பூரி ஜகநாதர் ஆலயத்துக்குள் காலணி, துப்பாக்கியுடன் போலீசார் நுழைய சுப்ரீம் கோர்ட் தடை


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி ஜெகன்நாதர் ஆலயத்துக்குள் காலணி மற்றும் துப்பாக்கிகளுடன் போலீசார் நுழைய சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. 


ஒடிசா மாநிலத்தில், பூரி கடற்கரை நகரத்தில் அமைந்த வைணவத் திருக்கோயில் ஆகும். இக்கோயில் ஜெகன்நாதர், பாலபத்திரர் மற்றும் சுபத்திரைக்கு அர்பணிக்கப்பட்ட கோயிலாகும். முகம் மற்றும் கைகள் மட்டுமே காணும் வகையில் அமைந்த இக்கோயிலின் மூலவர்களான ஜெகன்நாதர், பாலபத்திரர் மற்றும் சுபத்திரையின் திருமேனிகள் மரத்தால் ஆனவை. இக்கோயில் 12ம் நூற்றாண்டில் கீழைக் கங்கர் குல அரசன் ஆனந்தவர்மன் சோடகங்கனால் கட்டப்பட்டது.


சமீபத்தில் இந்த ஆலயத்துக்கு தரிசனம் செய்யவரும் பக்தர்களுக்கு புதிய வரிசை முறையை உருவாக்க நிர்வாகம் தீர்மானித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 3-ம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்தினர். 


ஆரம்பத்தில் அமைதியாக நடைபெற்ற இந்த போராட்டம் பின்னர் வன்முறையாக மாறி பூரி ஜகநாதர் ஆலயத்துக்குள் நுழைத்து நிர்வாக அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தினர். இந்த வன்முறைய கட்டுப்படுத்த போலீசார் உள்ளே நுழைந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தி 47 பேரை கைது செய்தனர்.


இந்த சம்பவத்தின்போது போலீசார் துப்பாக்கிகளுடனும், காலணிகளுடனும் உள்ளே நுழைந்ததால் பூரி ஜகநாதர் ஆலயத்தின் புனிதம் மாசுபட்டதாக ஒரு அமைப்பின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.


அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பூரி ஜகநாதர் ஆலயத்துக்குள் காலணி மற்றும் துப்பாக்கிகளுடன் போலீசார் நுழைய கூடாது என உத்தரவிட்டனர்.