கடந்த மாதம் 16-ம் தேதி காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்குகளை விசாரித்த வந்த உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பை வழங்கியது. அதில், காவேரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்றும், 6 வார காலத்திற்குள்ளாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டு என மத்திய அரசுக்கு ஆணையிட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது மத்திய அரசு என தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புக்கள் குற்றம்சாட்டி வருகிறது. மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாடாளுமன்றம் முன்பு தமிழக விவசாயிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 


காவிரி விவகாரம் தொடர்பாக விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்!


இந்நிலையில், உச்சநீதிமன்றம் விதித்த கால அவகாசம் இந்த மாதம் 29-ம் தேதியுடன் நிறைவடைகிறது. தற்போது மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று எந்த இடத்திலும் கூறவில்லை. ஒரு திட்டத்தை உருவாக்கவேண்டும் என்று தான் தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது. எனவே மேலாண்மை வாரியத்துக்கு பதிலாக மேற்பார்வை ஆணையம் அமைக்கப்படும் என கூறியுள்ளது. 


காவிரி விவகாரத்தில் இழிவான அரசியல் செய்யும் மத்திய அரசு -கமல் விளாசல்


இதற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்பி கிளம்பி உள்ள நிலையில், தமிழக அதிகாரிகள் காவிரி வழக்கில் வாதாடிய வழக்கறிஞர் சேகர் நாப்டேவுடன் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில், மார்ச் 29-ம் தேதிக்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.