சூரிய உதயத்திற்கு முன் விழித்து எழுந்து நலமுடன் வாழ்ந்துவந்தனர் நம் முன்னோர்கள். ‘வைகறை யாமம் துயிலெழுந்து’ என துவங்கும் ஆசாரக்கோவை பாடலும், ‘வைகறை துயிலெழு’ என்ற ஆத்திச்சூடியும் அதிகாலையில் விழிப்பதன் அவசியத்தை உணர்த்துகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால், நாம் தற்போது அதிகாலையில் எழுவதற்கு அலாரம் வைத்து விட்டு அதை அணித்துவிட்டு மீண்டும் தூக்கும் பழக்கத்தை கடைபிடித்து வருகிறோம். அதனால் தான் நமக்கு நாமே பல்வேறு நோய்கள் உண்டாவதற்கு வழி அமைத்து கொள்கிறோம். 


அதிகாலை எழுவதால் நோய்களைப் போக்கும் மிகப்பெரிய அறிவியல் இருக்கிறது என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா?. ஆனால், அது முழுக்க முழுக்க உண்மை!.  


அதிகாலை எழுவது கடினம் தான். ஆனால், பழகிவிட்டால் கிடைக்கும் பலன்களோ ஏராளம்....! 


அதிகாலை வேலையில் எழுவது பல நன்மைகளைத் தரும் என்று சாஸ்திரங்களும், விஞ்ஞானமும் கூறுகின்றன. வைகறைப் பொழுதில் சூரியனிடம் இருந்து பூமியை வந்தடையும் ஒளிக்கதிர்கள் சக்தி வாய்ந்தவை. இவை நம் உடலில் படும்போது நரம்புகளுக்கு புதுத்தெம்பையும், உற்சாகத்தையும் கொடுக்கின்றன. 


கண்கள் ஆரோக்கியத்தையும், உடல் வலிமையையும் பெறுகின்றன. அதனால் தான், சூரிய நமஸ்காரம் செய்வது மிகச் சிறந்த வழிபாடு என்று நம் முன்னோர்கள் கூறினார்கள். 


சனிக்கிழமை அன்று அதிகாலை நேரத்தில் சனி பகவானுடைய கிரகண சக்தி பலம் பெற்றிருப்பதால், அன்றைய தினம் நல்லெண்ணெய் குளியல் செய்வது மிகவும் சிறப்புடையது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த அதிகாலை நேரத்தில் எழுவதால் உடல் சுறுசுறுப்படையும், ஆரோக்யமாக இருக்கும். மனஅழுத்தம் இல்லாமலும், பரபரப்பில்லாமலும் காரியங்கள் சிறப்பாக முடியும். உடலுக்கும், உள்ளத்துக்கும் ஊட்டம் தருவது காலையில் கண்விழிப்பதாகும். 


உஷத்காலம் உஷஸ் என்னும் பெண் தேவதையைப்பற்றி ரிக் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. இவள் தோன்றிய பின்பே சூரியன் உதயமாகிறான். இதனாலேயே விடியற்காலை நேரம் உஷத் காலம் எனப்படுகிறது. இந்த தேவதையின் செழிப்பான கிரணங்கள் விடியற்காலையில் பூமியை நோக்கிப்பாய்வதால்தான் அந்த வேளையில் நீரில் மூழ்கி நீராடுதல் விசேசமாக சொல்லப்படுகிறது. 


இதனால்தான் அதிகாலை நேரத்தில் நீரும் வெதுவெதுப்பாக காணப்படுகிறது. அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்று நம் சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. பிரம்ம முகூர்த்தம் என்பது அதிகாலை 3 மணி முதல் 5 மணிவரை.