பண்டைய இந்து கோவிலான சாரதா பீடத்திற்கு செல்ல பாகிஸ்தான் ஏன் அனுமதிப்பதில்லை?

இந்திய-பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் இருந்து 10 கி.மீ தொலைவில் பாகிஸ்தானுக்குள் அமைந்துள்ளது அன்னை சாராதாவின் கோவில். சாரதா பீடம் இந்துக்கள் அனைவராலும் மிகவும் புனிதமான தலமாக வணங்கப்படுவது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Oct 27, 2020, 06:48 PM IST
  • சாரதா பீடம் 51 சக்தி பீடங்களில் ஒன்று.
  • காஷ்மீர பண்டிதர்கள் அதிகம் வாழ்ந்த பகுதி இது.
  • இந்து சமய வேதங்கள் பயிற்றுவிக்கப்படும் மையமாக விளங்கியது சாரதா பீடம்.
  • கோயில் மூலவரான சாரதா தேவியின் உருவம் சந்தன மரத்தினால் செய்யப்பட்டது.
பண்டைய இந்து கோவிலான சாரதா பீடத்திற்கு செல்ல பாகிஸ்தான் ஏன் அனுமதிப்பதில்லை? title=

இந்திய-பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் இருந்து 10 கி.மீ தொலைவில் பாகிஸ்தானுக்குள் அமைந்துள்ளது அன்னை சாராதாவின் கோவில். சாரதா பீடம் இந்துக்கள் அனைவராலும் மிகவும் புனிதமான தலமாக வணங்கப்படுவது.
பண்டைய கோயிலுக்கு ஆன்மீக யாத்திரை செய்ய அனுமதிக்க வேண்டும் என பலத்த கோரிக்கைகள் ஏற்கனவே எழுந்துள்ளன.

கர்தார்பூர் சாஹிப் குருத்வாரா செல்வதற்கான திறக்கப்பட்டது இந்துக்களுக்கு ஒரு நம்பிக்கைக் கீற்றை கொடுத்துள்ளது. இந்திய இந்துக்களுக்காக பாகிஸ்தான் அரசாங்கத்தால் மூடப்பட்டிருக்கும் சாரதா பீடத்தின் கதவுகள் திறக்க வேண்டும் என்ற இயக்கம் தீவிரமடைந்துள்ளது. 
முன்னதாக 2018 ஆம் ஆண்டில் கர்தாபூர் சாஹிப் குருத்வாராவுக்கு செல்லும் நடைபாதை திறந்து வைக்கப்பட்ட பின்னர் சாரதா பீடத்திற்கான யாத்திரைக்கான அனுமதியும் கொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்திய ஊடகவியலாளர்களுக்கு உறுதியளித்திருந்தார், ஆனால் அவர் அளித்த வாக்குறுதியை ஒருபோதும் நிறைவேற்றவில்லை.சாரதா பீடம் 51 சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. காஷ்மீர பண்டிதர்கள் அதிகம் வாழ்ந்த இப்பகுதியில் இந்து சமய வேதங்கள் பயிற்றுவிக்கப்படும் மையமாக விளங்கியது
சாரதா பீடத்தின் சரசுவதி கோயிலின் நீளம் 142 அடியாகவும், அகலம் 94.6 அடியாகவுவும் இருந்தது. மேலும் 88 அடி உயர தோரண வாயிலும் அமைந்திருந்தது. கோயில் மூலவரான சாரதா தேவியின் உருவம் சந்தன மரத்தினால் செய்யப்பட்டது.
சாரதா பீடம் 51 சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. காஷ்மீர பண்டிதர்கள் அதிகம் வாழ்ந்த இப்பகுதியில் இந்து சமய வேதங்கள் பயிற்றுவிக்கப்படும் மையமாக விளங்கியது.
51 சக்தி பீடங்களில் ஒன்றான சாரதா பீடத்திற்கு செல்வதற்கான அனுமதி வேண்டும் என்று கோரும் இயக்கத்தை உயிரோடு வைத்திருக்க Save Sharda Committee Kashmir (SSCK) என்ற அமைப்பு இந்தியாவின் பல்வேறு தளங்களில் இந்த பிரச்சினையை எடுத்துச் சென்றுள்ளது. அதுமட்டுமல்ல, இந்த பிரச்சனை ஐக்கிய நாடுகள் சபையிலும் எழுப்பப்பட்டுள்ளது.  
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் நீலம் மாவட்டத்தில் அமைந்துள்ள சாரதா பீடம் ஆலயத்தை மீண்டும் திறப்பதற்காகவே போராட்டம் நடத்தப்படுவதாக SSCK தலைவர் ரவீந்தர் பண்டிதா கூறுகிறார்.

"காஷ்மீர் பிளவுபட்டிருப்பதால் எழுந்த சிக்கல்களில் இதுவும் ஒன்று. கடந்த 70 ஆண்டுகளாக இந்துக்களின் மிகவும் முக்கியமான மத தலத்திற்கு செல்ல முடியவில்லை. எங்கள் துறவி சுவாமி நந்த் லால் (saint Swami Nand Lal) 1948 வரை இந்த மடத்தின் தலைவராக இருந்தார்”என்று ரவீந்திர பண்டிதா கூறினார்.

கர்தார்பூர் சாஹிப் குருத்வாராவுக்கு அண்மையில் சென்றிருந்த ரவீந்திர பண்டிதா,  சீக்கிய ஆலயத்திற்கு விஜயம் செய்தது வழிபாடு செய்வதற்காக மட்டுமல்லாமல், இந்த திட்டம்  எவ்வாறு செயல்படுகிறது என்பதையும், மக்களை எவ்வாறு தொடர்பு கொள்ள ஊக்குவிக்கிறது என்பதையும் நேரடியாக கண்டறிந்தார். 
கர்தார்பூர் திட்டத்தை முன்மாதிரியாக வைத்து, சாரதா பீடத்திற்கும் இந்துக்கள் சென்று வர ஒரு நல்ல வழியை ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.  

சாரதா பீடத்தை திறப்பதால் எந்தவொரு அரசாங்கத்திற்கும் நிதிச் சுமை ஏற்படாது என்று அவர் விளக்கினார். "இந்திய-பாகிஸ்தான் சர்வதேச எல்லையின் இருபுறமும் கர்த்தார்பூர் நடைபாதையை நிர்மாணிக்க இரு அரசாங்கங்களும் பெரும் தொகையை செலவிட்டன, ஆனால் சாரதா பீடத்திற்கான நடைபாதை திறக்க ஜம்மு-காஷ்மீரில் எந்தவொரு பெரிய உள்கட்டமைப்பையும் உருவாக்க வேண்டிய அவசியமில்லை. பூஞ்ச் முதல் ராவலகோட் மற்றும் ஸ்ரீநகர் முதல் முசாபராபாத் வரை இரண்டு பேருந்து சேவைகள் இருந்தால் போதும்”.

"அவர்கள் செய்ய வேண்டியது வெறும் ஆவண நடைமுறைகள் மட்டுமே. சாரதா பீடத்திற்கு செல்வதற்கு LoC-ஐ தாண்டுவதற்கான அனுமதியை (cross LoC permits) கொடுத்தால் போதும்.  யாத்திரை மேற்கொள்ள இந்துக்களை அனுமதிப்பதன் மூலம் இரு தரப்பினருக்கும் நன்மையே ஏற்படும்” என்று ரவீந்திரா கூறுகிறார்.

ஆண்டுதோறும் சாரதா பீடத்திற்கு யாத்திரை மேற்கொள்ளும் வகையில் இந்திய இந்துக்கள் கட்டுப்பாட்டு அனுமதி விதிகளில் திருத்தம் செய்யக் கோரி வருகின்றனர். "நாங்கள் சமீபத்தில் வெளிவிவகார மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் முரளிதரனிடம் வேண்டுகோளை சமர்ப்பித்துள்ளோம், மேலும் இந்த விஷயத்தை பாகிஸ்தானிடம்  எடுத்துக் செல்லும்படி கேட்டுக்கொண்டோம்" என்று Save Sharda Committee Kashmir (SSCK)
நிறுவனர் உறுப்பினர் ரவீந்திர பண்டிட் தெரிவித்தார்.

குறிப்பாக, 1948 வரை சாரதா பீடத்தில் மத சடங்குகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தன. இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் சாராதா பீடம் அமைந்த பகுதியை பாகிஸ்தான் நாட்டு பஷ்தூன் பழங்குடி மக்கள் கைப்பற்றி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இணைத்தனர். மடத்தின் தலைவர் சுவாமி நந்த் லால் சன்னதியை நிர்வகிக்க, ஜம்மு-காஷ்மீரில் உள்ள குப்வாராவுக்கு குடிபெயர்ந்தார்.

சாரதா பீடம் தொடர்பான பிரச்சினை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளருக்கும் கடிதம் எழுதியுள்ளதாக கூறும் ரவீந்திர பண்டிட், இந்தியாவைச் சேர்ந்த இந்துக்கள் எந்தவிதமான இடையூறும் இல்லாமல் சாரதா பீடத்திற்க்கு சென்று அன்னையை வணங்கி பூசைகளையும், சடங்குகளையும் செய்யக்கூடிய நாள் விரைவில் வரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News