'ஆள் பாதி ஆடை பாதி' என்ற பழமொழிக்கு ஏற்ப ஒரு மனிதனின் மதிப்பை அளவிடுவதில் அவனுடைய உடைகள் பெரும்பங்கு வகிக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சமூகத்தில் மதிப்பு வாய்ந்தவர்களாய் வலம் வருபவர்கள் பலர் நேர்த்தியாய் ஆடைகள் அணிந்து வருவதை நாம் பார்க்க முடிகிறது. தற்போது ஆடை என்பது நாகரீகத்தின் பிரதிபலிப்பாக மாறிவிட்டது. வெளி நாடுகளில் ஆடை என்பது அவர்களது சவுகரியம். நம் நாட்டில் உடைகள் நம்மை மதிப்பிட உதவுகிறது. அதற்காகத்தான் உயரிய துறையான மருத்துவர், ராணுவம், காவல்துறை போன்றவைகளுக்கு அரசே சீருடை வழங்கி, அவர்களை நம்மை அடையாளம் காண வைக்கிறது. ஆடை என்பது நமது அடையாளம். 


நாம் அனைவருக்கும் புதிய உடை என்றாலே ஒரு புத்துணர்ச்சி வந்துவிடும். பண்டிகை காலம் வந்துவிட்டால் பொதும் புது ஆடைகளின் மாயம் தான். நாம் புதிய உடைகள் அணிவதற்கு முன்பு அதில் மஞ்சள் தடவி இறைவன் முன்பு வைத்து வணங்கிய பின்னர் அணிவது வழக்கம். நாம் எதற்காக புதிய ஆடையில் மஞ்சள் தடவுகின்றோம் என்று உங்களுக்கு தெரியுமா?. அதை பற்றி பார்க்கலாம்...! 


புது ஆடைகளில் மஞ்சள் தடவுவது ஏன்.....! 


மஞ்சள்:- தீமைகளிலிருந்து நம்மைக் காப்பாற்றக்கூடிய ஆற்றல் உடையது. புதிய ஆடைகள் அணிந்திருக்கும்போது, எவரேனும் தவறான எண்ணங்களுடனும் பொறாமையுடனும் நம்மைப் பார்த்தார்களேயானால், இந்த மஞ்சளானது நம்மைக் காப்பாற்றும் என்பது நமது நம்பிக்கை. 


அது மட்டும் இல்லை, மஞ்சள் என்பது மங்களத்தின் அடையாளம். எனவே, ஒருவர் மஞ்சள் தடவிய ஆடையை உடுத்தியிருப்பார் ஆயின், அவர் ஏதேனும் மங்கள காரியத்தில் பங்கேற்றியிருப்பார் என்பதை நாம் அறியலாம். 


புத்தாடை என்பது கஞ்சி முதலானவையின் சம்பந்தம் உடையதனால், மஞ்சளை அதன் மேல் தடவுவதன் மூலம் அனைத்துவித தீயவையும் விலகி நன்மைகள் அடையக் காரணமாக அமைகின்றது.