CWG_2018: பதக்கங்களை வென்ற தமிழக வீரர்களுக்கு பரிசு வழங்கினார் எடப்பாடி!!
காமன்வெல்த் போட்டியில் பதக்கங்களை வென்று சாதித்த தமிழக வீரர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரிசு வழங்கினார்.
21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டுகோஸ்ட் நகரில் நடந்து முடிந்தது. இந்த போட்டியில் மொத்தம் 71 நாடுகள் பங்கேற்கின்றன.
இதில், மேசை பந்து, பளுதூக்குதல் உள்பட பல்வேறு பிரிவுகளில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் தங்கம், வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றுள்ளனர்.
முன்னதாக, காமன்வெல்த் போன்ற சர்வதேச போட்டிகளில் பதக்கம் வெல்லும் தமிழக வீரர்-வீராங்கனைகளுக்கு ரூ.50 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையில் உயரிய ஊக்கத் தொகைகள் வழங்கப்படும் என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
அதனடிப்படையில், முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமி தலைமையில் அவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.
அதில், காமன்வெல்த் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற விளையாட்டு வீரர் 7 பேருக்கு ரூ.60 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையில் உயரிய ஊக்கத் தொகை முதல்வர் பழனிசாமி வழங்கினார்.