இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் கூட்டணியை வலுப்படுத்த இந்தியா நடவடிக்கை

தென் சீனக் கடலில் ஆதிக்கம் செலுத்த நினைக்கும் சீனாவை எதிர் கொள்ள இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் கூட்டணியை வலுப்படுத்தும் பணியில் இந்தியா ஈடுபட்டுள்ளது.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Jul 2, 2020, 06:25 PM IST
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் கூட்டணியை வலுப்படுத்த இந்தியா நடவடிக்கை

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல் பாதுகாப்பிற்கான கூட்டணியை வலுப்படுத்தும் பணியில் இந்தியா ஈடுபட்டுள்ளது.

இந்த திட்டத்தின் விவரங்கள் இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை. ஆனால் தென் சீனக் கடலில் ஆதிக்கம் செலுத்த நினைக்கும் சீனாவின் பேராசையினால் பாதிக்கப்பட்ட நாடுகளையும் இணைத்து, இதற்கான முயற்சியில் கூடடணி அமைக்கலாம்.

இந்த கூட்டணி இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்த உதவுவதோடு மட்டுமல்லாமல், ஜப்பான், அமெரிக்கா, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவற்றைக் கொண்ட QUAD குழுவும் பலம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | மியான்மாரில் மாணிக்க கல் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 100 பேர் பலி..!!!

அட்லாண்டிக் அல்லது பசிபிக் பெருங்கடல் பகுதிக்கு மாற்றாக, மூன்றாவது பெரிய பெருங்கடலாக உள்ள இந்தியப் பெருங்கடல் இருக்கும்.  மலாக்கா ஜலசந்தி இதற்குள் நுழைய உதவும் வழியாக உள்ளது. மலாக்கா ஜலசந்திக்கு அருகே போர்க்கப்பல்களை நிறுத்துவதன் மூலம் இந்தியா தனது கடல் ஆதிக்கத்தை வலுப்படுத்தலாம். இது சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு கொடுக்கப்படும் வலுவான சமிக்ஞையாக இருக்கும்.

22 உறுப்பினர்களைக் கொண்ட வலுவான IORA- - இந்தியன் ஓஷன் ரிம் அசோசியேஷனில் இந்தியா தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த குழு, இந்தியப் பெருங்கடலுடன்  எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது. மேலும் பிராந்தியத்தில் சீனக் கப்பல்கள்  சட்டவிரோதமாக மீன் பிடிப்பது குறித்து இந்த குழு குரல் கொடுத்து வருகிறது.

இந்தியா ( India) சீனாவால்(China) பாதிக்கப்பட்ட மற்ற நாடுகளையும் இதில் ஈடுபடுத்த முயல்கிறது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான விரிவான மூலோபாய கூட்டாண்மையில் இந்திய கடலில் ஜப்பானியர்களுடன் இணைந்து கடல் பயிற்சிமேற்கொள்ளப்படும் என அறிவித்தது.

மேலும் படிக்க | சீனா தொடர்பாக Zee News நடத்தும் மிக பெரிய கருத்துக் கணிப்பில் பங்கேற்கும் வாய்ப்பு..!!!

ஜூன் 15ம் தேதி இந்தியா மற்றும் சீனா இடையில் LAC பகுதியில் நடந்த வன்முறை மோதலில், 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்த சம்பவத்திற்கு பிறகு, இந்தியா சீனாவை  நம்பும் மனநிலையில் இல்லை. இந்த கட்டத்தில் எந்தவொரு பின்வாங்கலும் பலவீனத்தின் அடையாளமாக எடுத்துக் கொள்ளப்படும் என்றும், இது பிரித்தாளும் சூழ்ச்சியை, அதாவது salami-slicing என்னும் உத்தியை பயன்படுத்த ஊக்குவிக்கும். salami-slicing உத்தி என்பது எதிரி நாட்டிற்குள் தனக்கென நண்பர்களை உருவாக்கி பிரச்சனையை அதிகரிக்கும் உத்தியாகும். சீனா நேரிடி போரில் வெற்ற பெற முடியாது என நினைப்பதால், அது எந்த நிலைக்கு இறங்கி செயல்படும் என்பது உலகம் அறிந்த விஷயம். எனவே, சீனா பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொள்ள மேலும் தைரியம் அளிக்கும் என நம்பப்படுகிறது.

கால்வான் பள்ளத்தாக்கை (Galwan valley) சீனா சொந்தம் கொண்டாட நினைப்பது சந்தேகத்தை அதிகரித்துள்ளது. இருபுறமும் உள்ள மலை உச்சிகள், லடாக்கின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும் முக்கியமான டார்புக்-ஷியோக்-தவுலத் பேக் ஓல்டி (DSDBO) சாலை இந்தியாவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும்.