தொலைபேசி நிறுவனங்களுடன் பயனாளர்களின் விவரங்களை பகிர்ந்து கொண்டது பற்றி ஜூன் 20ஆம் தேதிக்குள் ஃபேஸ்புக் நிறுவனம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என மத்திய அரசு நோட்டீஸ்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பேஸ்புக் பிரபலமாவதற்கு முன்பாகவே, உலகின் ஆப்பிள் மற்றும் சாம்சங் உள்ளிட்ட 60 முன்னணி அலைபேசி தயாரிப்பு நிறுவனங்களுடன் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. அதன்படி பேஸ்புக் செயலியை குறிப்பிட்ட அலைபேசி நிறுவன தயாரிப்பு போன்களில் பயன்படுத்தும் பயனாளர்கள் மற்றும் அவர்களது நண்பர்கள் குறித்த அந்தரங்கத் தகவல்களை, பேஸ்புக் நிறுவனம் குறிப்பிட்ட தயாரிப்பு நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி சர்சையை ஏற்படுத்தியது. 


இந்த சர்ச்சை குறித்து ஃபேஸ்புக் நிறுவனம் தற்போது விளக்கம் அளித்துள்ளது. அதில், சாம்சங், ஆப்பிள் போன்ற செல்போன் நிறுவங்களுக்கு பயனர்களின் தகவல்களை பகிர்ந்துல்லத்தை ஒப்புக்கொண்டதாக தெரிவித்துள்ளது.  


சில மாதங்களுக்கு முன்னதாக 'கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா' என்னும் தேர்தல் ஆய்வு நிறுவனத்துடன் பேஸ்புக் நிறுவனம் தகவல்களை பகிந்து கொண்டது சர்ச்சைகளை உண்டாக்கியது. அதில் முதலில் பயனாளர்கள் மட்டுமல்லாது அவர்களின் நண்பர்களின் தகவல்களும் பகிரப்பட்டது. பின்னர் பேஸ்புக் நிறுவனம், பயனாளர்களின் நண்பர்களின் தகவல்களை பகிர்வதை நிறுத்தி விட்டது. ஆனால், அலைபேசி நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தில் அப்படி எதுவும் தடை இல்லை என்று கூறப்பட்டுள்ளது.


ஆனால் இத்தகைய ஒப்பந்தங்கள் மிகவும் வரையறுக்கப்பட்ட தன்மையுடையவை என்றும், இதன் மூலம் மிகவும் குறைவான அளவே தவறுகள் நிகழ்ந்தது தங்களுக்குத் தெரியும் என்றும் பேஸ்புக் நிறுவன துணைத் தலைவர்களில் ஒருவரான ஐம் ஆர்ச்சிபோங் தெரிவித்திருந்தது...! 


இதையடுத்து, தொலைபேசி நிறுவனங்களுடன் பயனாளர்களின் விவரங்களை பகிர்ந்து கொண்டது பற்றி ஜூன் 20-ஆம் தேதிக்குள் ஃபேஸ்புக் நிறுவனம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது!