புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள அனைத்து பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களையும்  ஜூலை 6 முதல் திறப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தொல்பொருள் ஆய்வு மையம்  ஏ.எஸ்.ஐ, (Archaeological Survey of India (ASI))  முழு பாதுகாப்புடனும், முன்னெச்சரிக்கையுடன் பொதுமக்களின் பார்வைக்காக அனைத்து நினைவுச்சின்னங்களையும் மீண்டும் திறப்பதாக மத்திய கலாச்சார அமைச்சகம் வியாழக்கிழமையன்று தெரிவித்துள்ளது. நினைவுச்சின்னங்கள் அமைந்துள்ள மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களின் விதிகளை பின்பற்றி அவை திறக்கப்படும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நுழைவுச்சீட்டு விற்பனையானது ஆன்லைன் மூலமாக மட்டுமே இருக்கும், பார்வையாளர்களின் எண்ணிக்கைக்கு உச்சவரம்பு உண்டு. பார்வையாளர்கள் முகக்கவசங்கள் அணிவது கட்டாயம். இதைத்தவிர வேறுசில வழிகாட்டு நெறிமுறைகளும் அமல்படுத்தப்படும்


கொரோனா வைரஸ் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தின் பராமரிப்பில் உள்ள பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்பொருள் இடங்கள் மார்ச் 17ஆம் தேதி முதல் மூடப்பட்டன.


Also Read | Russia: அரசியல்சாசனத் திருத்தத்திற்கு மக்கள் அமோக ஆதரவு 2036 வரை புடின் அதிர்பராக நீடிக்கலாம்


நினைவுச்சின்னங்களை திறப்பதற்கான வழிகாட்டுதல்கள் பின்வருமாறு:


1. கட்டுப்பாடற்ற மண்டலத்தில் உள்ள நினைவுச்சின்னங்கள் / அருங்காட்சியகங்கள் மட்டுமே பார்வையாளர்களுக்காக திறக்கப்படும்.


2. அனைத்து பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களும் உள்துறை அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வழங்கிய நெறிமுறைகளை பின்பற்றியே திறக்கப்படும். மாநில மற்றும் / அல்லது மாவட்ட நிர்வாகத்தின் எந்தவொரு குறிப்பிட்ட உத்தரவுகளையும் போலவே MoC கண்டிப்பாக செயல்படுத்தப்படும்.


3. நுழைவுச் சீட்டுகள் ஆன்லைனில் மட்டுமே வழங்கப்படும். அடுத்த உத்தரவு வரும் வரை நேரடியாக நுழைவுச்சீட்டு வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.   


4. பார்க்கிங், சிற்றுண்டிச்சாலை போன்றவற்றில் டிஜிட்டல் கட்டணம் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.


5. தேர்ந்தெடுக்கப்பட்ட நினைவுச்சின்னங்களில் பார்வையாளர்களின் எண்ணிக்கைக்கு அதிகபட்ச வரம்பு நிர்ணயிக்கப்படும். 


Read Also | வித்யா பாலன், சோனாக்ஷி சின்ஹா, அலி ஃபசல் ஆகியோர் அளித்த நன்கொடை


6. பார்வையாளர்கள் சமூக தூரத்தை பின்பற்ற வேண்டும். முகத்தை மூடுவது / முகக்கவசங்கள் அணிவது கட்டாயமாகும். கைகளை சானிடைர் கொண்டு சுத்தப்படுத்துவது மற்றும் தெர்னக் ஸ்கேனிங் செய்யப்பட்டு, நோய் அறிகுறியற்ற நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.


7. நினைவுச்சின்னத்திற்குள் வருவதற்கும், வெளியே செல்வதற்கும் பிரத்யேக வழிகள் ஏற்பாடு செய்யப்படும்.  சமூக விலகல் விதிமுறைகளை பராமரித்து, ஒற்றை வரிசை கொண்ட ஒரு வழிப் பாதைகளே நினைவுச் சின்னங்களில் அனுமதிக்கப்படும். 


8. சில நினைவுச்சின்னங்களில் பாதுகாப்பு ஆபத்து ASI கருதும் சில பகுதிகளுக்கு செல்வதற்கு கட்டுப்பாடு விதிக்கலாம். 


9. பார்வையாளர்கள் நினைவுச்சின்னத்தின் கால வரையறைகளை கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டும். நினைவுச்சின்னத்திற்குள் எந்த நேரத்திலும் கூட்டமாகச் செல்லக்கூடாது.  இதை நினைவுச்சின்னத்திற்குள் இருக்கும் பாதுகாப்பு ஊழியர்கள் உறுதி செய்ய வேண்டும்.


10. நினைவுச்சின்னம் இருக்கும் வளாகத்திற்குள் குழு புகைப்படம் எடுப்பதற்கு அனுமதி கிடையாது.  


Also Read | 2011 World-cup cricket match fixing: இலங்கையில் விசாரணை தொடங்கியது


11. நினைவுச்சின்னங்களில் வழக்கமாக காண்பிக்கப்படும் sound and light shows அடுத்த அறிவிப்பு வரும் வரை நிறுத்தப்படுகிறது.


12. வாகனங்கள் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே நிறுத்தப்படும். பார்க்கிங் பகுதியை இயக்கும் ஒப்பந்தக்காரர் பார்க்கிங் கட்டணத்தை டிஜிட்டல் மூலமாக மட்டுமே வசூலிப்பார்.  நேரடியான பண பரிவர்த்தனைக்கு அனுமதி கிடையாது.  


13. செல்லுபடியாகும் உரிமம் கொண்ட வழிகாட்டிகள் மற்றும் புகைப்படம் எடுப்பவர்கள் (Guides and photographers) மட்டுமே வழிகாட்டுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.  அவர்கள் அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டியது அவசியம்.


14. உணவு மற்றும் தின்பண்டங்களை நினைவுச்சின்ன வளாகத்திற்குள் எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது.


15. நினைவுச்சின்னத்தின் உள்ளே இருக்கும் சிற்றுண்டிச்சாலை மற்றும் கியோஸ்க் (cafeteria and kiosk) ஆகியவை ஆன்லைனில் கட்டணம் பெற்றுக் கொண்டு தண்ணீர் பாட்டில்களை விற்பனை செய்யும்.  


Also Read | இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் கூட்டணியை வலுப்படுத்த இந்தியா நடவடிக்கை


16. நினைவுச்சின்னங்களின் அனைத்து ஊழியர்களும் சுகாதார நெறிமுறைகளை பின்பற்றி செயல்படுவது அவசியம் ஆகும்.


17. கழிப்பறைகள், பெஞ்சுகள் மற்றும் அடிக்கடி பயன்படுத்தப்படும் மேற்பரப்புகள் என நினைவுச்சின்னம் மற்றும் அருங்காட்சியகங்களை அடிக்கடி சானிடைசர் கொண்டு சுத்தம் செய்வதும், அவ்வப்போது சுத்தப்படுத்துவதும் உறுதி செய்யப்படவேண்டும்.  


ஒவ்வொரு நினைவுச்சின்னத்தின் அனைத்து பார்வையாளர்களும் தங்கள் தொலைபேசி எண்களை ASI பணியாளரும் பகிர்ந்து கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் தொடர்பு கொள்வதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.