ஏர்டெல் வாடிக்கையாளர் அல்லது புதிதாக 4G சிம் (4G SIM) கார்டுக்கு மேம்படுத்தப்பட்டிருந்தால் மட்டுமே சலுகையை கோர முடியும். மேலும், இலவச 5GB தரவைப் பெறுவதற்காக புதிய சிம் கார்டை இயக்கிய 30 நாட்களுக்குள் பயனர் ஏர்டெல் தேங்க்ஸ் பயன்பாட்டை நிறுவி அமைக்க வேண்டும்.


ALSO READ | Airtel vs Reliance Jio vs Vi: 56 நாட்கள் செல்லுபடியாகும் சிறந்த ப்ரீபெய்ட் திட்டம் எது!!


ஏர்டெல் தேங்க்ஸ் செயலியை செயல்படுத்திய பிறகு, பயனர்கள் கூப்பன்களைப் பெறுவார்கள், இது ஏர்டெல் தேங்க்ஸ் பயன்பாட்டில் உள்ள ‘My Coupons’ பிரிவின் கீழ் கிடைக்கும். 


டெலிகாம் டாக் தகவலின்படி, வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு 1GB கூப்பனையும் அதை பெற்ற நாளில் இருந்து 90 நாட்களுக்குள் மீட்டெடுக்க முடியும். மேலும், இலவச தரவு (Free Data) மீட்டெடுக்கப்பட்டதும், அது மூன்று நாட்களுக்கு மட்டுமே செயலில் இருக்கும்.  நீங்கள் ஏற்கனவே ஏர்டெல் பயனராக இருந்தால், இந்த திட்டத்தின் கீழ் 2GB மொபைல் தரவை நீங்கள் பெற முடியும். உங்கள் ஆன்ட்ராய்டு அல்லது iOS சாதனத்தில் ஏர்டெல் தேங்க்ஸ் செயலியை பதிவிறக்கம் செய்து அமைத்தவுடன் இது கிடைக்கும்.


இது தவிர, ஏர்டெல் தனது பயனர்களுக்கு 6GB இலவச தரவையும் வழங்குகிறது. இருப்பினும், பயனர்கள் ரூ.598 அல்லது அதற்கு மேற்பட்ட விலையிலான வரம்பற்ற ரீசார்ஜ் பேக்கை வாங்க வேண்டும். இதன் மூலம், பயனர்களுக்கு 84 நாட்களுக்கு 6GB தரவு கிடைக்கும். ஆக மொத்தம், ஏர்டெல் பயனர்களுக்கு 11GB வரை இலவச தரவு கிடைக்கிறது.