Donation: ஏழுமலையானுக்கு 3.5 கிலோ பொன்னாலான சங்கு சக்கர காணிக்கை செலுத்திய தமிழக பக்தர்

உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலை  கோவிந்தனுக்கு தமிழகத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்திலான சங்கு-சக்ரத்தை  நன்கொடையாக வழங்கினார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 24, 2021, 10:34 PM IST
  • திருப்பதி ஏழுமலையானுக்கு 3.5 கிலோ பொன்னாலான சங்கு சக்கரம்
  • காணிக்கை செலுத்தினார் தமிழக பக்தர்
  • பக்தர் தங்கதுரை 50 ஆண்டுகளாக திருப்பதி பெருமாள் கோவிலுக்கு செல்பவர்
Donation: ஏழுமலையானுக்கு 3.5 கிலோ பொன்னாலான சங்கு சக்கர காணிக்கை செலுத்திய தமிழக பக்தர் title=

சென்னை: உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலை  கோவிந்தனுக்கு தமிழகத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்திலான சங்கு-சக்ரத்தை  நன்கொடையாக வழங்கினார்.

சென்னையில் தேனம்பேட்டைச் சேர்ந்த தங்கதுரை என்ற பக்தர், கடந்த 50 ஆண்டுகளாக திருப்பதி பெருமாளின் அணுக்க பக்தராக இருந்து வருகிறார். அவர் திருப்பதி தெய்வத்தை பூரணமாக நம்புவதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கோவிட் -19 தொற்றுநோய் தாக்கத்தினால் திருமலை கோவிலில் பக்தர்களுக்கான தரிசனம் நிறுத்தப்பட்டது. அப்போது, தங்கதுரைக்கும் கொரோனா ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

Also Read | Tirupati: திருமலையில் நடந்த முதல் திருமணம் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

அப்போது ஆரோக்கியத்தைக் கொடு ஆண்டவனே என்று மனமுருகி பிரார்த்தித்த தங்கதுரை, உடல்நலம் குணமானவுடன் திருமலை கோயிலுக்கு தங்கத்தினால் செய்யப்பட்ட சங்கு மற்றும் சக்கரத்தை காணிக்கையாக செலுத்துவதாக வேண்டிக் கொண்டாராம்.

தனது ஆரோக்கியத்தை மீட்டுக் கொடுத்த திருப்பதி கோவிந்தனுக்கு நன்றிக் கடனாக காணிக்கையை கொடுத்து வேண்டுதலை நிறைவேற்றியதாக தங்கதுரை கூறுகிறார். 

சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள 3.5 கிலோ தங்கம் கொண்ட சங்கு மற்றும் சக்கரத்தை பிப்ரவரி 24ஆம் தேதி புதன்கிழமை காலை மலை கோயிலுக்குள் உள்ள ரங்கநாயக்குலா மண்டபத்தில் திருமலை கோயில் அதிகாரியிடம் கொடுத்து தனது வேண்டுதலை நிறைவேற்றியிருக்கிறார் திருப்பதி ஏழுமலையானின் பக்தர் தங்கதுரை.

ALSO READ | வீட்டை அப்படியே வேறு இடத்திற்கு கொண்டு செல்ல முடியுமா.. ஆம் என்கிறார் Phil Joy..!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News