காவிரி நதிநீர் பங்கீட்டில் தொடர்ந்து இன்னல்களை சந்தித்து வரும் தமிழகம், தங்கள் உரிமைக்காக பல முறை நீதிமன்றத்தை நாடியது. கடந்த மாதம் 16-ம் தேதி காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான இறுதி தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த தீர்ப்பில் காவேரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்றும், 6 வார காலத்திற்குள்ளாக மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டு என ஆணையிட்டது.


ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு சுப்ரீம் கோர்ட் விதித்துள்ள காலக்கெடு கடந்த மார்ச் 29-ம் தேதி முடிவடைந்தது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக இந்த மாதம் முதல் நாளில் இருந்து தமிழகத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது.


இந்நிலையில், நேற்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் சென்னையில் நடைபெற்றது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடா் கழகம் என மொத்தம் 9 கட்சிகள் கலந்துக்கொண்டனர்.


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக எதிர்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியது, 


காவிரி உரிமைப் போராட்டத்தின் அடுத்தகட்டமாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாளை திருச்சியிலிருந்து சென்னை ஆளுநர் மாளிகை நோக்கி “காவிரி உரிமை மீட்பு பயணம்” தோழமைக் கட்சித் தலைவர்களோடு தொடங்க விருக்கிறேன். அதேபோல வரும் 9-ம் தேதி(திங்கள் கிழமை) அன்று அரியலூா் மாவட்டத்தில் இருந்து கடலூா் நோக்கி நடைபெற உள்ளது. 


இரண்டு கட்டமாக நடைபெறும் “காவிரி உரிமை மீட்பு பயணம்”  முதல் கட்டமாக திருச்சி முக்கொம்புவில் இருந்து கடலூா் வரையிலான பயணம் ஏப்ரல் 7-ம் தேதி நடைபெறும். இரண்டாவது கட்டமாக அரியலூா் மாவட்டத்தில் இருந்து கடலூா் நோக்கி ஏப்ரல் 9-ம் தேதி நடைபெறும்.


வரும் ஏப்ரல் 11-ம் தேதி தமிழகம் வருகை தரும் இந்திய பிரதமா் நரேந்திர மோடிக்கு கறுப்புக்கொடி காட்ட திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்தார்.


சென்னையில் வரும் ஏப்ரல் 16-ம் தேதி அன்று, எஸ்சி எஸ்டி விவகாரத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் உச்சநீதிமன்ற உத்தரவை திரும்ப பெற வழியுறுத்தி கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் என ஸ்டாலின் கூறினார்.


இன்று திமுக தலைமையில் காவிரி உரிமை மீட்பு பயணம் திருச்சி முக்கொம்புவில் இருந்து கடலூா் வரையில் மேற்கொள்ளப்படுகிறது.