Zee Digital தனது 13 பிராண்டுகளுக்கான இணைய செயலிகளை அறிமுகப்படுத்துகிறது
தொழில்நுட்ப அணுமுறையின் மூலம், தங்கள் தளத்தை மேம்படுத்துவதில் தொடர்ந்து கவனம் செலுத்தும் ZEE டிஜிட்டல், 9 பிராந்திய மொழிகளில் தேசிய மற்றும் பிராந்திய செய்திகளை வழங்கும் தனது 13 செய்தி பிராண்டுகளுக்கான இணைய செயலிகளை (PWA) அறிமுகப்படுத்துகிறது.
புது தில்லி, ஏப்ரல் 26, 2021: தொழில்நுட்ப அணுமுறையின் மூலம், தங்கள் தளத்தை மேம்படுத்துவதில் தொடர்ந்து கவனம் செலுத்தும் ZEE டிஜிட்டல், 9 பிராந்திய மொழிகளில் தேசிய மற்றும் பிராந்திய செய்திகளை வழங்கும் தனது 13 செய்தி பிராண்டுகளுக்கான இணைய செயலிகளை (PWA) அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம், இது போன்ற முயற்சியை மேற்கொள்ளும் நாட்டின் முதல் ஊடக மற்றும் பொழுதுபோக்கு நிறுவனமாக உருவெடுத்துள்ளது. நாட்டில் மட்டுமல்ல உலகிலேயே, மிகப்பெரிய அளவில், PWA என்னும் இணைய செயலிகள் அறிமுகம் செய்யப்படுகிறது என்றால் அது மிகையல்ல.
இணையத்தில், தங்கள் பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுக்கும் நோக்கில், மொபைலில் PWA என்னும் இணைய செயலிகளை வழங்கும் பேஸ்புக், ட்விட்டர், அலிபாபா, உபெர், லிங்க்ட்இன் (Facebook, Twitter, Alibaba, Uber, LinkedIn ) போன்ற உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களின் வரிசையில் ZEE டிஜிட்டல் இணைகிறது.
இப்போது இந்தியாவின் சிறந்த ஒளிபரப்பு செய்தி பிராண்டுகளான ZeeNews.com, Zee24Ghanta.com, ZeeHindustan.in, Zee24Kalak.in, 24Taas.com, ZeeRajastha.com, ZeeBiharJharkhand.com, ZeeUpUk.com, மற்றும் ZeeMpCg.com ஆகியவற்றின் பயனர்கள், மொபைல் வலைதளத்தில் சிறந்த அனுபவத்தை பெற்று பயனடைவார்கள். கடந்த ஆண்டுகளில் இந்த செய்தி தளங்களில், வலைதளத்திற்கு வரும் ஆக்டிவ் பயனர்களின் எண்ணிக்கை ஏற்கனவே 65% க்கும் அதிகமான அளவில் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், வலைதளத்தின் ஆர்கானிக் ட்ராபிக்கை மேலும் 200% வளர்ச்சி என்ற இலக்கை நோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதிய மொபைல் இணைய செயலிகளின் மூலம் பயனர்கள், தங்களுக்கு பிடித்த செய்தி பிராண்டின் ஐகானை தங்கள் முகப்புத் திரையில் வைத்துக் கொண்டு தடை ஏதுமின்றி, ஆஃப்லைன் ஆப்ஷனை பயன்படுத்தலாம். மோசமான நெட்வொர்க் உள்ள பகுதிகளிலும், தடை ஏதும் இன்றி செய்திகளை அறியலாம். மேலும் சேமிப்பிடம் மிக குறைவாக உள்ள மொபைலிலும், பிரச்சனை ஏதுமின்றி இந்த வலைதளத்தில் செய்திகளை அறிந்து கொள்ளலாம்.
இது குறித்து கருத்து தெரிவித்த ZEE டிஜிட்டல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரோஹித் சத்தா, “இந்தியாவின் மிகப்பெரிய செய்தி ஊடக நிறுவனமாக இருப்பதால், அதிக அளவிலான மக்களை சென்றடைவதே எங்கள் குறிக்கோள். இணைய செயலிகள் அல்லது PWA என்பவை பொதுவாக, சொந்த செயலிகளுக்கும், வலைத்தளத்திற்கும் இடையில் நிற்கும் ஒரு பாலம் போல் இருப்பதால், பயனர்கள் செய்தி தளத்தின் செயலியை பயன்படுத்தும் போது, சிறந்த அனுபவத்தை பெறுவார்கள், அதே நேரத்தில் உங்கள் தொலைபேசியில் உள்ள சேமிப்பிடத்தை ஆக்கிரமித்து கொள்ளாததால், தடையின்றி பார்க்க முடிகிறது. இது ஒரு சிறந்த தொழில்நுட்பம், ஏனெனில் இதில் செய்திகள் வேகமாக லோட் ஆவதோடு, மொபைலின் சேமிப்பிடத்தை ஆக்கிரமிக்காது. சாதாரண ஸ்மார்ட்போன்கள் வைத்திருக்கும் பயனர்களுக்கும் சிறந்த அனுபவத்தை கொடுக்கும் என்பதோடு, நெட்வொர்க் இணைப்பு சரியாக இல்லாத நேரத்திலும், PWA அவர்களுக்கு பெரிதும் உதவும்” என்றார்.
ZEE டிஜிட்டலின் இந்த முன்னோடியான முயற்சி, அதன் முன்னணி செய்தி வலைதள பிராண்டுகளை பயன்படுத்துபவர்களுக்கு மொபைல் வலைதள அனுபவத்தை, PWA என்னும் தளத்திற்கு மாற்றுவதும் பயனர்களுக்கு தடையற்ற வகையில் செய்திகளை கொண்டு சேர்த்து சிறந்த அனுபவத்தை வழங்குவதையும் நோக்கமாக கொண்டுள்ளது.
"இந்த புதிய தொழில்நுட்ப முன்னேற்றத்தினால், எங்கள் வலைதளத்தின் பேஜ் ஸ்பீட் பர்பாமென்ஸ் ஸ்கோர் மிக சிறப்பாக உள்ளது. செய்தி வெளியிடும் தளத்தில் இருப்பதால், லைவ் டிவி மற்றும் வீடியோ ஆகியவை இந்த பிராண்டுகளில் மிகவும் அதிகம் பயன்படுத்தப்படும். எனவே, தளங்களின் புதிய PWA பதிப்பை பயன்படுத்தி, பயனர்கள் தங்களுக்கு பிடித்த செய்தி சேனலை வலைதளத்தில் நேரடியாக, ‘Watch’ பிரிவில் காணலாம். இந்த செயலி மிக குறைந்த இடத்தை எடுத்துக் கொள்ளும் என்பதால், வீடியோ பிளேயர் மிக வேகமாக பதிவேற்றப்பட்டு, நேரடி தொலைக்காட்சியை பார்க்கும் அனுபவத்தை பெறுவார்கள். மொபைலில் எங்கள் பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதில் இது முக்கிய பங்கு வகிக்கும் என்றால் மிகையில்லை. எங்கள் வலைதளத்திற்கு வரும் பயனர்களில் கிட்டத்தட்ட 95% பேர் மொபைல் வழியாக பயன்படுத்துவர்கள் என்பதால், இது சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தும், ”என்று சத்தா மேலும் கூறினார்.
கடந்த ஆண்டில், ZEE Hindustan, ZEE Business, India.com மற்றும் ZEE 24 Ghanta போன்ற பல்வேறு பிராண்டுகளுக்கான பல மொபைல் செயலிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், India.com தனது பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை தரும் நோக்கில், புதிய மொபைல் தளத்தை அறிமுகப்படுத்தியது. இதன் விளைவாக மாதாந்திர ஆக்டிவ் பயனர்களின் அடிப்படையில் இந்த வலை தள பிராண்ட் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டது.