துமாவதி ஜெயந்தியான இன்று, இந்த மந்திரத்தை உச்சரித்து வணங்கி, தாயின் அருளை பெறலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தூமாவதி என்பவள் பத்து மகாவித்யாக்களில் ஒருத்தி ஆவாள். "புகைத்தேவதை" எனப்பொருள் படும் பெயர்கொண்ட இவள், அன்னைத் தெய்வத்தின் குரூரமான வடிவங்களில் ஒன்றைத் தாங்கியவள். வயதான விதவையாக இவள் சித்தரிக்கப்படுகிறாள்.


பகவான் சிவன் உருவாக்கப்பட்ட பத்து மகாவித்யங்களில் தாய் தூமாவதி ஏழாது இடத்தில் உள்ளார். இவர் விதவையாக சித்தரிக்கபப்ட்டுள்ளார். அவர்  சுக்லபக்ஷ அஷ்டமியில் பிறந்தார். கைம்மை, பிச்சை, வறுமை, பூகம்பம், வறட்சி, வெள்ளம், இரத்த தாகம், ஆகியவை இவளுக்குரியதாக கூறப்படுகின்றன. இந்த வகையான பீதியை கொடுக்கும் தோற்றம், முரட்டுத்தனம், ஊனமுற்ற உடல் ஆகியவற்றை கொண்அவளாக இருக்கிறாள். இவர் கேட்டை நட்சத்திரத்தில் வசிப்பவராக கருதப்படுகிறார்கள் . அதனால்தான் இந்த நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள்  உடல்நலம் அல்லது ஒருவிதமான போராட்டத்தை கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவள் அலக்ஷ்மி அல்லது மூதேவி என்றும் அழைக்கப்படுகிறாள்.


தூமாவதி அன்னையின் கதை


இந்து புராணங்களில் ஒன்றின் படி, சிவபெருமானின் மனைவி பார்வதி, பசியுடன் இருக்கும்போது ஏதாவது வேண்டும் என கோரினார். அதன்பிறகு சிவன் சாப்பிடுவதற்கு எதையாவது கொண்டு வருகிறேன் என்று அவர்களை சமாதானப்படுத்தினார்கள், ஆனால் சிவன் சிறிது நேரம் உணவு ஏற்பாடு செய்ய முடியாமல் போகும்போது, பார்வதி பசியால் அமைதியை இழந்து சிவனை விழுங்குகிறாள். இதன் பின்னர், சிவபெருமானின் கழுத்தில் விஷம் உள்ளதால், பார்வதி அன்னையின்  உடலில் இருந்து தீப்பொறிகள் வெளியேற ஆரம்பித்தன. விஷத்தின் தாக்கத்தால் அவள் பயங்கரமாகத் தோன்றினாள். அதன் பிறகு உன்னுடைய இந்த வடிவம் துமாவதி என்று அறியப்படும் என்று பகவான் சிவன் அவளிடம் கூறினார். மேலும் சிவபெருமான் சாபத்தால் அவள் ஒரு விதவையாக வணங்கப்படுகிறாள். ஏனெனில் அவள் கணவன் சிவனை விழுங்கிவிட்டாள். இந்த வடிவத்தில் அவள் ஒரு கையில் ஒரு வாளைப் பிடித்துக் கொண்ட மிகவும் கொடூரமானக காட்சி அளிக்கிறாள்.


தூமாவதி  தாயை வழிபடும்  முறை


இந்த நாளில், பிரம்மா முஹூர்த்தத்தில் எழுந்து குளித்துவிட்டு, கங்கை நீரை தெளித்துக் கொண்டு, தண்ணீர், பூக்கள், குங்குமம்,  அட்சதை, பழம், தூபம், விளக்கு ஆகியவற்றை கொண்உ பூஜை செய்து  நைவேத்யம்  செய்து தாயை வணங்க வேண்டும்.


  • இந்த நாளில், அன்னை துமாவதியின் கதையைச் சொல்வதும் கேட்பதும் மிகவும் நன்மை பயக்கும்.

  • ஒரு மனிதனின் பாவங்கள் அனைத்தும் தாய் தூமாவதியின் அருளால் நீங்கும்.


தூமாவதி அன்னையை வணங்கும் மந்திரம்:


ஓம் தூம் தூம் தூமாவத்யை படஹ
தூம் தூம் தூமாவதி டஹ டஹ
தூம்ரா மதிவ சதிவ பூர்ணாத் சா சாயுக்மே
சௌபாக்யதாத்ரி சதைவ கருணாமயீ.



மொழியாக்கம் : வித்யா கோபாலகிருஷ்ணன்