புதுடில்லி: வீட்டின் மகிழ்ச்சிக்கு காரணம் பெண்களா ஆண்களா என்ற பட்டிமன்றம் வைத்தாலும், அது வெற்றி பெறுவது பெண்கள் அணியில் பேசியவர்களாக தான் இருக்கும். உண்மையில் இந்த விஷயம் அனைவராலும் ஒப்புக் கொள்ளக்கூடியதே. வீட்டின் நிம்மதி மற்றும் மகிழ்ச்சி, இல்லத்தை நன்றாக பராமரிப்பதையும் அடிப்படையாகக் கொண்டது. அனைவரின் மிகச்சிறிய தேவைகளையும், மிகப் பெரிய பொறுப்புகளையும் கவனித்துக்கொள்ளும் ஒரு பெண் நோய்வாய்ப்பட்டால், வாழ்க்கை தடுமாறிவிடும்.  வீட்டின் கண்களான பெண்களின் ஆரோக்கியத்தில் ஏற்படும் சுணக்கம், முழு வீட்டையும் புரட்டிப் போட்டுவிடுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 உறுப்பினர்களையும் பாதிக்கிறது. வீட்டின் பெண் உறுப்பினரின் உடல்நிலை மீண்டும் மீண்டும் மோசமடைகிறது அல்லது சிகிச்சையின் பின்னரும் அதிக ஓய்வு பெறவில்லை என்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வாஸ்து குறைபாடுகளை நீங்கள் கண்டறிந்து உடனடியாக அவற்றை அகற்ற வேண்டும்.


வீட்டில் பெண்களுக்கு அடிக்கடி உடல்நிலைக் கோளாறு ஏற்பட்டால் சிகிச்சை செய்வதுடன் வீட்டின் வாஸ்து குறைபாடுகளையும் கவனித்து சரி செய்ய வேண்டும். வீட்டில் சில வாஸ்து பிரச்சனைகள் ஏற்பட்டால், பெண்கள் அடிக்கடி நோய்வாய்ப்படும் சூழல் ஏற்படலாம். 


உங்கள் வீட்டிலோ அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவரின் வீட்டிலோ இதுபோன்ற ஏதாவது நடக்கிறது என்றால், அதற்கு காரணம் தெரிந்துக் கொள்ள வேண்டுமா? அதோ அதற்கான வழிகளை தெரிந்து கொண்டு அவற்றை களைந்து களிப்புடன் வாழுங்கள்.  


 Read Also | Health Insurance: இந்த மாதம் சுகாதாரக் காப்பீட்டில் சேர்க்கப்பட்ட முக்கியமான அம்சங்கள்


1. உங்கள் வீட்டின் வடகிழக்கு திசையில் கழிப்பறையோ அல்லது படிக்கட்டுகளோ இருந்தால், வீட்டின் தலைவி மட்டுமல்ல, பிற உறுப்பினர்களுக்கும் மன அழுத்தம் அல்லது பிரச்னைகள் ஏற்படலாம். வீட்டின் வடக்கு மூலை உயர்ந்தும், மற்ற எல்லா திசைகளும் அதைவிட தாழ்ந்தும் இருந்தால், வீட்டின் பெண் உறுப்பினர் கட நோயால் பாதிக்கப்படுகிறார். வடகிழக்கில் கழிப்பறைகள் கட்டப்படுவது மிகப் பெரிய வாஸ்து தோஷமாகக் கருதப்படுகிறது. வழிபாடு நடத்த வேண்டிய இடத்தில் கழிப்பறை கட்டுவதால், வீட்டின் பெண்கள் நோய்வாய்ப்படுவதோடு, குழந்தைகளின் மகிழ்ச்சியும், நிம்மதியும் போகிறது.  


2. வீட்டின் வடக்கு மற்றும் வடகிழக்கு திசை மூடி இருப்பதும், தெற்கு மற்றும் தென்மேற்கு திசையை வெட்ட வெளியாக விடுவதும் வாஸ்து குறைபாடாக கருதப்படுகிறது. இப்படி கட்டப்பட்ட வீட்டிற்குள் வசிப்பவர்களுக்கு நோய் ஏற்படுவதோடு, வீட்டில் அநாவசிய செலவுகளும் அதிகரிக்கும்.  


3. உங்கள் வீட்டின் தெற்கு திசையில் ஏதேனும் வாஸ்து தோஷம் இருந்தால், அது அங்கு வசிக்கும் பெண்களுக்கு உடல் சோர்வு மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.


4. ஒரு வீட்டின் தெற்குப் பகுதியில் கதவு இருப்பது அவ்வளவு சரியானதாக கருதப்படுவதில்லை. ஏனென்றால், தென் திசையில் வாசல் இருந்தால் பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்படும். தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணமும் ஏற்படுமாம்! தென்மேற்கு பகுதி பெரிதாக இருந்தால், பெண்களுக்கு அதிக வலி கொடுக்கும் பெரிய அளவிலான நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.


5. வீட்டின் பெண் உறுப்பினர்களுக்கு அடிக்கடி நோய் ஏற்பட்டால், சமையலறையில் வாஸ்து குறைபாடு ஏதும் இருக்கிறதா என்பதை சரிபாருங்கள். அடுப்பு வைத்திருக்கும் திசை, தானியங்கள், நீர் போன்றவை வைக்கப்பட்டிருக்கும் இடம் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். தென்கிழக்கு திசையில் அதாவது அக்னி மூலையில் அடுப்பு வைப்பது நல்லது   என்று கூறப்படுகிறது.


6. சமையலறையில் அடுப்பு இருக்கும் திசையில், தெற்கு திசையை நோக்கி பெண்கள் அமரக்கூடாது. அப்படிச் செய்தால் இடுப்பு வலி, முதுகுவலி, கர்ப்பப்பை பிரச்சனை, மூட்டு வலி போன்ற உடல்நலக் கோளாறுகள் ஏற்படலாம்.


7. வீட்டின் தெற்கு திசையில் போரிங் போடக்கூடாது. அதாவது நிலத்தடியில் இருந்து நீர் எடுக்கும் இயந்திரத்தையோ, அல்லது போர் குழாய்களையோ வைக்க வேண்டாம். அப்படிச் செய்வது, வீட்டில் உள்ள பெண்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும்.


8. வீட்டின் முன்புறம் உடைந்துபோய், பழுது பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அதை உடனடியாக செய்து விடுங்கள். இல்லையென்றால் வீட்டின் இல்லத்தரசியின் உடல்நிலை எப்போதும் மோசமாக இருக்கும்.  இந்த வாஸ்து குறைபாடுகள் பெண்களின் மனதில் தொடர்ந்து மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.    


Also Read | கொரோனா வைரஸ் கவலைகளுக்கு மத்தியில் ராணுவ அணிவகுப்பை நடத்தும் வடகொரியா


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR