ஓடும் பேருந்தில் நடத்துநர் அடித்துக் கொலை- போதை ஆசாமி கைது!
அரசுப் பேருந்தில் டிக்கெட் எடுப்பது தொடர்பாக எழுந்த மோதலில், போதையில் இருந்த பயணி தாக்கியதில் நடத்துநர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
சென்னையில் அரசுப் பேருந்து நடத்துனர் ஒருவர் ஓடும் பேருந்தில் பயணியால் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோயம்பேட்டிலிருந்து விழுப்புரம் நோக்கி, அரசுப் பேருந்து ஒன்று சென்றுள்ளது. மதுராந்தகம் புறவழிச்சாலை பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றுவதற்காக பேருந்து நின்றபோது மதுபோதையில் இருந்த நபர் ஒருவர் பேருந்துக்குள் ஏறியுள்ளார்.
பேருந்து சிறிது தூரம் பேருந்து சென்றபோது நடத்துநரான பெருமாள் குடிபோதையில் இருந்த பயணியிடம் டிக்கெட் எடுக்கக் கூறியுள்ளார். ஆனால் அந்த போதை ஆசாமியோ டிக்கெட் எடுக்க மறுத்து நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றி இருவருக்கிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
அப்போது அந்த போதை ஆசாமி நடத்துநரைக் கடுமையாக தாக்கிவிட்டு பேருந்திலிருந்து கீழே குதித்துத் தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது. தாக்குதலில் மயங்கி விழுந்த நடத்துநர் பெருமாளை சக பயணிகள் அருகே உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். பரிசோதித்த மருத்துவர்கள், நடத்துநர் பெருமாள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | போதையில் ரகளை செய்த மகன்; தீவைத்து எரித்த பெற்றோர்- வெளியான சிசிடிவி காட்சி
தாக்கிவிட்டுத் தப்பி ஓடிய சூனாம்பேடு பகுதியைச் சேர்ந்த போதை ஆசாமி முருகனைக் கைது செய்த போலீஸார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். அரசுப் பேருந்து நடத்துனர் ஓடும் பேருந்தில் பயணியால் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | மனிதர்களின் அலட்சியம்: தண்ணீர் என நினைத்து மது அருந்தியதால் பசுக்கள் மரணம்.. !
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!