சென்னை: தங்கத்தின் விலை உயர்வும், கொரோனாவால் மந்தமாகியிருக்கும் பொருளாதாரமும் தங்கத்தின் விலை உயர்ந்துக் கொண்டே செல்லும் என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த எண்ணத்தின் எதிரொலி தங்கத்தை சேமிக்க மட்டுமல்ல, தங்கக் கடத்தலிலும் எதிரொலிக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விமானப் பயணிகள் தங்கம் கடத்துவவதாக (Smuggling) கிடைத்த உளவுத் தகவலின்  அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், துபாயில் (Dubai) இருந்து வந்த பயணிகளிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டன.


கடலூரைச் சேர்ந்த சையத் இம்ரான் அகமது என்ற பயணி (Passenger) இண்டிகோ விமானம் (Indigo Flight) 6E-66 மூலம் சென்னைக்கு வந்தார். அவரிடமும் சுங்க அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட போது அதிர்ச்சியளிக்கும் தகவல் தெரியவந்தது.


Also Read | Customs: சுமார் ₹23 லட்சம் மதிப்பிலான கடத்தல் பொருட்கள் பறிமுதல்


சையத் அகமது தனது மலக்குடலில் தங்கத்தை (Gold) மறைத்து வைத்திருந்தார். அதை வெளியே எடுத்து பார்த்தபோது, 1068 கிராம் எடையுள்ள தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.  உருமாற்றி முட்டையைப் போல் வைக்கப்பட்டிருந்த தங்கத்தை பிரித்தெடுத்த போது, 980 கிராம் 24 காரட் தூய தங்க கிடைத்தது. இதன் மதிப்பு 50.54 லட்சம் ரூபாய் ஆகும். 


இதையடுத்து சுங்கச் சட்டத்தின் (Customs Act) கீழ் வழக்கு பதிவு செய்து தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத் துறை அதிகாரிகள், சையத் இம்ரான் அகமதை கைது செய்தனர்.


தங்கக் கடத்தல் அதிகமாகியிருக்கும் சூழ்நிலைகளும், விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்கும்போதே தொடர்ந்து பயணிகள் தங்கக் கடத்தலில் ஈடுபட்டு வருவதும் கவலையளிக்கிறது.


Also Read | Chennai Airport-ல் மீண்டும் தங்கக் கடத்தல்: பிடிபட்டது 45.4 lakh மதிப்பிலான gold paste!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR