இறைவனை வணங்குவது மனிதர்கள் மட்டுமா? விலங்குகள், பறவைகள் என பல்வேறு உயிரினங்களும் கடவுளை வணங்க்குகின்றன. இந்து மதத்தில் விலங்குகளும் பூஜிக்கத்தக்க பெருமை பெற்றுள்ளன என்றால், அவையும் வழிபாட்டில் மனிதர்களுக்கு எந்தவிதத்திலும் குறைந்தவை அல்ல.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எருது சிவபெருமானுக்கு வாகனமாக இருக்கிறது என்றால், பசு மாடோ சிவபெருமானை பூஜித்து பெருமை பெற்றுள்ளது. பசு மாடுகள்  சிவ பூசை செய்த தலங்கள் பற்றித் தெரியுமா?


கும்ப கோணம் அருகே பட்டீஸ்வரம்  தேனுபுரீஸ்வரர் கோயில்,  திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் ஆலயம், கோயம்புத்தூர் பேரூர் பட்டீஸ்வரம் பட்டீஸ்வரர் கோயில் ஆகியவை பசுக்கள் சிவனை துதித்து பாடல் பெற்ற தலங்கள். 


Also Read | ஏழுமலையானுக்கு 3.5 கிலோ பொன்னாலான சங்கு சக்கர காணிக்கை செலுத்திய தமிழக பக்தர்


இவற்றைத் தவிர,  சென்னை தாம்பரம் அருகே உள்ள மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயில், கரூர் ஆனிலை பசுபதீசுவரர் கோயில்,  ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோயில், 
விழுப்புரம் அருகே திருஆமாத்தூர் அழகிய நாதர் கோயில்  ஆகியவை பசு மாடு சிவ பூசை செய்த கோயில்களாகும்.  


பரா சக்தி பசு மாடாகி  சிவ பூசை செய்து ஈசனருளால் மீண்டும் பெண் ஆன புண்ணியத் தலம் திருவாவடுதுறை, கோகழி என்று பதிவாகியுள்ளது.  தேவலோகப் பசுவான காமதேனு சிவலிங்கத்தின் மேல் பால் சொரிந்து பூசித்த கோயில்கள் தேனுபுரீஸ்வரர் கோயில்கள் என அழைக்கப்படுகின்றன.    


தேவலோகப் பசு காமதேனுவின் மகள் (கன்று) பட்டி பூஜித்த கோயில் பேரூர் பட்டீஸ்வரம் பட்டீஸ்வரர் கோயில். காமதேனு, பட்டி இருவரும்  சேர்ந்து வந்து பூஜித்தது பட்டீஸ்வரம் தேனுபுரீசுவரர்  கோயில். 


பட்டியின் பெயரால் தலமும் காமதேனுவின் பெயரால் ஈசன் நாமமும் அமைந்தன.  பூஜை செய்த காமதேனுப் பசுவின் பெயரால் கரூர் பசுபதீஸ்வரர் கோயில் ஆனிலை என்றே பெயர் பெற்றது.  பல பசுக்கள் கூடி வந்து வழிபட்ட தலம் திரு ஆமாத்தூர். 


Also Read | இன்றைய பஞ்சாங்கம்: 2021 பிப்ரவரி 26ஆம் நாள், மாசி 14, வெள்ளிக்கிழமை


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR