நவராத்திரி திருவிழா: வைஷ்ணோ தேவி ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்!
நவராத்திரி திருவிழாயொட்டி கத்ரா நகரத்தின் திரிகுட்டா மலைப்பகுதியில் உள்ள மாதா வைஷ்ணோ தேவி ஆலயத்திற்கு 3 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை புரிந்த்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவராத்திரி திருவிழாயொட்டி கத்ரா நகரத்தின் திரிகுட்டா மலைப்பகுதியில் உள்ள மாதா வைஷ்ணோ தேவி ஆலயத்திற்கு 3 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை புரிந்த்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 29-ஆம் நாள் துவங்கி அக்டோபர் 7-ஆம் நாள் வரையிலான கணக்கெடுப்பின் படி மாதா வைஷ்ணோ தேவி கோவிலுக்கு 3,64,643 பக்தர்கள் வருகை புரிந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி ஆலய வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சிம்ரன்தீப் சிங் தெரிவிக்கையில்., "ஒன்பது நாள் திருவிழாவின் போது 3,64,643-க்கும் அதிகமான யாத்ரீகர்கள் இந்த ஆலயத்தை பார்வையிட்டனர், இது சமீபத்தில் கட்டப்பட்ட தங்க குகை நுழைவு, லாங்கர் மற்றும் ஆர்த்தியின் போது பஜனைகளை ஓதுவதற்கு இடம்பெற்ற இருப்பாக கருதப்படுகிறது" என தெரிவித்துள்ளார்.
சன்னதிக்கு வருகை தந்த பயணிகளின் முந்தைய புள்ளிவிவரங்கள் 2018-ல் 3.18 லட்சம், 2017-ல் 3.03 லட்சம், 2016-ல் 3.50 லட்சம், 2015-ல் 2.76 லட்சம் மற்றும் 2014-ல் 2 லட்சம் ஆகும். நவராத்திரத்தில், 51,225 யாத்ரீகர்கள் வாரியத்தால் இயங்கும் லங்கர் சேவையைப் பெற்றனர். சுமார் 55,477 பேர் போனி, பித்து மற்றும் பால்கி சேவைகளை குகையை அடைய பயன்படுத்தினர். அதே நேரத்தில் 71,000 யாத்ரீகர்கள் பவன் முதல் பைரோன் மற்றும் பின்புறம் வரை கேபிள் கார் வசதியைப் பெற்றனர், 16,000 யாத்ரீகர்கள் ஆர்த்குமாரி மற்றும் புனித குகைக்கு இடையில் பேட்டரி கார் சேவையைப் பயன்படுத்தினர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், 5,260 யாத்ரீகர்கள் இந்த ஆலயத்தை அடைய ஹெலிகாப்டர் சேவையைப் பெற்றதாக சிங் குறிப்பிட்டுள்ளார்.
புகழ்பெற்ற பாடகர் சோனு நிகாம், வடமேற்கு டெல்லியைச் சேர்ந்த ஹான்ஸ் ராஜ் ஹான்ஸ், குர்தாஸ் மான், கவிதா பாட்வால், ஜஸ்பிந்தர் நருலா மற்றும் லக்விந்தர் வடாலி ஆகியோர் இந்த ஆலயத்தில் நிகழ்ச்சி நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பு: மஹிஷாசுரடை வீழ்த்திய துர்கா தேவின் வெற்றியை நவராத்திரி குறிக்கிறது, இது தீமைக்கு எதிரான நல்ல வெற்றியைக் குறிக்கும் விழாவாகும். நவராத்திரி பண்டிகையின் பத்தாவது நாள் தசரா அல்லது விஜயதாசமி என கொண்டாடப்படுகிறது.