முருகனின் கந்த சஷ்டி சர்ச்சையில் கருப்பர் கூட்டத்திற்கு தண்டனை கிடைக்குமா?

முருகனின் கந்த சஷ்டி சர்ச்சையின் நிலை என்ன? கருப்பர் கூட்டத்திற்கு தண்டனை கிடைக்குமா? ஜெயலலிதாவின் இஷ்ட தெய்வம் முருகனா?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 28, 2020, 06:52 AM IST
முருகனின் கந்த சஷ்டி சர்ச்சையில் கருப்பர் கூட்டத்திற்கு தண்டனை கிடைக்குமா? title=

தமிழ் கடவுள் முருகனுக்கு உகந்தது செவ்வாய்க்கிழமை. வழக்கமாக செவ்வாயன்று முருகனின் ஆலயங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.  ஆனால் தற்போது கொரோனாவின் தாக்கத்தால் பக்தர்களால் நேரடியாக கோவில்களுக்கு செல்ல முடியவில்லை என்பது மிகப் பெரிய வருத்தமாக இருக்கிறது.

இந்த நிலையில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் விதமாக, முருகனின் கந்த சஷ்டி கவசத்தை பழித்து, கருப்பர் கூட்டம் எனும் யூடியூப் சேனலில் அண்மையில் பதிவிடப்பட்ட வீடியோ, மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 

இந்த விஷயம் தொடர்பாக பரவலான கண்டனங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கைதான சுரேந்திரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதனால் அவர் இன்னும் ஓராண்டுக்கு பிணை ஜாமீனில் வரமுடியாது.

இந்த நிலையில், மறைந்த முதவ்வர் ஜெயலலிதா முருகப்பெருமானை துதித்து பாடிய பக்தி பாடல் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Read Also | எல்லா மதமும் சம்மதமே.. கந்தனுக்கு அரோகரா - ரஜினி போட்ட திடீர் டிவீட்!

கந்த சஷ்டி கவசம் தொடர்பான சர்ச்சை தற்போது உச்சத்தில் இருக்கும் வேளையில், முருகப்பெருமானை துதித்து  நடிகையும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பாடிய பாடல் ஒன்று சமூகவலைதளங்களில் வைலராகி வருகிறது.

பல்வேறு திறமைகளைக் கொண்ட ஜெயலலிதா, தான் நடித்த திரைப்படங்களில் பாடல்களையும் பாடியுள்ளார். அதில் அவர் பக்தி பாடல்களையும் பாடியுள்ளார்.  அவர் பாடிய ''தங்க மயில் ஏறி வரும் எங்கள் வடிவேலவன்...'' என்ற முருகனை துதிக்கும் வரிகளைக் கொண்ட பாடல் அந்த காலத்தில் மிகவும் பிரபலமானது.  

Trending News