பாலியல் வழக்கு தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட JNU பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி டெல்லியில், CPI(M) கட்சியில் மகளிர் அமைப்பான அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கம் (AIDWA) போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக வடக்கு டெல்லியின் வசந்து குஞ்ச் பகுதி காவல் நிலையத்தில், JNU பல்கலை மாணவி ஒருவர் தனது ஆசிரியர் தன்னை பாலியல் ரீதியாக துன்புருத்துவதாக அவர் மீது புகார் அளித்தார். வகுப்பு நேரங்களில் தன்னை அத்துமீறி தொடுவதாக இந்த புகாரில் குறிப்பிடப் பட்டிருந்தது.


இதுதொடர்பாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காத நிலையில் பல்கலை மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


இதனையடுத்து குற்றம்சாட்டப் பட்ட பேராசிரியர் அதுல் ஜோஸி பல்கலை நிர்வாக பணியில் இருந்து விலகினார். எனினும் மாணவர்களின் போராட்டம் தொடர, தென்மேற்கு பகுதி காவல் நிலைய அதிகாரி மில்லிண்ட் தும்பரே பேராசிரியின் மீது IPC 354, 509 ஆகிய பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.



பின்னர் இந்நிகழ்வினை அடுத்து குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியரின் மீது சக மாணவிகள் 6 பேர் பாலியல் தூண்டல் புகார் அளித்துள்ளனர். சம்பந்தப்பட்ட பேராசியரின் மீது இதுவரை 7 பேர் புகார் தெரிவித்துள்ளனர்.


எனினும் இதுவரை பேராசிரியர் கைது செய்யப்படவில்லை எனவும், அவர் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை எனவும் பல்கலை மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது அவர்களுக்கு ஆதரவாக டெல்லி வசந்து கஞ்ச் பகுதியில் CPI(M) கட்சியில் மகளிர் அமைப்பான அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கம் (AIDWA) போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


விரைவில் பேராசிரியரின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்து போராடி வருகின்றனர்.