இந்துக்களின் பெரும்பாலான கோவில்கள் சேதமடைந்துள்ளன, Pakistan ஆணையம் சாடல்
பாகிஸ்தானில் உள்ள பெரும்பாலான இந்து கோவில்கள் மோசமான நிலையில் உள்ளதாக பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற ஆணையம் சாடுகிறது.
புதுடெல்லி: பாகிஸ்தானில் உள்ள பெரும்பாலான இந்து கோவில்கள் மோசமான நிலையில் உள்ளதாக பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற ஆணையம் சாடுகிறது.
சமீபத்தில் பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை ஒன்றில், நாடு முழுவதும் உள்ள இந்து புனித தலங்களில் பெரும்பாலானவை சிதைந்த நிலையில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
டாக்டர் ஷோயிப் சுடில் தலைமையிலான ஒரு நபர் கமிஷனின் ஏழாவது அறிக்கை பாகிஸ்தான் பிப்ரவரி ஐந்தாம் தேதி சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கை, பாகிஸ்தானில் உள்ள மிகவும் மதிப்பிற்குரிய இந்து புனிதத் தளங்களின் மோசமான நிலைமையை சித்தரிப்பதாக அமைந்துள்ளது.
Also Read | Mysterious: துருக்கியில் தோன்றிய மர்ம உலோக ஒற்றைப்பாளம்
சிறுபான்மையினர் உரிமைகள் தொடர்பான தீர்ப்பை அமல்படுத்துவதை மேற்பார்வையிடுவதற்காக டாக்டர் ஷோயிப் சுடில் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தை 2019ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் அமைத்தது.
"சிறுபான்மை இந்து சமூகத்தின் பண்டைய மற்றும் புனித தளங்களை பராமரிக்க, Evacuee அறக்கட்டளை சொத்து வாரியம் (Evacuee Trust Property Board (ETPB)) தவறிவிட்டது" என்றுஅந்த அறிக்கையில் வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள சில முக்கிய இந்து கோவில்கள் இவை: ஸ்ரீ ஹிங்லாஜ் மாதா கோயில் (பலூசிஸ்தான்), ஸ்ரீ ராம்தேவ் பிர் கோயில் (சிந்து), உமார்கோட் சிவ் மந்திர் (சிந்து) மற்றும் சுரியோ ஜபல் துர்கா மாதா கோயில் (சிந்து).
Also Read | குருத்வாராவை மசூதியாக மாற்ற பாகிஸ்தான் சதி... இந்தியா கண்டனம்
கடந்த ஆண்டு டிசம்பரில், கைபர் பக்துன்க்வாவின் கரக் மாவட்டத்தில் உள்ள டெர்ரி கிராமத்தில் உள்ள ஆலயம் ஒன்றை ஜாமியத் உலமா-இ-இஸ்லாம் கட்சியின் ஃபசல் உர் ரஹ்மான் குழுவைச் சேர்ந்த (Jamiat Ulema-e-Islam party) உறுப்பினர்கள் எரித்தனர்.
கோயில் மீதான தாக்குதலுக்கு மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சிறுபான்மை இந்து சமூகத் தலைவர்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர். அதையடுத்து, இந்து ஆலயத்தை புனரமைக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.
ஜனவரி 5 ம் தேதி உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் " Evacuee அறக்கட்டளை சொத்து வாரியத்தின் எல்லைக்குட்பட்ட பாகிஸ்தான் முழுவதிலும் உள்ள அனைத்து கோயில்கள், குருத்வாராக்கள் மற்றும் பிற மத தளங்கள் பற்றிய விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்" என்று அந்த அறக்கட்டளை வாரியத்திற்கு அறிவுறுத்தப்பட்டது.
ETPB கொடுத்த பதிலின்படி, பாகிஸ்தானில் இருக்கும் 365 கோயில்களில் 13 மட்டுமே வாரியத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன, 65 ஆலயங்களின் பொறுப்பு இந்து சமூகத்திடம் இருக்கிறது. மீதமுள்ள 287 கோயில்கள் நில மாஃபியாக்கள் ஆக்கிரமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் 90 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்துக்கள் வாழ்கின்றனர். பாகிஸ்தானின் பெரும்பான்மையான இந்து மக்கள் சிந்து மாகாணத்தில் குடியேறினார்கள். அங்கு அவர்கள் முஸ்லிம் குடியிருப்பாளர்களுடன் கலாச்சாரம், மரபுகள் மற்றும் மொழி ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.
அவர்கள் தீவிரவாதிகளால் துன்புறுத்தப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுகின்றன.
Also Read | பண்டைய இந்து கோவிலான சாரதா பீடத்திற்கு செல்ல பாகிஸ்தான் ஏன் அனுமதிப்பதில்லை?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR