புதுடெல்லி: பட்ஜெட்டின் ஆவணங்களை அச்சிடும் செயல்முறையை குறிக்கும் வழக்கமான Budget 2021 இன்று நடைபெற்றது. இந்த விழா பட்ஜெட் செயல்முறையை அதிகாரப்பூர்வமாகத் தொடங்குவதை குறிக்கும் பிள்ளையார் சுழி என்றே சொல்லலாம். ஆனால், இந்த முறை COVID-19 தொற்றுநோய் காரணமாக பட்ஜெட் ஆவணங்கள் அச்சிடப்படவில்லை.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதேபோல பொருளாதார ஆய்வறிக்கையும் அச்சிடப்படாது.  பிரம்மாண்டமான பாத்திரத்தில் கேசரியைப் போல இருக்கும் வட இந்திய இனிப்பு (Sweet) வகையான ஹல்வா செய்யும் விழாவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் உயரதிகாரிகள் கலந்துக் கொண்டனர். 


பெரிய பாத்திரத்தில் அல்வா சமைக்கப்பட்டு, பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபடும் அதிகாரிகள், உதவியாளர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் பரிமாறப்படும்.


Also Read | 7th Pay Commission: DA Hike, ஊதிய உயர்வு பற்றிய முக்கிய விவரங்கள்!!


அல்வா நிகழ்ச்சி எப்போது தொடங்கப்பட்டது என்று சரியாக தெரியவில்லை. இந்திய பாரம்பரியப்படி (Culture), எந்தவொரு நல்ல காரியத்தை தொடங்குவதற்கு முன்னதாக இனிப்பு பொருட்கள் ஏதாவது செய்து வணங்குவார்கள். அதேபோல இனிப்பை நிதியமைச்சகமே தயாரித்து, தனது ஊழியர்களை உற்சாகப்படுத்தும் விழாவாக ஹல்வா விழா நடத்தப்படுகிறது என்று கூறப்படுகிறது.


ஹல்வா விழாவுக்குப் பிறகு, யூனியன் பட்ஜெட்டை (Budget) தயாரிப்பதில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் North Block கட்டடத்திலேயே  தங்க வேண்டும், பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்யும் வரை அவர்கள் வீட்டிற்கு செல்ல முடியாது.


தொலைபேசி அல்லது மின்னஞ்சல் (e-mail), உள்ளிட்ட வேறு எந்தவொரு தகவல்தொடர்பு மூலமாகவும் அவர்கள் தங்கள் குடும்பத்தினரை தொடர்பு கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை. நிதி அமைச்சகத்தின் மிக மூத்த அதிகாரிகள் மட்டுமே வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.


தொலைபேசி அழைப்புகள் வராமல் இருப்பதை உறுதி செய்ய மொபைல் ஃபோன் ஜாமர்கள் (Mobile phone jammers) நிறுவப்பட்டுள்ளன.   பட்ஜெட் அமர்வின் முதல் பகுதி ஜனவரி 29 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 15 வரை தொடரும் என்றும், அமர்வின் இரண்டாம் பகுதி மார்ச் 8 முதல் ஏப்ரல் 8 வரை நீடிக்கும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.


Also Read | ஒரே second-ல் பணம் காலி ஆகிவிடும்: Whatsapp Pay செய்யும் போது ரொம்ப கவனமா இருங்க!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR