அதிர்ச்சி!! கோவையில் சிறுவனின் முகத்தில் சிகரெட்டால் சூடு

கோயம்புத்தூர் ஆர்.கே.புரம் பகுதியில் மாற்றுத்திறனாளி சிறுவனின் முகத்தில் சிகரெட்டால் சூடு வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோயம்புத்தூர் ஆர்.கே.புரம் பகுதியில் மாற்றுத்திறனாளி சிறுவனின் முகத்தில் சிகரெட்டால் சூடு வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோயம்புத்தூரில் வசித்து வரும் சூர்யபிரகாஷ் மற்றும் பெரியமுத்து தம்பதியருக்கு 12 வயதில் அரவிந்த் கண்ணன் என்ற மகன் இருக்கிறான். இவரது மகனுக்கு ஆட்டிசம் என்ற நோய் உள்ளது.
இவர்கள் வசிக்கும் பகுதியில் சூர்யபிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். அவர் சிறுவன் அரவிந்த் கண்ணன் முகத்தில் சிகரெட்டால் சூடு வைத்துள்ளார். இது பற்றி கேட்டபோது பெற்றோர்களை சூர்யபிரகாஷ் என்பவர் மிரட்டி உள்ளார். பின்னர் அரவிந்த் கண்ணனை அழைத்துக்கொண்டு காவல் நிலையத்தில் சூர்யபிரகாஷ் மீது புகார் கொடுக்க சென்று உள்ளனர். ஆனால் போலீசார் புகாரை வாங்க மறுத்ததோடு, அவர்களுக்கிடையே சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
போலீசார் நடவடிக்கை எடுக்காததால், கோவை ஆட்சியர் அலுவலகத்தில் இச்சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி மனு கொடுத்தனர். இதனையடுத்து இச்சம்பவம் மீடியா வெளிசத்துக்கு வந்துள்ளது.
12 வயது சிறுவனின் முகத்தில் சூடு வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.