புதுடில்லி: லாகூரில் சீக்கியர்களின் குருத்வாராவை ஆக்கிரமிக்க பாகிஸ்தான் ஒரு மோசமான சதிச்செயலை மேற்கொண்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு இந்தியா கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்த்தார்பூர் வழித்தடம் தொடர்பாக  சீக்கியர்களுடன் மோதல் போக்கை மேற்கொள்ள பாகிஸ்தான் செய்யும் முயற்சிகளில் இதுவும் ஒன்றா? 


உண்மையில், சிறுபான்மை சமூகங்களின் மத இடங்கள் பாகிஸ்தானில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா? என்ற பல கேள்விகளை பாகிஸ்தானின் இந்த செயல் எழுப்புகிறது.


லாகூரின் நெளலகா பஜாரில் உள்ள ஒரு பிரபலமான குருத்வாராவை மசூதியாக மாற்றும் பாகிஸ்தானின் முயற்சித்த செய்தி வெளியானதும், உடனடியாக இந்தியா பாகிஸ்தான் ஹைகமிஷனிடம் திங்கள்கிழமை கண்டனத்தை வெளியிட்டது.  இந்த தகவலை வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.


இது குறித்து பேசிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா, "பாகிஸ்தானின் லாகூரில் உள்ள நெளலகா பஜாரில் ’தாரு ஷாஹிஜியின் புனித இடமான குருத்வாரா தொடர்பாக வெளியான செய்திகள் திகைப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக பாகிஸ்தான் ஹைகமிஷனிடம் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த குருத்வாராவை ஒரு மசூதியாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன'' என்று தெரிவித்தார்.


இந்த சம்பவத்திற்கு இந்தியா தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளதாகவும், இந்த விவகாரம் குறித்து விசாரித்து உடனடியாக சரியான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாகிஸ்தானை கேட்டுக் கொண்டதாகவும் அவர் கூறினார்.


Read Also | முருகனின் கந்த சஷ்டி சர்ச்சையில் கருப்பர் கூட்டத்திற்கு தண்டனை கிடைக்குமா?


இது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஸ்ரீவஸ்தவா, "சிறுபான்மை சமூகத்தின் மக்களின் பாதுகாப்பு, அவர்களின் மத உரிமைகள் மற்றும் கலாச்சார பாரம்பரியங்களை பாதுகாக்கவும் பாகிஸ்தானிடம் கேட்டுக் கொண்டுள்ளோம்" என்று பதிலளித்தார்.


’குருத்வாரா ஷாஹீதி ஸ்தால் பாய் தரு ஜி என்பது சரித்திர பிரசித்தி பெற்ற குருத்வாரா ஆகும். அங்கு 1745 ஆம் ஆண்டில் தரு ஜி என்ற சீக்கிய மத குரு சமாதி ஆனார்.  


சீக்கிய சமூகத்தினர், குருத்வாராக்களை மிகவும் புனிதமானதாக கருதுகின்றனர். தற்போது குருத்வாராவை மசூதியாக முயற்சிக்கும் செயல் இந்தியாவில் மிகவும் தீவிர அக்கறையுடன் பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானில் சிறுபான்மை சீக்கிய சமூகத்திற்கு நீதி தேவை என்ற எண்ணம் வலுப்படுகிறது.