பத்ரிநாத் கோயில் இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில், சமோலி மாவட்டதில் உள்ள மலைவாழிடமான பத்ரிநாத்தில் உள்ள ஒரு கோவில். இது பத்ரிநாராயணன் கோவில் என்றும் அறியப்படுகிறது. இக்கோயில் அலக்நந்தா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இது ஒரு திருமால் கோவில். இந்தியாவில் உள்ள முக்கியமான இந்துக்கோவில்களுள் இதுவும் ஒன்று. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இமயமலையின் மிதமிஞ்சிய குளிரின் காரணமாக இது ஆண்டுக்கு ஆறு மாதங்கள் மட்டுமே திறக்கப்பட்டிருக்கும். இந்து மக்களின் பிரபல வழிபாட்டு ஸ்தலமான பத்ரிநாத் ஆலயம் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் உருவானது. 


இந்நிலையில், லூதியானா தொழிலதிபர் Gyaneshwar Sood என்பவர் புதிய தங்க குடை ஒன்றை பத்ரிநாதர் கோவிலுக்கு காணிக்கையாக அளித்துள்ளனர். லூதியானா தொழிலதிபர் Gyaneshwar Sood என்பவர் அளித்த 3.5 kg எடையுள்ள தங்க குடை ஒன்றை காணிக்கையாக அளித்துள்ளனர். இந்த குடை 600 ஆண்டுகள் கழித்து தற்போது தான் பத்ரிநாத்தில் மாற்றப்பட்டுள்ளது. இந்த 3.5 kg குடை ஒரு ஹெலிகாப்டர் மூலமாக பத்ரிநாத் சன்னதிக்கு கொண்டுவரப்பட்டார்.


பத்ரிநாதர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்ட இந்த தங்க குடைக்கு, வேத மந்திரங்கள் முழங்க முறைப்படி பூஜைகள் செய்யப்பட்டு பத்ரிநாத பெருமாளுக்கு சாத்தப்பட்டது.