தென்கிழக்கு துருக்கியில் மர்ம ஒற்றைப் பாளம் ஒன்று மர்மமான முறையில் தோன்றியுள்ளது. இது உலோகத்தால் ஆனது. அதிலும் உலக பாரம்பரிய தளத்திற்கு (world heritage site) அருகில் இந்த பாளம் தோன்றியிருப்பதால், இதற்கு முன் இது அங்கே இல்லை என்பது நூறு சதவிகிதம் தெளிவாகிறது. அது எப்படி தோன்றியது என்று அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
3 மீட்டர் உயரமுள்ள (சுமார் 10 அடி) ஒற்றைக்கல், கோபெக்லி டெப் (Gobekli Tepe) என்ற யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்திற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஒற்றைப் பாளமானது, கற்காலத்திற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு கிமு 10 மில்லினியம் வரையிலான மெகாலிதிக் (megalithic) கட்டமைப்புகளைக் கொண்டுள்ளது. சான்லியுர்பா மாகாணத்தில் (Sanliurfa province) ஒரு விவசாயி இந்த உலோகத் தொகுதி ஒன்று உருவாகியிருப்பதை பிப்ரவரி ஐந்தாம் தேதியன்று கண்டுபிடித்தார்.
சி.சி.டி.வி காட்சிகள் கொண்டு அந்த பகுதி மூழுவதும் ஆராயப்பட்டது. பொருட்களை கொண்டு சென்ற வாகனங்கள் ஏதாவது இந்த கட்டமைப்பை அங்கே எடுத்து சென்றிருக்குமோ என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது.
Also Read | Utah பாலைவனத்திலிருந்து மறைந்த மர்மமான உலோக ஒற்றைப் பாளம்
"நீங்கள் சந்திரனைப் பார்க்க விரும்பினால், வானத்தைப் பாருங்கள்" என்ற வார்த்தைகள் இந்த ஒற்றை பாளத்தில் பொறிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
கடந்த ஆண்டு அமெரிக்காவின் உட்டாவில் ஒரு பாலைவனத்தில் தோன்றிய ஒரு மர்மமான பொருளை ஒத்திருக்கும் ஒற்றைப் பகுதியைப் பார்க்க ஆர்வமுள்ள உள்ளூர்வாசிகள் வந்து குவிகின்றனர். இதனையடுத்து பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஆச்சரியமூட்டும் விதமாக, அந்த மர்ம ஒற்றைப் பாளம் திடீரென மறைந்துவிட்டது. அண்மை நாட்களில் திடீரென இதுபோன்ற மர்மமான ஒற்றைப்பாளங்கள் உலகின் பல பகுதிகளில் தோன்றுகின்றன. அவை திடீரென காணமலும் போய்விடுகின்றன. இந்த மர்ம பாளங்கள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகிறது.
Also Read | கோவில்களில் ஏன் விக்கிரகங்களை கற்சிலைகளாக அமைக்கிறார்கள்?
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR