வித்யா பாலன், சோனாக்ஷி சின்ஹா, அலி ஃபசல் ஆகியோர் அளித்த நன்கொடை

வித்யா பாலன், அலி ஃபஸல், தியா மிர்சா போன்ற பல பிரபலங்கள் கொரோன வாரியார்ஸ்களுக்கு 20,000 க்கும் மேற்பட்ட பிபிஇ (PPE) கிட்களை வழங்கினார்கள்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 2, 2020, 07:23 PM IST
வித்யா பாலன், சோனாக்ஷி சின்ஹா, அலி ஃபசல் ஆகியோர் அளித்த நன்கொடை title=

மும்பை: கொரோனா வைரஸ் நாட்டில் பேரழிவை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த பேரழிவில் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுகின்றனர். ஏற்கனவே, சோனு சூத் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த் இடங்களுக்கு செல்வதற்கு உதவியது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். 

அதேபோல், அரசுக்கு அக்‌ஷய் குமார் சுமார் 35 கோடி நன்கொடை அளித்தார். சல்மான் கானுடன் பல பிரபலங்களும் தினசரி கூலித் தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருட்களை கொடுத்து உதவினார்கள். தற்போது பாலிவுட் பிரபலங்களான வித்யா பாலன், தியா மிர்சா, அலி ஃபசல், சோனாக்ஷி சின்ஹா, வீர் தாஸ் என பலர் தாங்களும் உதவுவதில் பிந்தங்கியவர்கள் இல்லை என்பதை  நிரூபித்துள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள 50 மருத்துவமனைகளுக்கு 20,000 க்கும் மேற்பட்ட பிபிஇ கிட்களை நன்கொடையாக வழங்கியுள்ளனர். இந்த முயற்சியை நாட்டின் கொரோனா வாரியர்ஸிற்காக செய்துள்ளனர். சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ மூலம் இதை பகிர்ந்துக் கொண்டுள்ளனர். வித்யா, சோனாக்ஷி, அலி, தியா, கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஆகியோர் தங்கள் துறையைச் சேர்ந்தவர்களின் பிரதிநிதியாக செயல்படுகின்றனர். கொரோனா வாரியர்ஸ் அனைவருக்கும் இந்த வீடியோவில் அனைவரும் நன்றி கூறுகின்றனர்.

Also Read | கொரோனா: 100 வயதான மூதாட்டியின் உற்சாகம் கொடுக்கும் உத்வேகமும் நம்பிக்கையும்

மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள், Health Care அதிகாரிகள் தான் உண்மையான ஹீரோக்கள் என்று கதாநாயகர்களும், கதாநாயகிகளும் கூறுகின்றனர்.  மும்பையின் கே.இ.எம் (KEM) மருத்துவமனை, காமா மருத்துவமனை தவிர, டெல்லி, லக்னோ, பஞ்சாப், ஹரியானா என பல மாநில அரசு மருத்துவமனைகளுக்கும் இந்த பிபிஇ (PPE) கருவிகளை கொடுத்துள்ளனர்.  

கடந்த 100 நாட்களாக, நமது முன்னணி வீரர்கள் தங்கள் வாழ்க்கையையையும் உயிரையும் பணயம் வைத்து மக்களை காப்பதற்காக மருத்துவ உபகரணங்களை ஆயுதமாகக் கொண்டு கொரோனாவுக்கு எதிராக யுத்தகளத்தில் பணியாற்ரி வருகிறார்கள் என்றும் உலகமே அவர்களுக்கு கடமைப்பட்டிருப்பதாகவும் அதுல் கஸ்பேகர் தெரிவித்துள்ளார். திரையுலக கதாநாயகர்களும், கதாநாயகிகளும் நிஜவுலக ஹீரோக்களையும், ஹீரோயின்களையும் தலைவணங்குவது பொருத்தமானது தான்.

Trending News