இது ஒரு புதிய நாள், ஒரு புதிய ஆரம்பம். புதிதாக வாழ்க்கையைத் தொடங்குவது பற்றியது. எனவே நீங்கள் ஒரு புதிய பயணத்தைத் தொடங்கும்போது, நட்சத்திரங்கள் உங்களுக்காக இன்று என்ன வைத்திருக்கின்றன என்பதைக் கண்டறிந்து செயலாற்றுவது அவசியம். பன்னிரண்டு ராசி அறிகுறிகள் உள்ளன, ஒவ்வொன்றும் அதன் தனித்துவமான அம்சத்தைக் கொண்டுள்ளன. மேஷம், ரிஷபன், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் - ஒவ்வொரு அறிகுறிகளிலும் சொல்ல தனித்துவமான ஒன்று உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷம்: நண்பகல் 12 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக்கொள்வது நல்லது. மாலைப் பொழுதிலிருந்து தடைகள் நீங்கும் நாள்.


ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். புது நட்பு மலரும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களால் உதவிகள் உண்டு. வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். நண்பகல் 12 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.


மிதுனம்: சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். உதவி கேட்டு வருபவர்களுக்கு உங்களாலானவற்றை செய்து கொடுப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் புது முயற்சியை மேலதிகாரி பாராட்டுவார்.


கடகம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், நட்பால் ஆதாயமும் உண்டாகும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.


சிம்மம்: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.


கன்னி: திடமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள்.


துலாம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர் கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகு முறையால் தீர்வு காண்பீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக்கிட்டும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். உற்சாகமான நாள்.


விருச்சிகம்: நண்பகல் 12 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் முன்கோபத்தை குறையுங்கள். திட்டமிடாத செலவினங்களை போராடி சமாளிப்பீர்கள். இரண்டாவது முயற்சியில் சில காரியங்கள் முடியும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் ஓரளவு
வேலைச்சுமை குறையும். மாலையிலிருந்து எதிர்ப்புகள் அடங்கும் நாள்.


தனுசு: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். உறவினர், நண்பர்களுடன் வீண் விவாதம் வந்துப் போகும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். நண்பகல் 12 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் நிதானித்து செயல்பட வேண்டிய நாள்.


மகரம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு இருக்கும் நம்பிக்கைக்குரியவரை கலந்தா லோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெருவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். சிறப்பான நாள்.


கும்பம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உங்களால் வளர்ச்சி யடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள்.


மீனம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். பிள்ளைகளின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் தருவீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.