கடந்த மாதம் 16-ம் தேதி காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்குகளை விசாரித்த வந்த உச்ச நீதிமன்றம், காவேரியில் இருந்து தமிழகத்துக்கு காவேரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்றும், 6 வார காலத்திற்குள்ளாக மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டு என உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு சுப்ரீம் கோர்ட் விதித்துள்ள காலக்கெடு நேற்றே முடிவடைந்தது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், காலம் தாழ்த்தி வருகிறது மத்திய அரசு. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பது பற்றி இதுவரை எந்த உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை.


இதை தொடர்ந்து, பல்வேறு அரசியல் தலைவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று சென்னையில் ஸ்டாலின் தலைமையில் திமுக தலைமை செயற்குழு கூட்டம் நடை பெற்றது. அதில், காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சிகளுடன் இணைந்து 


போராட்டம் நடத்துவது உள்ளிட்ட ஏழு தீர்மானங்கள் திமுக அவசர செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.


திமுக அவசர செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்...! 


1. காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மதிக்காத மத்திய, மாநில அரசுக்கு கண்டனம்.


2. அனைத்து கட்சிகளுடன் இணைந்து போராட்டம் நடத்ததப்படும்.


3. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும்.


4. நேர்மையற்ற முறையில் நடக்காத கூட்டுறவு சங்க தேர்தலை ரத்து செய்ய வேண்டும்.


5. நியூட்ரினோ திட்டஅனுமதியை எதிர்த்து தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும்.


6. ஏப்ரல் 2ம் தேதி திமுக தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்.


7. மருத்துவ கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இட ஒதுக்கீடு புறக்கணிக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவிப்பது, என ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.