புது தில்லி: முன்னணி பொழுதுபோக்கு காண்டெண்ட் நிறுவனமான ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட்டின் (ZEEL) நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி திரு. புனித் கோயங்கா, சர்வதேச விளம்பரச் சங்கத்தின் (IAA) தலைமைத்துவ விருதுகளில், ஆண்டின் சிறந்த கேம்-சேஞ்சர் விருதைப் பெற்றுள்ளார். இந்த விருது வழங்கும் விழா மும்பையில் நடைபெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திரு. கோயங்கா ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய விலைமதிப்பற்ற பங்களிப்பிற்காக மதிப்பிற்குரிய இந்த கௌரவத்தைப் பெற்றார். ஒரு வருட காலத்தில் ஜீ- இன் இயக்கங்களை ஒரு வெற்றிக்கதையாக வடிவமைத்ததற்காகவும் அவர் பாராட்டப்பட்டார். இந்த ஒரு ஆண்டு காலம் பல்வேறு துறைகளில் வணிகங்களில் பெரும் பின்னடைவு மற்றும் சவால்கள் நிறைந்த காலமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 


மேலும் பாடிக்க | Parliament Monsoon Session: திமுக உட்பட 19 ராஜ்யசபா எம்பிக்கள் இடைநீக்கம் 


ஜீ- இல் உள்ள அனைத்து பணிக்குழு அணிகளுடனும் இந்த அங்கீகாரத்தைப் பகிர்ந்துகொண்ட திரு. கோயங்கா, “இது ஒரு ஊக்கம் மட்டுமல்ல. நாங்கள் உண்மையில் சரியான நடவடிக்கைகளை எடுத்து முன்னேறி வருகிறோம் என்பதற்கு உறுதியான சான்றாகும் இது. இந்த வெற்றி ஜீ குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் சொந்தமானது. ஜீ குழும உறுப்பினர்கள் அனைவரும் பல வெற்றிகளை பெறுவதற்கும் எங்கள் பங்குதாரர்கள் அனைவருக்கும் அதிக மதிப்பை உருவாக்குவதற்கும் தொடர்ந்து முயற்சி செய்கிறார்கள்.” என்று கூறினார்.


ஜீ- இன் எம்டி மற்றும் சிஇஓ என்ற முறையில், திரு. கோயங்கா, நிறுவனத்தின் செயல்திறனை மேம்படுத்துவதிலும், தரமான பொழுதுபோக்கு உள்ளடக்கத்தை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், சமூகம் முழுவதும் ஒரு நேர்மறையான மாற்றத்தைக் கொண்டு வருவதற்கும் அதன் மூலம் வணிகத்தை அதன் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை நோக்கிச் செலுத்துவதிலும் மிகவும் வெற்றிகரமாக செயல்பட்டுள்ளார். அவரது எதிர்கால நோக்கம் மற்றும் ஊடக களத்தில் கூர்மையான செயலுத்தி ஆகியவற்றால் ஜீ பொழுதுபோக்கு துறையில் முன்னணியில் உள்ளது. அவரது திட்டமிடல் இன்று நிறுவனம் உலகளாவிய அந்தஸ்தை அடைய வழிவகுத்தது.


அவரது திறமையான தலைமையின் கீழ், ஜீ வெற்றிகரமாக சர்வதேச சந்தைகளில் விரிவடைந்துள்ளது. 190 நாடுகளில் முன்னிலையில் உள்ள ஜீ, இன்று நுகர்வு தளங்களில் 1.3 பில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை சென்றடைந்துள்ளது.


மேலும் படிக்க | Kargil Vijay Diwas: 23வது கார்கில் தினத்தை நினைவுகூரும் புதுச்சேரி 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ