சென்னை: துபாயில் (Dubai) இருந்து சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய நான்கு பயணிகளிடமிருந்து 864 கிராம் 24K தூய தங்கத்தை சுங்க விமான புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை இரவு சென்னை விமான நிலையத்தில் (Chennai Airport) தங்கக் கடத்தல் தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என அவர்களுக்கு தகவல் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதையடுத்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் IX 1644 மூலம் துபாயிலிருந்து வந்த தமிழ்நாட்டின் ராமநாதபுரத்தைச் சேர்ந்த சிராஜிதீன் ஜாபர், 27, அனிஷ் ரஹ்மான், 24, சதகதுல்லா, 24, மற்றும் சாகுபார் அலி, 39 ஆகியோர் விமான நிலையத்தில் விசாரணைக்காக நிறுத்தப்பட்டனர்.
ALSO READ: சென்னையில் மசாலா பாக்கெட்டில் மறைத்து வைத்து போதைப் பொருள் கடத்தல்: 4 பேர் கைது
தொடர்ந்து விசாரித்தபோது, மலக்குடலில் மறைத்து தங்க பேஸ்ட்களின் (Gold Paste) தொகுப்புகளை கொண்டு வந்ததாக அவர்கள் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
தங்க பேஸ்டின் 17 தொகுப்புகள் அவர்களிடமிருந்து மீட்கப்பட்டன. இவை மிகச் சிறிய மூட்டைகளாக கட்டி வைக்கப்பட்டிருந்தன. மருத்துவ குழுவின் முறையான செயல்பாட்டிற்குப் பிறகு தங்க பேஸ்டின் தொகுப்புகள் கடத்தியவர்களிடமிருந்து மீட்கப்பட்டன.
கடத்தல்காரர்களிடமிருந்து 45.4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சுமார் 864 கிராம் தங்கம் மீட்கப்பட்டது. இது 1962 சுங்கச் சட்டத்தின் (Customs Act) கீழ் பறிமுதல் செய்யப்பட்டது.
ALSO READ:Face Mask-ல் மறைத்து தங்கக் கடத்தல்: Room போட்டு யோசிப்பாங்களோ!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR