சென்னை : கொரோனா தொற்றின் தாக்கத்தை குறைக்க அரசு பொதுமுடக்கங்களை அறிவித்தும், பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டும் வந்தது.  அதனையடுத்து கொரோனாவிற்கென தடுப்பூசியை கண்டுபிடித்து, மக்களுக்கு இலவசமாக செலுத்தி வருகிறது.  தடுப்பூசியினை செலுத்தி கொள்வதன் மூலம் கொரானாவிலிருந்து தப்பித்து கொள்ளலாம்.  பலரும் இதன் முக்கியத்துவத்தினை உணர்ந்து, தடுப்பூசி செலுத்துக்கொண்ட போதிலும், சிலரோ போதுமான விழிப்புணர்வு இன்மையால், இன்னும் தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் இருக்கின்றனர்.  இதனால் கொரோனா தொற்று அதிகம் பரவ வாய்ப்புள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ காதலிக்கு கொலை மிரட்டல் விடுத்த மிஸ்டர் இந்தியா : ஆணழகனை கைது செய்தது போலீஸ்!


இதன் காரணமாக பல மாநில அரசுகளும், ஒவ்வொரு நடவடிக்கையை மேற்கொண்ட நிலையில், சமீபத்தில் தமிழக அரசு தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களை பொது இடங்கள், தியேட்டர்கள், பூங்காக்கள், மக்கள் அதிகம் கூடும் பொழுதுபோக்கு இடங்கள், பொது கூட்டங்கள், நிறுவனங்கள், வணிக வளாகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் போன்ற பொது வெளியில் நடமாட தடை விதித்திருந்தது.



அரசின் அறிவிப்பினை தொடர்ந்து இன்று சென்னை சத்தியம் திரையரங்கில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டும் உள்ளே அனுமதிக்கும் பொருட்டு, அவர்களின் தடுப்பூசி சான்றிதழை சரிபார்க்கும் பணியில் அங்குள்ள காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.  கொரோனா பொதுமுடக்கம் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டிருந்த நிலையில், சில நாட்கள் கழித்து தளர்வுகள் அளிக்கப்பட்டு 50% இருக்கைகளுக்கு மட்டுமே அரசு அனுமதி வழங்கி இருந்தது.  தற்போது கொரோனா பரவல் கொஞ்சம் கட்டுக்குள் வந்த நிலையில், முழு விலக்களித்து தியேட்டர்களில் 100% இருக்கைகளுக்கு அரசு அனுமதியளித்தது.  தற்போது சத்யம் தியேட்டரில் இந்த கொரோனா சான்றிதழ் சரி பார்க்கும் பணி தொடங்கியதை அடுத்து, இதர தியேட்டர்களிலும் இந்த பணி தொடங்க இருக்கிறது.



இந்நிலையில் கோயம்புத்தூர் மாநகராட்சியில், பொது சுகாதார துறையின் அறிவிப்பின் படி,சந்தை , பள்ளி, கல்லூரி,  தியேட்டர்கள், பூங்காக்கள், உணவகங்கள், தாங்கும் விடுதிகள் போன்ற பொது இடங்களில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள், இரண்டாவது டோஸ் செலுத்தி கொள்ள காத்திருப்பவர்கள் மற்றும் 18 வயது பூர்த்தி அடையாதவர்கள் ஆகியோரை மட்டும் அனுமதிக்க கோரி அறிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் 18 வயது நிரம்பாதவர்கள், முதல் டோஸ் தடுப்பூசிகளை செலுத்தி கொண்டு இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தாமல் இருப்பவர்கள் ஆகியோரை அனுமதிக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.  அவ்வாறு உத்தரவை மீறி அனுமதிக்கும் நிறுவனங்கள் மீது பொது சுகாதார சட்டம் 1939-ன் படி நோய் தொற்று ஏற்படுத்தும் இடங்களாக அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.


ALSO READ கொலையான எஸ்.ஐ. பூமிநாதனின் கடைசி திக்.. திக்.. நிமிடங்கள்.. நடந்தது என்ன?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR